மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில் காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் !

Wednesday, November 30, 2022

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக,

காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) முற்பகல் நடைபெற்றது.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் தொடக்கம் மட்டக்களப்பு வரையான கரையோர பிரதேசத்தில், அரச மற்றும் தனியார் காணிகளை அடையாளம் காண்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தப் பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்து மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரன் உட்பட பல பிரதேச செயலாளர்கள் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ. சூலானந்த பெரேரா, வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சி.எம். ஹேரத் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
READ MORE | comments

ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது

 


30-11-2022

அரச பணியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் முறையில் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கல்வியின் பிரதான திட்டம் குறித்த வரைவு கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.இதன்போது கருத்துரைத்த அவர், நிர்வாகம் தொடர்பான தொழிநுட்பம் உரிய வகையில் செயற்படாமையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பல விடயங்களை கருத்திற் கொண்டே, ஆசிரிய இடமாற்றம் வழங்கப்படும்.கற்பிக்கும் பாடங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் அளவு, பாடசாலையின் ஆசிரியர் தேவை என்பவற்றை கருத்திற் கொண்டு இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் ஒருவரை திடீர் என மாற்றி வேறு ஒரு இடத்தில் பணிக்கு அமர்த்த முடியாது.

தற்போது ஆசியரிய இடமாற்றம் குறித்த சபையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு விதமான முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.

தொழிற்சங்கங்களின் 25 பிரதிநிதிகள் அங்கு சென்று தங்களுக்கு தேவையானவர்களுக்கு ஏற்ப இடமாற்றத்தை பெறுவதற்கு முனைகின்றனர்.

மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை. தங்களது வசதியை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படுகின்றனர்.

தொழிநுட்பத்தை நிர்வாக ரீதியாக உரியமுறையில் பயன்படுத்தாமையே இவை அனைத்துக்கும் பிரதான காரணமாக அமைவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெற்ற மாணவன் மீது தீ வைத்த நபர் கைது !

Tuesday, November 29, 2022

 


இவ்வருட சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவருக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற குறித்த மாணவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

கடந்த சனிக்கிழமை இரவு, பரீட்சை பெறுபேறுகளை தெரிவிப்பதற்காக உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது மற்றுமொரு நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் குறித்த மாணவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர், மாணவரியின் தந்தையிடம் கப்பம் கேட்டு, கொடுக்காததால், இவ்வாறு தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கைகளிலும் கழுத்திலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு நேற்று காலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தீ வைத்த நபருடன் தனது மகன் இருந்ததாகவும், இருட்டாக இருந்ததால் தீ வைத்த நபரை அடையாளம் காண முடியவில்லை எனவும் மாணவரின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அம்பிட்டிய பிரதேசத்தில் நீண்டகாலமாக அச்சுறுத்தி வரும் கும்பலைச் சேர்ந்த ஒருவரே இந்தத் தீவைப்புச் செய்துள்ளதாகவும் மாணவியின் பெற்றோர் அச்சம் காரணமாக சம்பவத்தை மறைத்து வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அதிக போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த சம்பவம் : அடையாள அணிவகுப்பில் வசமாக மாட்டினார் சந்தேக நபர் !

 


பாறுக் ஷிஹான்)பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலை மாணவர்களான 11 வயது மதிக்கத்தக்க இருவரை இரு வேறு சந்தரப்பங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடத்த முயற்சிப்பதாக பொலிஸ் நிலையத்தில் இம்மாதம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இதனை அடுத்து சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையின் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கமராக்களின் உதவிகள் மற்றும் புலன் விசாரணை முடக்கி விடப்பட்ட நிலையில் மாணவர்களை கடத்த முயற்சித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேக நபர் கல்முனை பகுதியை சேர்ந்த 27 வயதுடையவராவார்.இச்சம்பவமானது தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றுடன் முகங்களை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் மாணவர்கள் சிலரை இலக்கு வைத இவ்வாறான கடத்த முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டு கடந்த வாரம் பல முறைப்பாடுகள் பதிவுசெய்யட்டிருந்ததுடன் சாய்ந்தமருது பொலிஸாரும் விசாரணையினை முடக்கி விட்டிருந்தனர்.

இதற்கமைய பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட இவ்விசாரணையின் போது பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் கைது செய்யப்படடதுடன் இன்று (29) செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டார்.

இவ்வடையாள அணிவகுப்பின் போது அச்சந்தேக நபரை பாதிக்கப்பட்ட மாணவன் அடையாளப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து குறித்த சந்தேகநபரை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்.
READ MORE | comments

உயர்தர பரீட்சைக்கு தோற்ற 80 சதவீத வருகை பதிவு அவசியம் என்ற தீர்மானம் தொடர்பில் மறுபரிசீலனை !

 


கொவிட் தொற்று மற்றும் எரிபொருள் நெருக்கடிகளால் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாமல் நெருக்கடிகளை எதிர்கொண்ட மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு , 2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு 80 சதவீத பாடசாலை வருகை பதிவு அவசியம் என்று விடுக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பில் மறுபரிசீலனை செய்வதற்கு கல்வி அமைச்சிடம் பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


அடுத்த ஆண்டு முதல் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பாடசாலை வருகை 80 சதவீதமாகக் காணப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இந்த கல்வியாண்டுக்குரிய மாணவர்களே அடுத்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகளின் அடிப்படையில் 80 சதவீத வருகை பதிவில் சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே இது தொடர்பில் செவ்வாய்கிழமை (28) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் , 2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80 சதவீதம் பாடசாலை வரவு அவசியமாகும் என்று வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய தீர்மானத்தை எடுக்குமாறு கல்வி அமைச்சருக்கு அறிவிக்கின்றேன்.

பாடப்பரப்புக்களை பரீட்சைக்கு முன்னர் நிறைவு செய்வதை இலக்காகக் கொண்டு , மாணவர்கள் இதில் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும் என்பதற்காகவே 80 சதவீத பாடசாலை வரவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களில் கொரோனா தொற்று மற்றும் எரிபொருள் நெருக்கடிகளால் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாமல் நெருக்கடிகளை எதிர்கொண்ட மாணவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

எனவே இவ்வாறான மாணவர்களுக்கு நியாயமான சலுகை வேலைத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதால் , அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சருக்கு பரிந்துரைக்கப்படும்.

செஸ் வரி தொடர்பில் இவ்வாரம் எந்தவொரு அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. தேசிய உற்பத்திகளைப் பாதுகாப்பதற்காகவே இறக்குமதி பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும் பாடசாலை உபகரணங்களுக்கான செஸ் வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்றால் , இவ்விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என தெரிவித்தார்.

READ MORE | comments

க.பொ.த உயர்தரம் தோற்றவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு - 2023 முதல் நடைமுறை

Monday, November 28, 2022

 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை விண்ணப்பம்

க.பொ.த உயர்தரம் தோற்றவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு - 2023 முதல் நடைமுறை | Gce A L 2023 Onwards Notice For Students

2023 ஆம் ஆண்டு முதல் இந்த விடயம் பரீட்சை விண்ணப்பத்தின் போது அவதானம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.


READ MORE | comments

2022 சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகும் காலப்பகுதி தொடர்பான அறிவிப்பு

Sunday, November 27, 2022

 


27-11-20222022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதரப் பத்திர சாதாரணத் தரப்பரீட்சை இடம்பெறும் காலப்பகுதி தொடர்பில் கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்.

அதில், குறித்த பரீட்சைகள் அடுத்த வருடம் (2023) ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டுக்கான சாதாரணத் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன.

இந்தமுறை சாதாராணத் தரப் பெறுபேறுகளின் படி, 74 சதவீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், சாதாரணத் தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

READ MORE | comments

2021 க.பொ.த சா/த பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்

Friday, November 25, 2022

 
 2021 க.பொ.த சா/த பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் -   மற்றும் www.doenets.lk  இல் பார்க்கலாம்.

பரீட்சைகள் திணைக்களம்

READ MORE | comments

Thursday, November 24, 2022

 


வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இனி போராட்டத்தில் ஈடுப்பட்டால் இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்குவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கை சிவில் பிரஜைகள் தான் இராணுவத்திலும், பாதுகாப்பு தரப்பிலும் சேவையாற்றுகிறார்கள் என்பதை ஜனாதிபதி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்க வேண்டுமாயின் ஜனாதிபதி இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இராணுவத்தை வரவழைக்க நேரிடும். இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள்

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள். ஆகவே போராட்டத்தை முடக்குவது குறித்து அவதானம் செலுத்துவதை விடுத்து பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண அவதானம் செலுத்துமாறும், அதற்கு கட்சி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை மாத்திரமல்ல, இராணுவத்தையும் இல்லாதொழித்து சென்றுள்ளார் என இராணுவத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

கோட்டபய ராஜபக்ஷ கால்வாய், சுத்தப்படுத்துவதற்கும், கட்டடம் அமைப்பதற்கும், வீதி நிர்மாணிப்புக்கும் இராணுவத்தை பயன்படுத்தினார். அமுதா கத என்ற விசேட படையணியை உருவாக்கி 40 ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டு தனது இராணுவ நிலைப்பாட்டை மேம்படுத்தினார்.

இதன்பிறகு விவசாயத்துறை தொடர்பில் படையணியை ஸ்தாபித்து விவசாயத்தையும் முழுமையாக இல்லாதொழித்தார். நான் இராணுவத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை. இன்று இராணுவத்திற்காக வரிந்துக் கொள்பவர்கள் இராணுவத்தின் சம்பளம் தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்தினரது சம்பள அதிகரிப்புக்காக 20 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகிய எமக்க ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்களினால் நாடு சீரழிந்துள்ளது. இருப்பதையும் சீரழிக்க வந்துள்ளார்கள். இராணுவத்தினரை விற்கு பிழைத்து அரசியல் செய்யும் தரப்பினர் இராணுவத்தினரது சம்பளம் பற்றி கருத்துரைக்கவில்லை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

கடனை செலுத்த சிரமப்படுபவர்களுக்கு சலுகை : இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு !

 


மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி. எம். ஜே. வை. பி பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர் ஒருவர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளாவிட்டால், நிதி வாடிக்கையாளர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
READ MORE | comments

ஆசிரியர் தொழிலுக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் : கல்வி அமைச்சர் !

 


எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலுக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விப் பல்கலைக்கழகம் நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பரீட்சை முறையின் ஊடாகவே கடந்த முறை ஆசிரியர்களை இணைத்துக் கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, 19 பீடங்களை நிறைவு செய்யும் வகையில் உருவாக்கப்படும் தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தின் ஊடாக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டத்திற்குப் பின்னர் அவர்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள், அதன் மூலம் தரம் மற்றும் தரநிலைகளுடன் ஒரு ஆசிரியரை உருவாக்க முடியும்.

தற்போது அரச துறையில் கடமையாற்றும் பயிலுனர் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் பொதுப் பரீட்சை டிசம்பர் மாத நடுப்பகுதியில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

26,000 ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்காணல்கள் மூலம் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
READ MORE | comments

ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் : ஆசிரியர் சங்கம் !

 


ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.


வசதியான ஆடைகளை அணிந்து அலுவலகங்களுக்கு வருமாறு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஜோசப் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள் அவர்களுக்கு வசதியான உடையில் பணிக்கு வரம் வாய்ப்பைப் பயன்படுத்த முடியாது என்று சொன்னால், அது பொதுவான முடிவாக இருக்க வேண்டும். ஆடை விடயத்தில் வெவ்வேறு நபர்களால் முடிவெடுக்க முடியாது. எனவே, அமைப்பு இல்லாமல் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்தால், நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம் கண்டிப்பாக நீதிமன்றம் செல்வோம். 

தற்போது உள்ளதை அப்படி மாற்ற முடியாது. இப்போது சேலை அணிவதில் வெளிப்படையாக எந்தப் பிரச்சினையும் இல்லை. எதிர்காலத்திலும் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவித நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அவர்களுக்கு சீருடை கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் விரும்பி சேலை அணிவார்கள். அது பிரச்சனை இல்லை. இது கட்டாயமாக்கப்பட்டால், நாங்கள் நிச்சயமாக கொடுப்பனவை பெறுவோம்.
READ MORE | comments

சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை !

 


இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் ஒன்று இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


கொவிட் தொற்று நோயுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதால், முறையான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

பாடசாலை ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்டவர் பொலிஸில் சரண் !

 


யாழில் உள்ள பாடசாலையொன்றின் உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த குறித்த பாடசாலையில் கல்விபயிலும் மாணவனின் தந்தை புதன்கிழமை (23) யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


குறித்த பாடசாலைக்குள் செவ்வாய்க்கிழமை (22) அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இருந்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை சந்தேகநபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். அதேவேளை, சந்தேக நபரை கைது செய்யவேண்டும் எனத் தெரிவித்து பாடசாலையின் ஆசிரியர்கள் நேற்றையதினம் கற்பித்தல் செயற்பாடுகளை புறக்கணித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

GCE O/L பரீட்சை பெறுபேறுகள் வெளிவருகின்றன

Wednesday, November 23, 2022


23-11-2022

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான வாய்ப்பிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார்.

செயன்முறைப் பரீட்சை நிறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.

இந்தப் பரீட்சையில் ஐந்து இலட்சத்து 17 ஆயிரத்து 486 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

ஆக்கத்திறன் கதாப்பிரசங்கப் போட்டியில் கல்/கார்மேல் பற்றிமா கல்லுரி மாணவி சாதனை

READ MORE | comments

ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் !

Tuesday, November 22, 2022

 


யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரி ஒன்றின் ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த ஆசிரியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இன்று (22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று , தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த​போது, அந்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர் அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
READ MORE | comments

பாடசாலை சீருடையில் மதுபானம் அருந்திய ஐந்து மாணவர்கள் கைது !

 


பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 5 பேர் இன்று (22) பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாடசாலை சீருடையில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர்கள் 16 மற்றும் 15 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாணந்துறை கடற்கரையில் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தவணைப் பரீட்சை முடிவடைந்ததையடுத்து, பாணந்துறை மதுபானக் கடையில் பியர் கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் பெற்றோரை வரவழைத்து அறிவுரைகள் வழங்கிய பின்னர் ஒப்படைக்கப்படுவார்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
READ MORE | comments

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது கோரத் தாக்குதல்! யாழில் சம்பவம்


யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரான , துரையப்பா கௌரிபாலன் எனும் ஆசிரியரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது கோரத் தாக்குதல்! யாழில் சம்பவம் | Student S Father Assaults Teacher Jaffna

அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று , தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளான்.

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த குறித்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர் அங்கிருந்து மீட்டு, வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது கோரத் தாக்குதல்! யாழில் சம்பவம் | Student S Father Assaults Teacher Jaffna

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

READ MORE | comments

கல்முனை பிரதான பேரூந்து நிலையத்தின் கூரை சேதமடைந்து கீழே விழும் நிலையில்

 அஸ்ஹர் இப்றாஹிம்

கல்முனை பிரதான பேரூந்து நிலையத்தின் கூரை சேதமடைந்து எந்த நேரமும் கீழே விழக்கூடிய நிலையில் காணப்படுவதாக பிரயாணிகள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
கல்முனை பிரதான பேரூந்து நிலையத்திலிருந்து தினசரி நாட்டின் பல இடங்களுக்கும் பேரூந்துகள் பயணிக்கின்ற நிலையில் பேரூந்து நிலையத்தின் கூரை இவ்வாறு சேதமடைந்திருப்பது பலரது விஷயத்திற்கும் உள்ளாகியுள்ளது.

கடலோர பாதுகாப்பு , கழிவுப் பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மையாக்கல் இராஜாங்க அமைச்சினால் நாட்டிலுள்ள 100 நகரங்களை செழிமைமிக்க நகரங்களாக அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் செப்டம்பர்  மாதம் 18.7 மில்லியன் ரூபா செலவில் கல்முனை பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையாலும் கல்முனை மாநகர சபையாலும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

இருந்தும் இவ்வாறு கட்டிட கூரை சேதமடைந்திருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு பிரயாணிகள் கேட்டுள்ளனர்.
READ MORE | comments

மருதமுனை பிரதான நகரத்தை இணைக்கின்ற நவியான் குளப்பகுதியின் ஊடறுத்து செல்கின்ற வீதி புனரமைப்பு

 


FAROOK SIHANகல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை பிரதான நகரத்தை இணைக்கின்ற  நவியான் குளப்பகுதியின்  ஊடறுத்து செல்கின்ற வீதி தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் குறித்த வீதியினால் அப்பகுதியில் வாழும் சுமார் 80 குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று(22) அதன் முதற்கட்ட பணிகள் நிறைவுறும் நிலையில் காணப்படுவதுடன் மக்களும் இலகுவாக தங்களது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்குறித்த இவ்வீதியின் புனரமைப்பு வேலைத்திட்டங்களை அப்பகுதியில் வசிக்கின்ற  பெண்கள் சிலர் சுயாதீனமாக இணைந்து  ஒரு அமைப்பு ஒன்றினை உருவாக்கி வீதியின் புனரமைப்பிற்காக அப்பகுதி தனவந்தர்கள் வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றிடம்  நிதிகளை சேகரித்து இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மேலும் குறித்த வீதியின் புனரமைப்பினை இலகுபடுத்தும் நோக்குடன்  கனரக வாகனம் உழவு இயந்திரங்களின் உதவி தனியாரிடம் இருந்து நாள் வாடகை அடிப்படையில் பெற்று  செப்பனிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.இச்செயற்பாட்டை ஊக்கப்படுத்தும் முயற்சியில் குறித்த வீதிக்கான புனரமைப்பிற்கு  தனது தனிப்பட்ட நிதிப்பங்களிப்பினையும் வழங்கி    கல்முனை மாநகர சபை உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான எம்.எஸ்.எம் நவாஸ் ஒருங்கிணைப்பு   நடவடிக்கையினை  மேற்கொண்டுள்ளார்.மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு  வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட சுமார் 80  குடும்பங்களுக்காக இவ்வீதி துரிதமாக புனரமைக்கப்பட்டு வருவதுடன் நீண்ட காலமாக மழை வெள்ளத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு  பள்ளம் படுகுழிகளுடன் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இன்று  இவ்வீதியை  புனரமைப்பு செய்யும்  வேலைத்திட்டத்தை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்கள் அமைப்பு மற்றும்  மாநகர சபை உறுப்பினருக்கு பொதுமக்கள்   இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர்.
READ MORE | comments

அகில இலங்கை , கிழக்கு மாகாண பெட்மின்டன் சாம்பியன்ஷிப் சுற்றுப் போட்டிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது


அஸ்ஹர் இப்றாஹிம்


இலங்கை பெட்மின்டன் சம்மேளனம் , கிழக்கு மாகாண பெட்மின்டன் சம்மேளனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ள அகில இலங்கை , கிழக்கு மாகாண திறந்த பெட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக தேசிய ரீதியில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 13 முதல் 18 வரை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள மேற்படி சாம்பியன்ஷிப் போட்டியில் 13 , 15 , 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலாருக்குமான தனிநபர், இரட்டையர்கள் ஆட்டம், கனிஸ்ட பிரிவிற்குட்பட்ட இருபாலாருக்குமான கலப்பு இரட்டையர் ஆட்டம் , 30 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட இரு பாலாருக்குமான கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆகியன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசும் சான்றிதழ்களும் , தேசிய மட்டத்தில் சம்பியன்களாகவும் , இரண்டாம் இடத்திற்கும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பணப்பரிசு, சான்றிதழ் , கிண்ணம் மற்றும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விபரங்களுக்கு சுற்றுப் போட்டி பணிப்பாளர் அலியார் பைஸரை 0776078706 தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

எரிபொருள் விலை - எதிர்வரும் மாதம் புதிய நடைமுறை..! வெளியான விசேட அறிவிப்பு!

Sunday, November 20, 2022

 


விலை

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும்,இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதத்தில் இருந்து புதிய முறை

எரிபொருள் விலை - எதிர்வரும் மாதம் புதிய நடைமுறை..! வெளியான விசேட அறிவிப்பு! | Special Announcement About Fuel Prices

மேலும் தெரிவிக்கையில்“விலை சூத்திரத்தை கடந்த 15ம் திகதி கூறியிருந்தோம். அப்படியான சந்தர்ப்பத்தில் தாங்கள் பொருளாதார இழப்பை சமாளிக்க 14 ஆம் திகதி அல்லது 13ம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ளாமல் இருந்தீர்கள்.

