Advertisement

Responsive Advertisement

பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆறு பாடசாலைகளில் 9ஏ சித்தி! வலயக் கல்வி பணிப்பளார்

பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆறு பாடசாலைகளில் 9 ஏ சித்தி பெறப்படுள்ளதுடன், முற்றுமுழுதாக அதிகஷ்ட பாடசாலைகளை கொண்ட போரதீவுக் கோட்டத்தின் பெறுபேறுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்வி பணிப்பளார் திருமதி.ந.புள்ளநாயகம் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியது.
இது தொடர்பில் வினாவிய போதே வலயக்கல்வி பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இம்முறை வெளியான பெறுபேற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் 5 மாணவரும், பெரியகல்லாறு உதயபுரம் வித்தியாலயத்தில் 2 மாணவரும், துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் 3 மாணவரும், மண்டூர்.ஆர்.கே.எம் வித்தியாலயத்தில் ஒரு மாணவரும், பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய தேசியபாடசாலையில் ஒரு மாணவரும் 9ஏ சித்தியை பெற்றுள்ளனர்.
அனேகமான பாடசாலைகளில் 8ஏ சித்திகள் பெறப்பபட்டுள்ளதுடன். சில பாடசாலைகளில் உயர்தரம் கற்பதற்கான நூறு வீத தகுதியை மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் பாராட்டுகின்றேன் என வலயக்கல்வி பணிபாளர் தெரிவித்தார்.
அதேவேளை இதன்போது கோட்ட கல்வி பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
போரதீவுக் கோட்ட பாடசாலைகளின் மொத்த சித்தி வீதம் 75 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்காக அர்ப்பணிப்பாக செயற்பட்ட அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டுவதுடன் அனைத்து பாடசாலைகளுக்கும் பலத்த சிரமத்தின் மத்தியில் ஆசிரியர்களை நியமித்து தந்த வலயக்கல்வி பணிப்பாளருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments