Advertisement

Responsive Advertisement

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் டிசம்பர் மாதத்திற்கான ஒன்று கூடலும் ” மீடியா நைற்” நிகழ்வும்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் டிசம்பர் மாதத்திற்கான ஒன்று கூடலும்  ” மீடியா நைற்”  நிகழ்வும் போரத்தின் தலைவர் எம்.சஹாப்தீன் தலைமையில் பொத்துவில் , அறுகம்பே  டுவலர்ஸ் ஹட் ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.2019 ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன் 2020 ஆண்டில் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள திட்டங்கள்  பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கடந்த காலங்களில் பொதுமக்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளை
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகத்துறையினூடாக வெளிக்கொணரச் செய்து அதற்கான பரிகாரங்களை பெற்றுக் கொடுத்தமைக்காக ஊடகவியலாளர்கள் பாராட்டப்பட்டனர்.ஊடகவியலாளர்களிடையே மறைந்து கிடக்கும் பல திறமைகள் ” மீடியா இரவு” நிகழ்வின் போது வெளிக்காட்ட சந்தர்ப்பமும் இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டது.மேற்படி நிகழ்வுகளில் நிந்தவுர் பிரதேச சபை தவிவாளர் எம்.ஏ.தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் ஆற்றிய சேவைகளையும் பாராட்டினார்.


Post a Comment

0 Comments