அதனால் தற்போது மாதந்தோறும் அதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். இது தொடர்பான பிரேரணை திங்கட்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, சில மணி நேரங்களுக்கு முன்பு எரிபொருள் விலை அதிகரித்ததா அல்லது குறைந்ததா என்பது குறித்து அறிவிக்கப்படும்.

இதேவேளை எதிர்வரும் மாதத்தில் இருந்து இந்தப் புதிய முறையை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்."என தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

அடுத்தாண்டு முதல் பாடசாலைகளில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்..!


 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் நடைமுறைப் பயன்பாட்டை மார்ச் 2023 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் ஆரம்பமானது.

இதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 450 பயிற்றுவிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு முறையான பயிற்சிகளை வழங்கிய பின்னர், அவர்கள் முதலாம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளனர்.

2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணை

அடுத்தாண்டு முதல் பாடசாலைகளில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்..! | New Program Coming To Schools From Next Year

இந்த மாகாண ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் பின்னர், 2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணை முதல் நடைமுறைச் செயற்பாடுகளின் அடிப்படையில் ஆங்கில மொழியைப் பயன்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு கழகம் நடாத்திய கரப்பந்துப் போட்டியில் மட்/குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது

 


மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2022 ம் ஆண்டுக்கான போட்டியில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு மற்றும் மட்டக்களப்பு எவர் சைன் விளையாட்டு என்பன இறுதிப்பலப்பரீட்சை நடாத்தி இருந்தன. இதில் 3க்கு 2 எனும் கணக்கில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலிடம் பெற்று வெற்றிவாகை சூடியது*READ MORE | comments

ஆற்றில் குதித்த இளம் ஜோடி : யுவதியின் சடலம் மீட்பு !

 


மினுவாங்கொடை, ஓபாத, சமுர்த்தி பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் இளைஞரும் யுவதியும் குதித்துள்ள நிலையில்,யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.


மினுவாங்கொடை யட்டியனை பகுதியைச் சேர்ந்த 25 வயதான யுவதியின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் கிராம அதிகாரிக்குத் தகவல் வழங்கியதனையடுத்தே யுவதியின் சடலமும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே ஆற்றில் குதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வத்துபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காணாமல் போயுள்ள இளைஞரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

READ MORE | comments

விரைவில் தமிழர் தாயக காணி பிரச்சினைக்குத் தீர்வு - மாகாணமட்டத்தில் நியமிக்கப்படவுள்ள குழு!

Saturday, November 19, 2022


வடக்கு மாகாணத்தின் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஆதரவை எதிர்பார்க்கும் ரணில்

விரைவில் தமிழர் தாயக காணி பிரச்சினைக்குத் தீர்வு - மாகாணமட்டத்தில் நியமிக்கப்படவுள்ள குழு! | Northern Province Land Issue Ranil Fuel Crisis

அதற்காக வடமாகாணத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அதுமட்டுமன்றி வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன.

இவற்றுக்குத் தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், செட்டிகுளம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் வழங்கப்படாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன் போது செட்டிகுளம் பிரதேசத்தின் காணிப்பிரச்சினை தொடர்பில் மத்தியஸ்தம் செய்து 03 மாதங்களுக்குள் தீர்வுகாணுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நீதியமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாண மக்களின் வீட்டுப் பிரச்சினை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும், அதற்கு மேலும் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

விரைவில் தமிழர் தாயக காணி பிரச்சினைக்குத் தீர்வு - மாகாணமட்டத்தில் நியமிக்கப்படவுள்ள குழு! | Northern Province Land Issue Ranil Fuel Crisis

இதன்போது கருத்துத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாடளாவிய ரீதியில் தற்போது பல வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், றிசாத் பதயுதீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ், அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

மாகாணத்தில் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா அதிபரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றதுடன், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

READ MORE | comments

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை !

 


சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.


இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறு பரப்புரைகளை பரப்பும் பலர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விபரங்களை கட்சியின் சட்ட குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த அவதூறு பரப்புரைகளை தற்போது சமூக ஊடகங்களில் பல குழுக்கள் முன்னெடுத்து வருவதாகவும், பல்வேறு பெயர்களில் தோன்றி பொதுஜன பெரமுன மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் சேறு பூசும் சமூக ஊடகங்களில் இந்த குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.
READ MORE | comments

காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்க தீர்மானம் : ஜனாதிபதி !


 ரணில் விக்ரமசிங்க, நாடளாவிய ரீதியில் தற்போது பல வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


வவுனியா குளம் மற்றும் திருக்குளம் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், உரப்பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் விநியோக நடவடிக்கைகளை சீர்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

வடமாகாணத்தில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதுர்தீன் விளக்கமளித்ததுடன், அது தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
READ MORE | comments

இரண்டு வயது பெண் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள் !


 உயிர்கொல்லி போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை யாழ்ப்பாணம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான. நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.


முல்லைத்தீவு, கொக்கிளாய் கிழக்கு பகுதியை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து அவர் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

இந்நிலையில் வைத்தியர்களின் கோரிக்கை அடிப்படையில் குழந்தையை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பெற்றோர் சேர்த்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து உடனடியாக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் குழந்தையின் தந்தை உயிர்க்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குழந்தை வீட்டிலிருந்து போதைப் பொருளை விளையாட்டாக எடுத்து உட்கொண்டு இருக்கலாம் என்று விசாரணைகளில் சந்தேகம் வெளி யிடப்பட்டுள்ளது.

READ MORE | comments

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையின் கரையோர மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Friday, November 18, 2022

 


இந்து சமுத்திரத்தின் சுமத்ரா தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் பெங்குலுவுக்கு அருகில் 212 கிமீ தொலைவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்களை எதிர்கால அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


READ MORE | comments

காகத்தின் கூட்டில் முட்டையிட்ட ரணில் என்கிற குயிலால் சரியான கொள்கைளை நடைமுறைப்படுத்த முடியாது : ஹர்ஷ டி சில்வா !

Wednesday, November 16, 2022

 


சிக்கியிருக்கும் வலையில் இருந்து மீள முடியாது என்பதும் ஜனாதிபதி ரணில் சமர்ப்பித்த வரவு-செலவு திட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.


வரவு- செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கான சம்பளம், மேலதிகக் கொடுப்பனவுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைத்துள்ளார் என்றார்.

காகத்தின் கூட்டில் முட்டையிட்ட ரணில் என்கிற குயிலால் சரியான கொள்கைளை நடைமுறைப்படுத்த முடியாது. அதேபோல் சிக்கியிருக்கும் வலையில் இருந்து மீள முடியாது என்பதும் ஜனாதிபதி ரணில் சமர்ப்பித்த வரவு-செலவு திட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.நாட்டு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும், இலஞ்ச, ஊழல் செயற்பாடுகளை ஒழிக்க வரவு-செலவு திட்டத்தில் ரணில் வாய்திறக்கவில்லை எனவும் குற்றஞ்சுமத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (15) வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு-செலவு திட்டங்களில் நல்ல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் சமூகப் பாதுகாப்பு, நீதி, அரசியல் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஏன் எதனையும் குறிப்பிடவில்லை. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கும்போது நாட்டில் ஏழ்மையின் நிலை 11 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 40 சதவீதமான அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூறுகிறது. நாளொன்றுக்கு தேவைப்படும் 2030 கலரிகளை இந்த ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் எவ்வாறுப் பெற்றுக்கொள்வார்கள்? எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்புத் தரப்பினருக்கு செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனது செலவுகளையும் குறைத்து முன்னுதாரணங்களை நாட்டுக்கு ரணில் வழங்கியிருக்கலாம். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. எதிர்க்காலத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுவதற்குப் வரிசை ஏற்பட்டுள்ளது. நியமிக்கப்பட உள்ள புதிய அமைச்சர்களுக்கு வாகனங்கள், அலுவலகங்கள் வழங்கப்பட வேண்டும். இதனால் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தார். 
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |