நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு லங்கா தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் ராஜித சேனாரத்னவின் உயிரை பழிவாங்க முயற்சித்து வருகிறது. ராஜித சேனாரத்ன இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை செய்துக்கொண்டவர் என்பது உங்களுக்கு தெரியும். நோயாளியாகவே இந்த மருத்துமனைக்கு வந்தார். அவரது உயிரை பழிவாங்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அதுதான் தற்போது நடக்கின்றது.
எந்த மருத்துமனையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என வழக்கு விசாரணையின் போது நீதவான் தெளிவுப்படுத்தினார். விசேட மருத்துவ நிபுணர் முபாரக் அவர்களுக்கு விசேட நன்றி கூறுகிறேன். அவர் மிகவும் திறமையான மருத்துவர். இந்த மருத்துவரே ராஜித சேனாரத்னவுடன் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
மருத்துவர் முபாரக்கின் மருத்துவ ஆலோசனையின்படியே சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அவரை இங்கிருந்து அழைத்துச் சென்று அரச மருத்துவ அதிகாரிகளின் பிடியில் கொடுக்க போகின்றனரோ என்ற சந்தேகம் உள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருந்து மாஃபியா, புகையிலை மாஃபியா போன்ற தரப்பினருக்கு ராஜித சேனாரத்னவின் உயிரை பழிவாங்கும் தேவையுள்ளது. இதனால், இவ்வாறு கீழ்த்தரமாகவும் மோசமாகவும் ராஜித சேனாரத்னவின் உயிரை பழிவாங்க தயாராக வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு கூறி வைக்க விரும்புகிறோம்.
அவரது உயிர் சம்பந்தமாகவும் மிகவும் பயங்கரமான ஆபத்து ஏற்பட்டுள்ளது. இப்படியான இடத்திற்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்கள், அதிகாரிகளுக்கு அனைத்து அழுத்தங்களையும் கொடுத்து, இருதய நோயினால் பாதிக்கப்பட்ட அவரை பழிவாங்க நினைக்கின்றது. இது மிகவும் மோசமான நிலைமை. அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.
அதேபோல் எதிர்ப்பை வெளியிட எங்களுடன் இணையுமாறு அனைத்து மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். வீதியில் இறங்கி எதிர்ப்பை வெளியிட நாங்கள் தயாராக இருக்கின்றோம். எதிர்க்கட்சியில் உள்ள அனைவரையும் இணைத்துக்கொண்டு இந்த அடக்குமுறைக்கு எதிராக போராட விரும்புகிறோம். ராஜித சேனாரத்னவை கண்டு ஏன் இந்தளவு அஞ்சுகின்றனர்.
அவரது உயிரை பழிவாங்க முயற்சிக்கின்றனர். இப்படியான மோசமான வேலைகளுக்கு தயாராக வேண்டாம் என மனிதாபிமானத்தின் பெயரில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றார். சிகிச்சையளிக்கும் மருத்துவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. சிலர் ஊடகங்களுக்கு முன்னால் வந்த மருத்துவர் முபாரக்கிற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இது மோசமான நடவடிக்கை. நாட்டில் மருத்துவர்கள் மருத்துவ தொழிலை செய்ய சுதந்திரமில்லையா?. என்ன செய்ய போகின்றனர்.
இவ்வாறான நிலைமை நாடு ஏன் சென்றது. அறிவுடன் சிந்திக்குமாறு மக்களிடம் கோருகின்றோம் இப்படியான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம். ஊடகங்களும் இந்த தவறுகளை செய்தியாக வெளியிட வேண்டும். ராஜித சேனாரத்னவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவே தயாராகி வருகின்றனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகவே இருந்து வந்தனர். இதனால், இது மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதியா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
0 Comments