Home » » கிழக்கில் 4580 டெங்கு நோயாளிகள்

கிழக்கில் 4580 டெங்கு நோயாளிகள்

கிழக்கில் டெங்கு நோயினால் 4580 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் டெங்கு நோய் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் போதே டாக்டர் கே.முருகானந்தம் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
டெங்கினைக்கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
டெங்கு நோயினைப் பொறுத்தவரையில், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் 2680 நோயாளிகள், மட்டக்களப்பில் 960 நோயாளிகள் , கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் 827 நோயாளிகளும், அம்பாறை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் 113 நோயாளிகளுமாக 4580 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
டெங்கு நோய் காரணமாக 18 பேர் கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 9 பேரும் குறிஞ்சாக்கேணி பிரதேச சபைப்பிரிவுக்குள் 3 பேரும் , மூதூர், குச்சவெளி, திருகோணமலை பிரதேசங்களில் தலா ஒன்றுமாக 15 பேர் திருகோணமலை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாகவும் , மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப்பிரதேசம், காத்தான்குடி, செங்கலடி பிரதேங்களிலுமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
டெங்கினைக்கட்டுப்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது மக்கள் தங்களது குடிமனைகளை தாங்களே துப்பரவு செய்யும்படியும் பணித்திருக்கின்றோம்.
உள்ளுராட்சி சபைகளின் உதவியோடு கிராமப்புறங்களில் இருக்கின்ற காணிகள் மற்றும் பாவிக்கப்படாத கிணறுகளும்; சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இன்புளுவன்சா, H1N1 காணப்படும் இடங்களினை அடையாளம்கண்டு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமாகத் தேவையாக இருக்கிறது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |