கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், மட்டு நகர் சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவன் நாகராஜன் சொரூபன் 9 பாடங்களிலும் A தர சித்தியினை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.
இவ்வாறு தமக்கு பெருமை சேர்த்த நாகராஜன் சொரூபனின் சாதனைக்கு பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சிவாநந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
0 Comments