டேபி யுயல் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தை செவ்வாய்கிழமை தாக்கத்தொடங்கியுள்ளதை அடுத்து பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
செவ்வாய்கிழமை அதிகாலை முதல் மணிக்கு 260 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசிவருவதன் காரணமாக கடும் மழை யும் பெய்துவருகின்றது.இதேவேளை வீடுகள் துறைமுகங்கள்போன்றவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்இ மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடும் புயல் காரணமாக வீடுகளின் கூரைகள் பிடுங்கியெறியப்படுவதாகவும் இதனால் பொதுமக்களிற்கு காயங்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 24 மணிநேரத்திற்கு இந்த நிலை நீடிக்கலாம் என வானிலை அவதான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிய சத்தத்துடன் காற்றுவீசுகின்றதுகாற்று ஊளையிடுகின்றது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் மழை காரணமாக வெள்ள நிலை ஏற்பட்டுள்ளதுஇ காற்றினால் ஜன்னல்கள் உடைந்துள்ளனஇ வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
40000 ற்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்அவர்களை அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்றடைய முடியாத நிலை காணப்படுவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறும் அவசர உதவி தேவைப்படின் அம்புலன்ஸ் அல்லது அவசர சேவைகளை தொடர்புகொள்ளுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது ஆபத்தான புயல் மக்கள் வீடுகளிற்குள் இருக்கவேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments