Home » » பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது கோரத் தாக்குதல்! யாழில் சம்பவம்

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது கோரத் தாக்குதல்! யாழில் சம்பவம்


யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரான , துரையப்பா கௌரிபாலன் எனும் ஆசிரியரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது கோரத் தாக்குதல்! யாழில் சம்பவம் | Student S Father Assaults Teacher Jaffna

அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று , தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளான்.

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த குறித்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர் அங்கிருந்து மீட்டு, வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது கோரத் தாக்குதல்! யாழில் சம்பவம் | Student S Father Assaults Teacher Jaffna

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |