Home » » கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் க.பொ.த.( உ.த) பரீட்சைப் பெறுபேறுகள்

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் க.பொ.த.( உ.த) பரீட்சைப் பெறுபேறுகள்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி , மஹ்மூத் மகளிர் கல்லூரிகள் உயர்தர பரீட்சை முடிவுகளின் படி  முதன்னிலை பெற்று தொடர்ந்தும் சாதனை படைத்துள்ளன.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 12 பேர் பொறியியல் துறைக்கும்  2 பேர் மருத்துவத்துறைக்கும் , 10 பேர் தொழில்நுட்ப  துறைக்கும்  4 பேர் வர்த்தக   துறைக்கும் , 2 பேர் கலைத்துறைக்கும் பெருமளவிலான மாணவர்கள் உயிரியல் விஞ்ஞானம் மற்றும் பௌதீக விஞ்ஞான துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலிருந்து 10 மாணவிகள் மருத்துவத்துறைக்கும் , 3 மாணவிகள் பொறியியல் துறைக்கும் , 7 மாணவிகள் சட்ட துறைக்கும் , 30 மாணவிகள் கலைத்துறைக்கும் , 8 மாணவிகள் இஸ்லாமிய கற்கை நெறிக்கும் பெரும் தொகையான மாணவிகள் உயிரியல் விஞ்ஞானம் மற்றும் பௌதீக விஞ்ஞான துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |