கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் உள்ள முன்னணிப் பாடசாலை மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றி இருந்தனர். ஆனால் இப்போட்டியில் 13 வயதிற்குட்பட்ட கடினபந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மட்/ சிவாநந்த வித்தியாலயம் வெற்றியீட்டி கிண்ணத்தை வென்றது
அம்பாறையில் டிப்பர் வாகனத்தின் மூலம் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை, வீரச்சோலை, வழுக்கமடு பகுதியில் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்போது சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
இந்துக்களில் பெரும்பாலானோர் ராசிபலன் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் தமது காரியங்களை ஆரம்பிக்கும் முன்னர் ராசிபலனை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நாளை மறுதினம் 2020ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இவ்வாறான நிலையில் இன்று ஆரம்பமாகியுள்ள இந்த வாரம் எவ்வாறான அதிஷ்டங்களை எந்த ராசியினருக்கு அள்ளித்தர போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றுள்ளார்.
இன்று இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது வட மாகாண ஆளுநர் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில், சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வந்த பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண ஆளுநராக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிந்தவூர் பிரதேச சபை கட்டிடம் அமைந்துள்ள வீதியினூடாக சென்று வீரக்காடு வரை செல்லும் விவசாயிகளின் நன்மை கருதி அமைக்கப்பட்ட புதிய வீதி கடந்த ஓரிரு தினங்களுக்குள் ஆற்று மண்ணை களவாக ஏற்றிச் செல்லும் டிப்பர் வாகனங்களால் பெரும் சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கிறவல் ஆற்றில் மண் ஏற்றுபவர்களால் ஆறு மேலும் ஆழமாக்கப்படுவதுடன் அறுவடை காலங்களில் வயல் நிலங்களுக்கு உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலமையொன்று தோன்றலாம்.
எனவே நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும் விவசாய திணைக்கள அதிகாரிகளும் ஆரம்பத்திலேயே இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் வீதியினை சேதமாக்கிய டிப்பர் உரிமையாளரைக் கொண்டே வீதியினை செப்பனிடச் செய்யுமாறும் பிரதேச விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றளர்.இந்த வீதியினூடாக நிந்தவுர் , சாய்ந்தமருது , கல்முனை , மாளிகைக்காடு , சம்மாந்துறை மற்றும் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினசரி பயணம் செய்கின்றனர்.
#மருத்தவபீடம் தெரிவு 03 பேர் இத்துறையில் 28 பேர் உயிரியல் தொடர்பான துறை!!
#பொறியியல் துறை 03 பேர்
#தொழில்நுட்ப பிரிவில் 03 பேர்
#வணிகம் 18 பேர்
#கலைப்பிரிவு 20 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்!!!!!!
மொத்தமாக பல்கலைக்கழக அனுமதி பெற்றோர் 75 கான காணப்படுகிறது!!!!
#இவ்வெற்றியினை ஈட்டித்தந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஏனையோர்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம் !!!!!!
மட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்தவரும் மட்டு நகரில் வதிபவருமான ரவிச்சந்திரன் யதுசன் மருத்துவத்துறையில் (புதிய பாடத்திட்டம்) மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு லங்கா தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் ராஜித சேனாரத்னவின் உயிரை பழிவாங்க முயற்சித்து வருகிறது. ராஜித சேனாரத்ன இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை செய்துக்கொண்டவர் என்பது உங்களுக்கு தெரியும். நோயாளியாகவே இந்த மருத்துமனைக்கு வந்தார். அவரது உயிரை பழிவாங்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அதுதான் தற்போது நடக்கின்றது.
எந்த மருத்துமனையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என வழக்கு விசாரணையின் போது நீதவான் தெளிவுப்படுத்தினார். விசேட மருத்துவ நிபுணர் முபாரக் அவர்களுக்கு விசேட நன்றி கூறுகிறேன். அவர் மிகவும் திறமையான மருத்துவர். இந்த மருத்துவரே ராஜித சேனாரத்னவுடன் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
மருத்துவர் முபாரக்கின் மருத்துவ ஆலோசனையின்படியே சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அவரை இங்கிருந்து அழைத்துச் சென்று அரச மருத்துவ அதிகாரிகளின் பிடியில் கொடுக்க போகின்றனரோ என்ற சந்தேகம் உள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருந்து மாஃபியா, புகையிலை மாஃபியா போன்ற தரப்பினருக்கு ராஜித சேனாரத்னவின் உயிரை பழிவாங்கும் தேவையுள்ளது. இதனால், இவ்வாறு கீழ்த்தரமாகவும் மோசமாகவும் ராஜித சேனாரத்னவின் உயிரை பழிவாங்க தயாராக வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு கூறி வைக்க விரும்புகிறோம்.
அவரது உயிர் சம்பந்தமாகவும் மிகவும் பயங்கரமான ஆபத்து ஏற்பட்டுள்ளது. இப்படியான இடத்திற்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்கள், அதிகாரிகளுக்கு அனைத்து அழுத்தங்களையும் கொடுத்து, இருதய நோயினால் பாதிக்கப்பட்ட அவரை பழிவாங்க நினைக்கின்றது. இது மிகவும் மோசமான நிலைமை. அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.
அதேபோல் எதிர்ப்பை வெளியிட எங்களுடன் இணையுமாறு அனைத்து மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். வீதியில் இறங்கி எதிர்ப்பை வெளியிட நாங்கள் தயாராக இருக்கின்றோம். எதிர்க்கட்சியில் உள்ள அனைவரையும் இணைத்துக்கொண்டு இந்த அடக்குமுறைக்கு எதிராக போராட விரும்புகிறோம். ராஜித சேனாரத்னவை கண்டு ஏன் இந்தளவு அஞ்சுகின்றனர்.
அவரது உயிரை பழிவாங்க முயற்சிக்கின்றனர். இப்படியான மோசமான வேலைகளுக்கு தயாராக வேண்டாம் என மனிதாபிமானத்தின் பெயரில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றார். சிகிச்சையளிக்கும் மருத்துவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. சிலர் ஊடகங்களுக்கு முன்னால் வந்த மருத்துவர் முபாரக்கிற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இது மோசமான நடவடிக்கை. நாட்டில் மருத்துவர்கள் மருத்துவ தொழிலை செய்ய சுதந்திரமில்லையா?. என்ன செய்ய போகின்றனர்.
இவ்வாறான நிலைமை நாடு ஏன் சென்றது. அறிவுடன் சிந்திக்குமாறு மக்களிடம் கோருகின்றோம் இப்படியான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம். ஊடகங்களும் இந்த தவறுகளை செய்தியாக வெளியிட வேண்டும். ராஜித சேனாரத்னவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவே தயாராகி வருகின்றனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகவே இருந்து வந்தனர். இதனால், இது மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதியா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
நான் இன்று ஒரு வழக்கறிஞராக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, ஒரு மாவட்ட ஒருங்ணைப்புக் குழுத்தலைவியாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் கற்ற கல்விதான் என்பதை ஆணித்தரமாக கூறுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
நேற்று காரைதீவில் நாடிப்பெற்ற புலமையாளர் கௌரவிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
நானும் சிறுவயதில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதேபோல் எனது மகளும் கடந்த 2015இல் சித்திபெற்ற போது அவரை விட எனக்குச் சந்தோசமாகவிருந்தது.
அதேபோன்று இங்கு வந்துள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இந்த மேடையில் பாராட்டப்படும் போது எவ்வளவு சந்தோசமடைவீர்கள் என்பதை நானறிவேன், வாழ்த்துக்கள்.
கல்விதான் எமக்கு முக்கியம். நல்லதொரு நாட்டை கட்டியெழுப்ப கல்விதான் அடிப்படை. அதற்காகவே எமது ஜனாதிபதி புதிய கல்வித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்.
மாணவர்களை இந்த போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என்று கூறியுள்ளார்.
காரைதீவு பிரதேசசபை செயலாளர் அ.சுந்தரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், உபதவிசாளர், சபை உறுப்பினர்கள், அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைய நாடு பூராகவும் உள்ள அனைத்து கடற்கரை பிரதேசங்களையும் தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இன்றையதினம் குறித்த வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
24 படைப்பிரிவின் கல்முனை பிராந்திய விஜயபாகு படைப்பிரிவினர் இன்று காலை 7.30 மணியளவில் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் நிந்தவூர் வரையான கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் கடற்கரை பிரதேசத்தினை தூய்மைப்படுத்தி மக்கள் பாவனைக்கு கொடுப்பதற்கான நடவடிக்கையாக இந்த தூய்மைப்படுத்தும் திட்டம் அமைந்திருந்தது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த அபிவிருத்தி நடவடிக்கைக்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் தனது விமான பயணங்களை மட்டக்களப்பு விமான நிலையம் வரை மேற்கொள்ள விரும்புவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள ஏனைய சர்வதேச விமான நிலையங்களான கட்டுநாயக்க, யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்களுக்கு இந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மற்றும் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாத காலப்பகுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
பெறுபேறுகள் வெளியாகி, ஒரு வருடகாலம் வரை பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த முறையை மறுசீரமைப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இருப்பதாகவும் கூறினார்.
அடுத்த வருடத்திலிருந்து இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்தாகவும் தெரிவித்தார்.
உயர்தரப் பெறுபேறுகளை மிக விரைவில் வெளியிடுவதற்கும் திட்டம் வகுக்கப்படுவதாகவும் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறினார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் டிசம்பர் மாதத்திற்கான ஒன்று கூடலும் ” மீடியா நைற்” நிகழ்வும் போரத்தின் தலைவர் எம்.சஹாப்தீன் தலைமையில் பொத்துவில் , அறுகம்பே டுவலர்ஸ் ஹட் ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.2019 ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன் 2020 ஆண்டில் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கடந்த காலங்களில் பொதுமக்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளை
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகத்துறையினூடாக வெளிக்கொணரச் செய்து அதற்கான பரிகாரங்களை பெற்றுக் கொடுத்தமைக்காக ஊடகவியலாளர்கள் பாராட்டப்பட்டனர்.ஊடகவியலாளர்களிடையே மறைந்து கிடக்கும் பல திறமைகள் ” மீடியா இரவு” நிகழ்வின் போது வெளிக்காட்ட சந்தர்ப்பமும் இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டது.மேற்படி நிகழ்வுகளில் நிந்தவுர் பிரதேச சபை தவிவாளர் எம்.ஏ.தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் ஆற்றிய சேவைகளையும் பாராட்டினார்.
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் முஹம்மட் அமீன் முஹம்மட் கைஸான் உயிரியல் விஞ்ஞானத்துறையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தியான ” ஏ ” சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதன்னிலையும் தேசிய ரீதியில் 132 வது இடத்தினையும் பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்படவுள்ளார்.அத்துடன் பொது ஆங்கிலத்திலும் ” ஏ ” சித்தியினை பெற்றுள்ளார்.கல்முனையைச் சேர்ந்த டொக்டர் எம்.ஏ.சி.எம்.அமீன் , டொக்டர் நிஜாமியா அமீன் தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார்.இவ்விரண்டு வைத்தியர்களும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர்களாகும். அத்துடன் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இருந்து முதன் முதலாக வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் வைத்தியர் என்ற பெருமையையும் இவரின் தாய் நிஜாமியா அமீன் பெற்றுக் கொண்டுள்ளார்.
கல்முனை கல்வி வலயம் உயர்தர பரீட்சை முடிவுகளின் படி 5 துறைகளில் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலை பெற்று சாதனை படைத்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் முஹம்மட் அமீன் முஹம்மட் கைஸான் உயிரியல் துறையிலும் , நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை மாணவி முனீர் நபாத் ஆயிஸா பௌதீக விஞ்ஞான துறையிலும் , நிந்தவுர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் பாடசாலை மாணவி அப்துல் அஸீஸ் நஸ்ஹத்நுஹா வர்த்தக துறையிலும் , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி அப்துல் சுபியான் பாத்திமா நூஹா கலைத்துறையிலும், மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவி முகைதீன்பிச்சை பாத்திமா ஹனா உயிரியல் தொழில்நுட்ப துறையிலும் அம்பாறை மாவட்டத்தில் முதல் இடங்களைப் பெற்றுள்ளதாக கல்முனை வலய கல்விப் பணிப்பகாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.
தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்றபோது பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி , பிரதி அதிபரும் சமாதான நீதவானுமாகிய கலாநிதி நாராயணபிள்ளை நாகேந்திரன் அவரின் தொடர்ச்சியான கலைப்பணியை பாராட்டி ” கலைச்சுடர் ”விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இவரின் சமூக , கலை , கல்வி , சமய ரீதியிலான பல்வேறு சேவைகளை பாராட்டி அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் பத்திற்கும் மேற்பட்ட கௌரவிப்பு பட்டங்களை அண்மைக்காலத்தில் தமதாக்கிக் கொண்டவர்.அத்துடன் தேசிய கல்வி நிறுவன கல்விமாணி கற்கை நெறியின் பிராந்திய நிலைய விரிவுரையாளராகவும் பணியாற்றியதுடன் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் புதிய பாட நூலாக்கல் பணியின் எழுத்தாளராகவும் பதிப்பாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி , மஹ்மூத் மகளிர் கல்லூரிகள் உயர்தர பரீட்சை முடிவுகளின் படி முதன்னிலை பெற்று தொடர்ந்தும் சாதனை படைத்துள்ளன. கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 12 பேர் பொறியியல் துறைக்கும் 2 பேர் மருத்துவத்துறைக்கும் , 10 பேர் தொழில்நுட்ப துறைக்கும் 4 பேர் வர்த்தக துறைக்கும் , 2 பேர் கலைத்துறைக்கும் பெருமளவிலான மாணவர்கள் உயிரியல் விஞ்ஞானம் மற்றும் பௌதீக விஞ்ஞான துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலிருந்து 10 மாணவிகள் மருத்துவத்துறைக்கும் , 3 மாணவிகள் பொறியியல் துறைக்கும் , 7 மாணவிகள் சட்ட துறைக்கும் , 30 மாணவிகள் கலைத்துறைக்கும் , 8 மாணவிகள் இஸ்லாமிய கற்கை நெறிக்கும் பெரும் தொகையான மாணவிகள் உயிரியல் விஞ்ஞானம் மற்றும் பௌதீக விஞ்ஞான துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் மக்களுக்கு வாக்களித்தது போன்று ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அடுத்த வருடம் வழங்கப்படும். அதற்காக தற்போது பெயர்கள் பதியப்படுவது என்பது பொய்யான தகவலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் “சபிரி கமக்” நிறைவானதோர் கிராமம் என்ற வேலைத்திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கூட்டம் பிரதேச செயலகங்களில் நடாத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்று ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி குழு தலைவர் தலைமையில் கூட்டம் இடம் பெற்றது.
அக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்படுவது உறுதி. ஆனால் அது தொடர்பாக எந்தவிதமான சுற்று நிருபமோ அல்லது தகவல்கள் திரட்டுவது தொடர்பாக எந்த தகவல்களும் அமைச்சின் ஊடாகவோ ஜனாதிபதி செயலகத்தினாலோ இடம் பெறவில்லை. அவ்வாறான தகவல்கள் திரட்டப்படுவதாக கூறும் செயல் பொய்யான செய்திகளாகும்.
ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக தற்போது தான் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது.
அக் குழுவில் நானும் ஒரு அங்கத்தவராக இருப்பதனால் கூறுகின்றேன். அவ்வாறான தகவல்கள் பொய் என்றும் அவ்வாறு வழங்கப்படுகின்றது என்று தெரிவித்து பெரமுன கட்சியின் இணைப்பாளர்கள் என்று சிலர் செயற்படுவதாகவும் அறிய முடிகின்றது.
அவ்வாறு இடம் பெறுவது பெய்யான செயலாகும் என்றும் இது தொடர்பாக அரச அதிகாரிகள் மக்களை தெளிவு படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய சான்றிதழ் அரசாங்கத்தின் வைத்தியசாலைகள் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக் கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு திடீர் பயணத்தை மேற்கொண்டார்.
இதன் போது, அங்கு காணப்படும் குறைபாடுகளை இரண்டு வாரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், தான் மீண்டும் ஒரு மாதத்திற்குள் இங்கே வருவேன். அனைத்தும் சரி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அரச அதிகாரிகளுக்க கட்டளை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில். சாரதி பத்திரம் பெறவிருப்பவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும் என்று திணைக்களம் தகவல் வெளியிட்டிருந்தது.
இச்சூழ்நிலையில் மற்றுமொரு மாற்றத்தினை செய்வதற்கு அந்த திணைக்களம் முடிவு செய்திருப்பதாக போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
“சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய சான்றிதழ் அரசாங்கத்தின் வைத்தியசாலைகள் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. அண்மையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார். இதன் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. இதற்கு தீர்வாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றன.
வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் பொழுது பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
(செங்கலடி நிருபர் சுபா) நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகிய நிலையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவன் விஜயசுதாகர் மிருனுகிருஷாந் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தினையும், தேசிய ரீதியாக 37 இடத்தினையும் பெற்று தனது பெற்றோருக்கும் பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் புகழ்சேர்த்துள்ளார். புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சுரன்ராஜ் மனோகிதராஜ் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இவர் மாவட்ட ரீதியாக முதல் இடத்தினையும் தேசிய ரீதியாக 69வது இடத்தினையும் பெற்று இந்த மாணவன் சாதனை படைத்துள்ளான.