அஸ்ஹர் இப்றாஹிம்
கல்முனை பிரதான பேரூந்து நிலையத்தின் கூரை சேதமடைந்து எந்த நேரமும் கீழே விழக்கூடிய நிலையில் காணப்படுவதாக பிரயாணிகள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
கல்முனை பிரதான பேரூந்து நிலையத்திலிருந்து தினசரி நாட்டின் பல இடங்களுக்கும் பேரூந்துகள் பயணிக்கின்ற நிலையில் பேரூந்து நிலையத்தின் கூரை இவ்வாறு சேதமடைந்திருப்பது பலரது விஷயத்திற்கும் உள்ளாகியுள்ளது.
கடலோர பாதுகாப்பு , கழிவுப் பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மையாக்கல் இராஜாங்க அமைச்சினால் நாட்டிலுள்ள 100 நகரங்களை செழிமைமிக்க நகரங்களாக அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 18.7 மில்லியன் ரூபா செலவில் கல்முனை பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையாலும் கல்முனை மாநகர சபையாலும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
இருந்தும் இவ்வாறு கட்டிட கூரை சேதமடைந்திருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு பிரயாணிகள் கேட்டுள்ளனர்.
0 comments: