உலகின் முதற்றமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125வது ஜனனதின நிகழ்வு திங்கட்கிழமை அவர் பிறந்த காரைதீவு மண்ணில் சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றத்தினர் இவ்ஏற்பாட்டைச்செய்திருந்தனர்.
கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கிழக்குமாகாணசபைஉறுப்பினர் த.கலையரசன் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் கதிராமத்தம்பி விமலநாதன் பிரதேசசெயலாளர்களான திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் (காரைதீவு) சிவ.ஜெகராஜன்(திருக்கோவில்) வி.ஜெகதீசன்(ஆலையடிவேம்பு) காரைதீவு பிரதேசசபைச்செயலாளர் சி.நாகராஜா ஆகியோர் கலந்துகொண்டுசிறப்பித்தனர்.
முன்னதாக விபுலானந்த மத்தியகல்லூரி மற்றும் இ.கி.மிசன் பெண்கள்பாடசாலை மாணவர்களின் ரதபவனி பாடசாலையிலிருந்து ஆரம்பமாகி மணிமண்டபத்தை வந்தடைந்தன.
பிறந்த மனையில் நந்திக்கொடிஏற்றல் நிகழ்வும் விசேடபூஜையும் திருவுருவச்சிலைக்குமலர்மாலை அணிவித்தலும் பட்டயம் வாசித்தலும் தொடர்ந்து அவரது வீதிக்கு விபுலானந்தவீதி என்றபுதிய பெயர்ப்பலகையைத் திறந்துவைத்தலுடன் அவர்திருவுருவப்படத்தை பொதுஇடங்களிலும் வீடுகளிலும் பிரதிஸ்டை செய்துவைக்கும் கால்கோள் நிகழ்வும் இடம்பெற்றன.
விபுலானந்த ஞாபகார்த்தபணிமன்றத்தினதும் இந்துசமய விருத்திச்சங்கத்தினதும் முன்னாள் தலைவர் விபுலாமாமணி வி.ரி.சகாதேவராஜா சிறுப்புரை நிகழ்த்தியதுடன் விழாவை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும் உரையாற்றினார்.
காரைதீவு முச்சந்தியலுள்ள விபுலானந்த சதுக்கத்திலுள்ள அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மன்றச்செயலாளர் கு.ஜெயராஜினால் மலர்மாலை அணிவித்ததுடன் ஈசன்உவக்கும்இன்மலர் மூன்று என்ற பாடலும் பாடப்பட்டது.
தொடர்ந்து பொதுஇடங்களில் சுவாமியின் திருவுருவப்படத்தினை பிரதிஸ்டை செய்யும்;தொடரில் பிரதேசசபையில் முதல் படம் பிரதிஸ்டை செய்துவைக்கப்பட்டது.
0 Comments