Advertisement

Responsive Advertisement

வவுனியாவில் 168 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை வவுனியாவில் 168 பேர் டெங்கு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ். லவன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்று வரும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
வவுனியாவில் ஜனவரி 2017 தொடக்கம் இன்று வரை 168 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இலங்கை முழுவதும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நகரமயமாக்கலும் மக்களின் வாழ்வியல் மாற்றமும் காரணமாக இருக்கிறது. இதனால் டெங்கு நோய் தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக நன்கு திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். முதலாவது கிராமப்புறங்கள், பாடசாலைகள், நகரம் மற்றும் அரச விடுதிகள், ஸ்தாபனங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். இதற்கு மக்களினுடைய ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments