மட்டக்களப்பில் கிணறில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

Friday, March 31, 2017

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை வீதியில் உள்ள வீட்டின் கிணறில் இருந்து பிறந்த சிசுவின் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
இன்று இரவு வாவிக்கரை ,மேல்மாடி வீட்டு வீதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கிணறில் இருந்தே இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சிசுவினை பிரசவித்தவர்கள் குறித்த சிசுவினை சீலையில் சுற்றி கல்லைக்கட்டி குறித்த வீட்டின் கிணற்றில் வீசிவிட்டுச்சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசவே கிணறினை துப்புரவுசெய்யும்போது குறித்த கிணற்றினுல் சிசுவின் சடலத்தைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த வீட்டில் வேலைசெய்துவந்த பெண்ணின் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இந்த சிசு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பிரிவு பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
DSC03595
READ MORE | comments

தொலைகாட்சி பார்ப்பதை பழக்கமாக கொண்டுள்ள சேவல்

Thursday, March 30, 2017

தொலைகாட்சி பார்ப்பதனை தனது பழக்கமாக கொண்டிருக்கும் சேவலொன்று தொடர்பான செய்திகள் ஹெம்மாத்தகம பெத்திகம்மான என்ற இடத்தில் பதிவாகியுள்ளது.
8 மாதங்களுக்கும் மேலாக தினமும் இந்த சேவல் வீட்டில் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதனை பழக்கமாக கொண்டுள்ளதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் தொலைகாட்சியில் தனக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது தொலைகாட்சி பெட்டிக்கு முன்னால் ஓடி வந்து நிகழ்ச்சிகளை பார்த்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)01
READ MORE | comments

டெங்கு தீவிரமாக பரவும் அபாயம் : எச்சரிக்கையாக இருக்கவும்

நாட்டில் தற்போது நிலவும் இடையிடையேயான மழையுடன் கூடிய கால நிலை காரணமாக டெங்கு நோய் தீவிரமாக பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் நுளம்புகள் பெருகாத வகையில் சுற்றுச் சூழலில் நீர் தேங்கியிருக்காத வகையில் சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

வவுனியாவில் 168 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை வவுனியாவில் 168 பேர் டெங்கு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ். லவன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்று வரும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
வவுனியாவில் ஜனவரி 2017 தொடக்கம் இன்று வரை 168 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இலங்கை முழுவதும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நகரமயமாக்கலும் மக்களின் வாழ்வியல் மாற்றமும் காரணமாக இருக்கிறது. இதனால் டெங்கு நோய் தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக நன்கு திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். முதலாவது கிராமப்புறங்கள், பாடசாலைகள், நகரம் மற்றும் அரச விடுதிகள், ஸ்தாபனங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். இதற்கு மக்களினுடைய ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கை கணினி பிரிவின் அவசர வேண்டுகோள்

மின்னஞ்சல் ஊடாக வைரஸ் ஒன்று கணினியை தாக்குவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல் ஊடாக வரும் குறித்த வைரஸானது கணினியில் உள்ள சகல தரவுகளையும் அழித்துவிடுதாகவும் இதனால் மின்னஞ்சலில் வரும் சந்தேகத்திற்குகிடமான மின்னஞ்சல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
READ MORE | comments

2016 க.பொ.த சா.த பரீட்சையில் பாடசாலைகள் பெற்ற அடைவு மட்ட விபரங்கள் இதோ..

2016 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகள் பெற்றுக்கொண்டுள்ள அடைவு மட்டங்கள் தொடர்பான தகவல்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பெறுபேறுகளை பெற்று முன்னிலையில் திகழும் முதல் 46 பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)Untitled
READ MORE | comments

பெண்களின் ஆபாச படங்களை வைத்திருந்த இருவர் கல்லடியில் கைது

Wednesday, March 29, 2017

மட்டக்களப்பில்; ஆபாச படங்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.மட்டக்களப்பு கல்லடிப்பகுதியில் வைத்து இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களின் கையடக்க தொலைபேசியில் ஆபாசப்படம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் விசாரணையின் பின்னர் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக மட்;டக்களப்பில் உள்ள பெண்கள் சிலரின் ஆபாசப்படங்கள் இணையத்தளங்களில் சிலரினால் தரவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

ஊடகவியலாளர்கள் , விளையாட்டு வீரர்கள் கொலை சம்பவத்துடன் தொடர்புடையாவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : ஜனாதிபதி உறுதி

ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கடத்தப்பட்டமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 
READ MORE | comments

பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் தொடர் போராட்டம் -மகளிர் அமைப்புகள் எச்சரிக்கை

அரசாங்கம் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காவிட்டால் கிராமங்கள் தோறும் மகளிர் அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டங்களை நடாத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 37வது நாளாகவும் இன்று புதன்கிழமை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மத்திய மாகாண அரசாங்கங்கள் தமது நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியம் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் தொடர்பில் அரசாங்கங்கள் இதுவரையில் நடவடிக்கையெடுக்காமைக்கு கடுமையான கண்டனத்தினை தெரிவித்த அவர்கள் கண் தெரியாதவர்களாகவும் காது கேட்காதவர்களாகவும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு விரைவான நடவடிக்கையினை இந்த அரசாங்கம் எடுக்க தவறினால் கிராமங்கள் தோறும் மகளிர் அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டங்களை நடாத்தும் சூழ்நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் இந்த வேலையற்ற பட்டதாரிகள் 80வீதத்திற்கு அதிகமான பெண்கள் உள்ளதாகவும் அவர்கள் 37வது நாளாக வீதியில் கிடந்து போராட்டம் நடாத்துவதை பார்க்கும்போது வேதனையளிப்பதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வடகிழக்கு மாகாணம் என்பது கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மாவட்டமாகும்.அவ்வாறான சூழ்நிலையிலும் கடுமையான கஸ்டங்களின் மத்தியிலேயே தமது பிள்ளைகளின் கல்வியை பெற்றோர் மேற்கொண்டுவந்தனர்.
ஆனால் அரசாங்கம் ஏனைய மாகாணங்களில் உள்ளவர்களைப்போன்றே வடகிழக்கில் உள்ளவர்களையும் நோக்குகின்றது.இந்த எண்ணத்தினை அரசாங்கம் மாற்றவேண்டும்.கடந்த காலத்தில் பல்வேறு கஸ்டங்களின் மத்தியில் கல்வியைப்பெற்று பட்டத்தினை பூர்த்திசெய்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை விசேட கவனத்தில் கொண்டு அவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும்.
கடந்த ஆட்சியாளர்களினால் பட்டதாரிகளின் நிலைமைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டன.அதிலும் விசேட கவனங்கள் பட்டதாரிகள் தொடர்பில் செலுத்தப்பட்டது.ஆனால் இன்று நல்லாட்சி என்று சொல்லப்படும் நிலையிலும் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.
எங்களது பிள்ளைகள் கூட பாடசாலைக்கு செல்வதற்கு தயங்குகின்றார்கள்.நாளை நாங்களும் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடவேண்டுமா என கேட்கின்றனர்.இந்த நிலைமை அரசாங்கம் மாற்றவேண்டும்.உடனடியாக போராட்டம் நடாத்தும் பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
DSC03192DSC03204DSC03255DSC03258
READ MORE | comments

சாதாரண தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்கள் வழங்குவதற்கான பணிகள் ஆரம்பம்

டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப்பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பான சான்றிதழ்களை வழங்குவதற்கான பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  புஸ்பகுமார தெரிவித்தார்.
வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பயன்படுத்துவதற்கான ஒரு நாள் சேவையின் கீழ் வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பெறுபேறுகள் இலங்கை பரீட்சைகள் பிரிவு சான்றிதழ் கருமபீடத்தினூடாக வழங்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
READ MORE | comments

காரைதீவில் முத்தமிழ் வித்திகரின் 125வது ஜனனதினம்

உலகின் முதற்றமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125வது ஜனனதின நிகழ்வு திங்கட்கிழமை அவர் பிறந்த காரைதீவு மண்ணில் சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றத்தினர் இவ்ஏற்பாட்டைச்செய்திருந்தனர்.
கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கிழக்குமாகாணசபைஉறுப்பினர் த.கலையரசன் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் கதிராமத்தம்பி விமலநாதன் பிரதேசசெயலாளர்களான திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் (காரைதீவு) சிவ.ஜெகராஜன்(திருக்கோவில்) வி.ஜெகதீசன்(ஆலையடிவேம்பு) காரைதீவு பிரதேசசபைச்செயலாளர் சி.நாகராஜா ஆகியோர் கலந்துகொண்டுசிறப்பித்தனர்.
முன்னதாக விபுலானந்த மத்தியகல்லூரி மற்றும் இ.கி.மிசன் பெண்கள்பாடசாலை மாணவர்களின் ரதபவனி பாடசாலையிலிருந்து ஆரம்பமாகி மணிமண்டபத்தை வந்தடைந்தன.
பிறந்த மனையில் நந்திக்கொடிஏற்றல் நிகழ்வும் விசேடபூஜையும் திருவுருவச்சிலைக்குமலர்மாலை அணிவித்தலும் பட்டயம் வாசித்தலும் தொடர்ந்து அவரது வீதிக்கு விபுலானந்தவீதி என்றபுதிய பெயர்ப்பலகையைத் திறந்துவைத்தலுடன் அவர்திருவுருவப்படத்தை பொதுஇடங்களிலும் வீடுகளிலும் பிரதிஸ்டை செய்துவைக்கும் கால்கோள் நிகழ்வும் இடம்பெற்றன.
விபுலானந்த ஞாபகார்த்தபணிமன்றத்தினதும் இந்துசமய விருத்திச்சங்கத்தினதும் முன்னாள் தலைவர் விபுலாமாமணி வி.ரி.சகாதேவராஜா சிறுப்புரை நிகழ்த்தியதுடன் விழாவை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும் உரையாற்றினார்.
காரைதீவு முச்சந்தியலுள்ள விபுலானந்த சதுக்கத்திலுள்ள அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மன்றச்செயலாளர் கு.ஜெயராஜினால் மலர்மாலை அணிவித்ததுடன் ஈசன்உவக்கும்இன்மலர் மூன்று என்ற பாடலும் பாடப்பட்டது.
தொடர்ந்து பொதுஇடங்களில் சுவாமியின் திருவுருவப்படத்தினை பிரதிஸ்டை செய்யும்;தொடரில் பிரதேசசபையில் முதல் படம் பிரதிஸ்டை செய்துவைக்கப்பட்டது.
010203040506
READ MORE | comments

மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் பெண்கள் பாடசாலையில் 29 மாணவர்கள் 9A சித்தி

செவ்வாய்க்கிழமை  அதிகாலை வெளியாகியுள்ள க.பொ.சா/தரனப் பரீட்சையில்(2016 ஆம் ஆண்டுக்கான) பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு வலயத்தில் உள்ள வின்சன்ட் உயர்தரப் பெண்கள் பாடசாலையில் 95 வீதமானவர்கள் உயர்தரம் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்.

இதன்படி தோற்றிய மாணவர்களில் 29 பேர் 9ஏ(9A) சித்திகளையும்,20 பேர் 8ஏ பீ(8Ab) களையும்,15 பேர் 7ஏ 2பீ(7Ab) களையும் பெற்றுள்ளார்கள்.இவை எமக்கு கிடைக்கப்பெற்ற முதன்மையான பெறுபேறாகும்.இப்பரீட்சைக்கு எமது பாடசாலையிலிருந்து  157 மாணவிகள்  க.பொ.சா/தா பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.இப்பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும்,அதற்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரி பெருந்தகைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும்,பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதேவேளை இவ்வலயத்தில் உள்ள புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் க.பொ.சா/தாரனப்பரீட்சை முடிவுகளின்படி 11பேர் 9ஏயும்(9A),12 மாணவர்கள் 8ஏ பீ, 12 பேர் 7 ஏபீசீ,10பேர் 6ஏ 2பீ சீ களையும் பெற்றுள்ளதாக புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தெரிவித்தார். இப்பரீட்சைக்கு 158 மாணவர்கள் தோற்றியுள்ளார்கள்.இப்பாடசாலையின் நல்ல பெறுபேற்றை பெற்றுக்கொண்ட மாணவச்செல்வங்களுக்கும்,அவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாகவும்,அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
READ MORE | comments

மாவட்ட ரீதியில் 9A சித்திகளை பெற்று சாதனைப்படைத்த மாணவர்களின் விபரங்கள்

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று (28) அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இது வரையில் கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் ஒன்பது பாடங்களிலும் 9A பெற்று சாதனைப்படைத்த மாணவர்களின் விபரங்கள் இதோ....
01-கொழும்பு மாவட்டம்
கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் 27 மாணவிகள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.
கொழும்பு இந்துக் கல்லூரியில் 13 மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.
02-கண்டி மாவட்டம்
கண்டி மஹமாயா மகளிர் பாடசாலையின் எஸ்.எம்.முணசிங்க என்ற மாணவி அகில இலங்கை ரீதியில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
03-நுவரெலியா மாவட்டம்
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி பரசுராம் மதுரா 9A சித்திகளை பெற்றுள்ளார்.
04-யாழ்ப்பாணம் மாவட்டம்
யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
05-வவுனியா மாவட்டம்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் 234 மாணவர்கள் தோற்றிய நிலையில் 10 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
அதன்படி, தமிழ் மொழி மூலத்தில் மயூரி பேரின்ப நாயகம், கிசோபிகா சஜரூபன், நிதிகா கரிகரசக்தி, சுஜித்திகா ஜெயபற்றிக் ரஞ்சித், தர்சிகா கிரிதரன், கிருசிகா திருச்செல்வம், சாம்பவி தவராசா, கோபிசாளினி குமாரசிங்கம், லதுசிகா கிருபானந்தம் ஆகிய மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
இதேவேளை ஆங்கில மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
அதன்படி சஜனி கணேசலிங்கம், சின்மதி சத்தியலிங்கம், மதுசா ஜெயக்குமார், லபிரா அகிலநாயகம், சங்கவி புவனேசன், சரோனி இவன்சிலின் அன்ரனி ஜெயனாத், அட்சயா சிவபாதசுந்தரம், சரண்ஜா சூரியகுமாரன், குசேதா குகநாதன் ஆகிய மாணவிகள் ஆங்கில மொழி மூலத்தில் 9ஏ பெற்றுள்ளார்கள்.
06-முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு /புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
மாணவி சிவகுமாரன் சனோமி 9A, மாணவி கருணாகரன் ஜினுத்துரா 9A, மாணவி அருந்தவராசா லிவேதிகா 9A,
மாணவன் சிவராசா பகீரதன் 9A ஆகியோர் ஒன்பது ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
07-கிளிநொச்சி மாவட்டம்
முதல் முறையாக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் இருவர் 9ஏ சித்திகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
08-மட்டக்களப்பு மாவட்டம்
மட்டு நகர் சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவன் நாகராஜன் சொரூபன் 9 பாடங்களிலும் A தர சித்தியினை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி வரலாற்றின் முதல் தடவையாக ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
இதில் வி.ஹர்ஷாந், கோ.அனுராஜிதன், ந.அஞ்சனன், க.அஞ்சைகுமார், த.கேந்துஜன் ஆகியோரே ஒன்பது ஏ சித்தி பெற்றுள்ள மாணவர்களாவர்.
08-அம்பாறை மாவட்டம்
சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அப்துல் றசூல் பாத்திமா றிஸ்தா மற்றும் அமீர்அலி பாத்திமா றொஸ்னி ஆகியோர் 9 A சித்திகளை பெற்றுள்ளனர்.
சம்மாந்துறை முஸ்லிம் தேசிய பாடசாலையில் 14 மாணவர்கள் 9 A பெற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்தில் இரட்டைச் சகோதரிகள் இருவரும் 9 A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
றாணமடு இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அற்புதராஜா மிராளினி மற்றும் அற்புதராஜா விதுசனா எனும் இரட்டையர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.
குறித்த விபரங்கள் இது வரையில் கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

இலங்கையை அச்சுறுத்தும் டெங்குக்கு இணையாக மற்றுமொரு நோய்

இலங்கையில் டெங்கு நோய்க்கு இணையான நோய் மற்றும் இன்புளூயன்ஸா போன்ற வைரஸ் தொற்று ஒன்று தற்போது பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காய்ச்சல், உடல் வலி, தும்மல், தலைவலி, போன்ற அறிகுறிகள் இந்த நோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும் என மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரத்தம் பரிசோதிக்கும் போது இரத்த எண்ணிக்கை குறைவாக காணப்படலாம். எனினும் சில சந்தர்ப்பங்களில் அது டெங்கு அற்ற வைரஸ் தொற்றாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைக்குட்டை பயன்படுத்தல், கை முழங்கை, வாய் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளை மூடிக் கொள்வதன் ஊடாக மற்றுமொறு நபருக்கு தொற்றுவதனை தவிர்க்கலாம் என மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டால், ஓய்வு எடுப்பது கட்டாயம் எனவும், பாடசாலை செல்லும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

குடிபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கண்டுபிடிக்க புதிய இயந்திரம்

இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை இலகுபடுத்தும் வகையில் புதிய இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
குடிபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நோக்கில் இந்த இயந்திரம் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குடிபோதையில் உள்ள சாரதிகளை கைது செய்யும் போது மேற்கொள்ளப்படுகின்ற மூச்சுக்காற்று சோதனைப் பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டினை இலகுபடுத்துவதே இந்த இயந்திரத்தின் நோக்கமாகும்.
அதற்கடைய பிரேடலைஸர் என்ற இந்த இயந்திரம் முதல் முறையாக போக்குவரத்து பிரிவுகளிடம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தின் செயற்பாடு தொடர்பில் பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

9A சித்திகளை 8224 மாணவர்கள் பெற்று சாதனை! கணித பாடத்தில் அதிகளவானோர் சித்தி

2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இம்முறை சாதாரண தர பரீட்சையில் 8224 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் அதிசிறந்த (A) சித்திகளை பெற்றுள்ளனர்.
2015ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 6102 ஆக காணப்பட்டதென பரீட்சை ஆணையாளர் நாயகம் W.M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை சாதாரண தர பரீட்சையில் கணிதம் மற்றும் வரலாறு பாடத்தில் சிறப்பு சித்திகளை பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய 28877 மாணவர்கள் கணிதப்பாடத்தில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 7.63 வீத அதிகரிப்பாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மட்டு. புனித மிக்கேல் கல்லூரியில் 17 மாணவர்களுக்கு 9ஏ சித்தி

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் ஆர்.வெஸ்லியோ வாஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் 17 பேர் 9 ஏ சித்திகளையும், 10 பேர் 8 ஏ சித்திகளையும்,ஏழு பேர் 7ஏ சித்திகளையும் பெற்று எமது பாடசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் முழுமையான விபரம் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் எமது பாடசாலை அனுப்பப்பட்ட பின்னர் அதை முழுமையாக வெளியிட முடியும் என்றும் புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் ஆர்.வெஸ்லியோ வாஸ் மேலும் கூறியுள்ளார்.
READ MORE | comments

பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆறு பாடசாலைகளில் 9ஏ சித்தி! வலயக் கல்வி பணிப்பளார்

Tuesday, March 28, 2017

பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆறு பாடசாலைகளில் 9 ஏ சித்தி பெறப்படுள்ளதுடன், முற்றுமுழுதாக அதிகஷ்ட பாடசாலைகளை கொண்ட போரதீவுக் கோட்டத்தின் பெறுபேறுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்வி பணிப்பளார் திருமதி.ந.புள்ளநாயகம் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியது.
இது தொடர்பில் வினாவிய போதே வலயக்கல்வி பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இம்முறை வெளியான பெறுபேற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் 5 மாணவரும், பெரியகல்லாறு உதயபுரம் வித்தியாலயத்தில் 2 மாணவரும், துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் 3 மாணவரும், மண்டூர்.ஆர்.கே.எம் வித்தியாலயத்தில் ஒரு மாணவரும், பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய தேசியபாடசாலையில் ஒரு மாணவரும் 9ஏ சித்தியை பெற்றுள்ளனர்.
அனேகமான பாடசாலைகளில் 8ஏ சித்திகள் பெறப்பபட்டுள்ளதுடன். சில பாடசாலைகளில் உயர்தரம் கற்பதற்கான நூறு வீத தகுதியை மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் பாராட்டுகின்றேன் என வலயக்கல்வி பணிபாளர் தெரிவித்தார்.
அதேவேளை இதன்போது கோட்ட கல்வி பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
போரதீவுக் கோட்ட பாடசாலைகளின் மொத்த சித்தி வீதம் 75 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்காக அர்ப்பணிப்பாக செயற்பட்ட அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டுவதுடன் அனைத்து பாடசாலைகளுக்கும் பலத்த சிரமத்தின் மத்தியில் ஆசிரியர்களை நியமித்து தந்த வலயக்கல்வி பணிப்பாளருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
READ MORE | comments

நாவிதன்வெளியில் இரட்டைச் சகோதரிகள் சாதனை

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்தில் இரட்டைச் சகோதரிகள் இருவரும் 9 A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
றாணமடு இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அற்புதராஜா மிராளினி மற்றும் அற்புதராஜா விதுசனா எனும் இரட்டையர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.தியாகராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவர்களுக்கு நாவிதன்வெளிக் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவர்கள் இருவருக்கும் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீமும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மட்டக்களப்பில் 9A சித்தி பெற்று சொரூபன் சாதனை

கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், மட்டு நகர் சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவன் நாகராஜன் சொரூபன் 9 பாடங்களிலும் A தர சித்தியினை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.
இவ்வாறு தமக்கு பெருமை சேர்த்த நாகராஜன் சொரூபனின் சாதனைக்கு பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சிவாநந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

அவுஸ்திரேலியாவை தாக்கத்தொடங்கியுள்ளது டெபி யுயல்-

டேபி யுயல் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தை செவ்வாய்கிழமை தாக்கத்தொடங்கியுள்ளதை அடுத்து பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
செவ்வாய்கிழமை அதிகாலை முதல் மணிக்கு 260 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசிவருவதன் காரணமாக கடும் மழை யும் பெய்துவருகின்றது.இதேவேளை வீடுகள் துறைமுகங்கள்போன்றவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்இ மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடும் புயல் காரணமாக வீடுகளின் கூரைகள் பிடுங்கியெறியப்படுவதாகவும் இதனால் பொதுமக்களிற்கு காயங்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 24 மணிநேரத்திற்கு இந்த நிலை நீடிக்கலாம் என வானிலை அவதான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிய சத்தத்துடன் காற்றுவீசுகின்றதுகாற்று ஊளையிடுகின்றது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் மழை காரணமாக வெள்ள நிலை ஏற்பட்டுள்ளதுஇ காற்றினால் ஜன்னல்கள் உடைந்துள்ளனஇ வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
40000 ற்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்அவர்களை அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்றடைய முடியாத நிலை காணப்படுவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறும் அவசர உதவி தேவைப்படின் அம்புலன்ஸ் அல்லது அவசர சேவைகளை தொடர்புகொள்ளுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது ஆபத்தான புயல் மக்கள் வீடுகளிற்குள் இருக்கவேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
READ MORE | comments

அவுஸ்திரேலிய வீரர்களுடனான நட்பு முறிவடைந்து விட்டது – கோலி அதிர்ச்சி கருத்து

அவுஸ்திரேலியாவுடான டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலியா வீரர்களுடனான நட்பை முறித்துவிட்டதாக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுடனான தொடரை வென்ற பிறகு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான உறவு குறித்து பதிலளித்துள்ள அவர் அவுஸ்திரேலிய வீரர்களுடன் மைதானத்திற்கு வெளியே நட்பை பேண விரும்புகின்றேன் என முதல் டெஸ்டில் நான் தெரிவித்தது மாறிவிட்டது, நான் அவுஸ்திரேலிய வீரர்களுடன் மைதானத்திற்கு வெளியே நட்பை பேண விரும்புகின்றேன் என தெரிவிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

கிழக்கில் 4580 டெங்கு நோயாளிகள்

கிழக்கில் டெங்கு நோயினால் 4580 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் டெங்கு நோய் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் போதே டாக்டர் கே.முருகானந்தம் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
டெங்கினைக்கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
டெங்கு நோயினைப் பொறுத்தவரையில், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் 2680 நோயாளிகள், மட்டக்களப்பில் 960 நோயாளிகள் , கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் 827 நோயாளிகளும், அம்பாறை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் 113 நோயாளிகளுமாக 4580 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
டெங்கு நோய் காரணமாக 18 பேர் கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 9 பேரும் குறிஞ்சாக்கேணி பிரதேச சபைப்பிரிவுக்குள் 3 பேரும் , மூதூர், குச்சவெளி, திருகோணமலை பிரதேசங்களில் தலா ஒன்றுமாக 15 பேர் திருகோணமலை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாகவும் , மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப்பிரதேசம், காத்தான்குடி, செங்கலடி பிரதேங்களிலுமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
டெங்கினைக்கட்டுப்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது மக்கள் தங்களது குடிமனைகளை தாங்களே துப்பரவு செய்யும்படியும் பணித்திருக்கின்றோம்.
உள்ளுராட்சி சபைகளின் உதவியோடு கிராமப்புறங்களில் இருக்கின்ற காணிகள் மற்றும் பாவிக்கப்படாத கிணறுகளும்; சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இன்புளுவன்சா, H1N1 காணப்படும் இடங்களினை அடையாளம்கண்டு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமாகத் தேவையாக இருக்கிறது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
READ MORE | comments

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி மதுரா 9 ஏ சித்தி

இன்று வெளியிடப்பட்டுள்ள கா.பொ.த சாதாரண தரபரீட்சை பெறுபேறுகளின படி கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள்.
அந்தவகையில் பாடசாலையின் மாணவி பரசுராம் மதுரா 9 ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார். இவர் பரசுராம் சுபத்ரா தம்பதிகளின் புதல்வியாவார்.
பாடசாலையில் சிறந்த  பெறுபேறுகளை பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் வெற்றிகளுக்காக உழைத்திருக்கின்ற பாடசாலை ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியுள்ள பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர் ஆர்.சிவலிங்கம் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

Sri Lankan government removes duty imposed on items brought by migrant workers

Monday, March 27, 2017

The Sri Lankan government has decided to completely remove the duty imposed on nine items being brought into the country by Sri Lankan migrant workers. The decision has been taken as a benefit to the migrant workers and in order to receive the benefit they need to be employed overseas at a least a year.
Deputy Customs Director, Parakrama Basnayake told state-run TV that the Customs has decided to give more benefits to the Sri Lankans who are returning after working in overseas. He said that they can bring a bathroom set, a bedroom suite and a motorcycle below the capacity of 350 CC, tax free. They will also be able to bring solar panels, computers, laptops and two mobile phones. The migrant workers can also purchase television sets less than 55 inches duty free.
READ MORE | comments

காணிகளை 7 நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால்...! - கேப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை!

படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை ஏழு நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால் தங்களது போராட்ட வடிவத்தை மாற்றி தீவிரப்படுத்தவுள்ளதாக முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு இன்று 27 நாட்களை எட்டியுள்ளது.
இந்நிலையில், தமது போராட்டத்தின் ஓர் அங்கமாக நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேற்குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர். மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்தோடு, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்ததோடு, மக்களால் முன்னெடுக்கப்பட்ட கவனீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தனர். தமது பூர்வீக காணிகளில் இராணுவம் உல்லாச வாழ்க்கை வாழ, தாம் வீதியில் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இம் மக்கள், தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |