Home » » இரண்டு வயது பெண் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள் !

இரண்டு வயது பெண் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள் !


 உயிர்கொல்லி போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை யாழ்ப்பாணம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான. நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.


முல்லைத்தீவு, கொக்கிளாய் கிழக்கு பகுதியை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து அவர் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

இந்நிலையில் வைத்தியர்களின் கோரிக்கை அடிப்படையில் குழந்தையை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பெற்றோர் சேர்த்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து உடனடியாக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் குழந்தையின் தந்தை உயிர்க்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குழந்தை வீட்டிலிருந்து போதைப் பொருளை விளையாட்டாக எடுத்து உட்கொண்டு இருக்கலாம் என்று விசாரணைகளில் சந்தேகம் வெளி யிடப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |