ஜனாதிபதி தேர்தல் மக்களுக்கு வாக்களித்தது போன்று ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அடுத்த வருடம் வழங்கப்படும். அதற்காக தற்போது பெயர்கள் பதியப்படுவது என்பது பொய்யான தகவலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் “சபிரி கமக்” நிறைவானதோர் கிராமம் என்ற வேலைத்திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கூட்டம் பிரதேச செயலகங்களில் நடாத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்று ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி குழு தலைவர் தலைமையில் கூட்டம் இடம் பெற்றது.
அக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்படுவது உறுதி. ஆனால் அது தொடர்பாக எந்தவிதமான சுற்று நிருபமோ அல்லது தகவல்கள் திரட்டுவது தொடர்பாக எந்த தகவல்களும் அமைச்சின் ஊடாகவோ ஜனாதிபதி செயலகத்தினாலோ இடம் பெறவில்லை. அவ்வாறான தகவல்கள் திரட்டப்படுவதாக கூறும் செயல் பொய்யான செய்திகளாகும்.
ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக தற்போது தான் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது.
அக் குழுவில் நானும் ஒரு அங்கத்தவராக இருப்பதனால் கூறுகின்றேன். அவ்வாறான தகவல்கள் பொய் என்றும் அவ்வாறு வழங்கப்படுகின்றது என்று தெரிவித்து பெரமுன கட்சியின் இணைப்பாளர்கள் என்று சிலர் செயற்படுவதாகவும் அறிய முடிகின்றது.
அவ்வாறு இடம் பெறுவது பெய்யான செயலாகும் என்றும் இது தொடர்பாக அரச அதிகாரிகள் மக்களை தெளிவு படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments: