2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இம்முறை சாதாரண தர பரீட்சையில் 8224 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் அதிசிறந்த (A) சித்திகளை பெற்றுள்ளனர்.
2015ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 6102 ஆக காணப்பட்டதென பரீட்சை ஆணையாளர் நாயகம் W.M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை சாதாரண தர பரீட்சையில் கணிதம் மற்றும் வரலாறு பாடத்தில் சிறப்பு சித்திகளை பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய 28877 மாணவர்கள் கணிதப்பாடத்தில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 7.63 வீத அதிகரிப்பாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments