2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் ஆர்.வெஸ்லியோ வாஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் 17 பேர் 9 ஏ சித்திகளையும், 10 பேர் 8 ஏ சித்திகளையும்,ஏழு பேர் 7ஏ சித்திகளையும் பெற்று எமது பாடசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் முழுமையான விபரம் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் எமது பாடசாலை அனுப்பப்பட்ட பின்னர் அதை முழுமையாக வெளியிட முடியும் என்றும் புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் ஆர்.வெஸ்லியோ வாஸ் மேலும் கூறியுள்ளார்.
0 Comments