நான் இன்று ஒரு வழக்கறிஞராக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, ஒரு மாவட்ட ஒருங்ணைப்புக் குழுத்தலைவியாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் கற்ற கல்விதான் என்பதை ஆணித்தரமாக கூறுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
நேற்று காரைதீவில் நாடிப்பெற்ற புலமையாளர் கௌரவிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
நானும் சிறுவயதில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதேபோல் எனது மகளும் கடந்த 2015இல் சித்திபெற்ற போது அவரை விட எனக்குச் சந்தோசமாகவிருந்தது.
அதேபோன்று இங்கு வந்துள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இந்த மேடையில் பாராட்டப்படும் போது எவ்வளவு சந்தோசமடைவீர்கள் என்பதை நானறிவேன், வாழ்த்துக்கள்.
கல்விதான் எமக்கு முக்கியம். நல்லதொரு நாட்டை கட்டியெழுப்ப கல்விதான் அடிப்படை. அதற்காகவே எமது ஜனாதிபதி புதிய கல்வித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்.
மாணவர்களை இந்த போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என்று கூறியுள்ளார்.
காரைதீவு பிரதேசசபை செயலாளர் அ.சுந்தரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், உபதவிசாளர், சபை உறுப்பினர்கள், அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




0 Comments