மட் /பட் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் 18 வயதுப்பிரிவின் பெண்கள் பூப்பந்தாட்ட போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசியத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியானது திருகோணமலை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. மேலும் இம் மாணவர்கள் கடந்த வருடம் (2022) மாகாண மட்டத்தில் பூப்பந்தாட்டம் மற்றும் கூடைப்பந்தாட்ட த்தில் முதல் இடத்தை சுவீகரித்தது சிறப்பம்சம்.மேலும் இவ் விளையாட்டிகளில் பங்கு கொண்ட மாணவர்கள் மற்றும் திறம்பட பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர், பயிற்றுவிப்பாளர் போன்றோருக்கு அதிபர் , ஆசிரியர்கள் உட்பட குருக்கள்மடம் பழைய மாணவர் சங்கம், கிராமத்தின் முக்கியஸ்தர்கள் என பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
0 comments: