ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்

Saturday, April 30, 2022

 


குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (29) பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளியாப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவரின் கால் உடைந்துள்ளதுடன் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது, “நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தாக்குவதற்காக மோட்டார் சைக்கிள்கள் சிலர் வருவதாக கூறினார்.. நாங்கள் குறுக்கு வீதியில் நுழைய முற்பட்ட போது எனது முதுகுப்பகுதிக்கு பொல்லால் ஒருவர் தாக்கினார்., பின்னர் நான் பைக்கில் இருந்து விழுந்தேன். அதுவரைதான் எனக்கு நினைவிருக்கிறது. .” என்று குறிப்பிட்டார்.  

READ MORE | comments

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விரிவுரையாளர்களை வெளியேறவிடாது கதவை மூடி மாணவர்கள் போராட்டம்

 மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் இரு மாணவர்கள் மீது விரிவுரையாளர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு தாக்குதல் நடாத்தியதை கண்டித்து நீதிகோரி நிறுவகத்தின் பணிப்பாளர் உட்பட அங்கு கற்பிக்கும் விரிவுரையாளர்களை வெளியே செல்லவிடாது பல்கலைக்கழக கதவை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கல்லடியில் அமைந்துள்ள குறித்த நிறுவகத்தில் கல்விகற்றுவரும் இரண்டாம் வருட 2 மாணவர்களும் ஒரு முதலாம் ஆண்டு மாணவர்கள் உட்பட 3 மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எந்தவிதமான விசாரணையும் இன்றி அவர்களை கல்வி கற்க இடை நிறுத்தப்பட்டனர். அதனையடுத்து அவர்கள் செய்த குற்றத்தை மன்னித்து நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு அவர்கள் மீது கல்வி கற்க தடைசெய்யப்பட்டதை நீக்ககோரி மாணவர்சங்க மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கையை சம்பவதினமான நேற்று காலை முன்வைத்தனர்.

இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்த நிலையில் மாலை 6.30 மணியளவில் தீர்வு அதற்கான தீர்வினை நிர்வாகம் வழங்காத நிலையில் விரிவுரையாளர் கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறிய போது மாணவர்கள் எங்களது கோரிக்கைக்கு தீர்வு வழங்கிவிட்டு செல்லுமாறு கோரி அவர்களை செல்லவிடாது தடுத்தனர்.

இதன் போது மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே முரண்பாடு எற்பட்ட நிலையில் விரிவுரையாளர் ஒருவர் இரு மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாணவர்கள் உடனடியாக பல்கலைக்கழக வாயில் கதவுகளை மூடி தாக்கப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் நீதி கோரி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பல்கலைக்கழக பணிப்பாளர், விரிவுரையாளர்கள் உட்பட 10 மேற்பட்டவர்களை அங்கிருந்து வெளியேற விடாது வாசல் கதவுகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் பொலிசார் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முற்பட்டபோது அவர்களை ஆர்ப்பாட்டகாரர்கள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் மாணவர்கள் குறித்த விரிவுரையாளர் வேண்டாம் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு நீதி வேண்டும், இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு நீதி வேண்டும், கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் இங்கு வர வேண்டும் எனக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து பல்கலைக்கழக விரிவுரையாளர் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பின்னர் நிறுவக பணிப்பாளர் மற்றும் நிர்வாக பிரிவுடன் மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போது மாணவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்ததையடுத்து இரவு 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட விரிவுரையாளர்கள் வெளியேறிச் சென்றனர்.

READ MORE | comments

தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு

 


(மண்டூர் ஷமி)


காத்தான்குடி பொலிஸ்பிவிற்குட்பட்ட செல்வாநகர் ஆரையம்பதி பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தொங்கிய நிலையில் நேற்று (29) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 வயதுடைய பரமானந்தம்-றோஜா இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

முதலைக்குடா கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச்சேர்ந்த குறித்த யுவதி தனது தாய் தந்தையருடன் தென்னம்தோட்டம் ஒன்றினை பராமரித்து வருவதாகவும் தென்னம் தோட்டத்தில் உள்ள மாடி வீட்டின் மேல் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

மதுபானங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

 


உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திருத்தியமைக்கப்பட்ட விலைகளை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களிடம் கலால் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.


குறிப்பிட்ட சில நபர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், வாடிக்கையாளர்கள் செய்த முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட விலைகளை காட்சிப்படுத்தத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மகிந்த பதவி விலக வேண்டும்: போராட்ட களத்தில் சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

 


ஜனாதிபதி மற்றும் பிரதமரை வீட்டுக்கு அனுப்புவதே நமது போராட்டத்துக்கான ஒரே குறிக்கோள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அம்பாறை-  கல்முனையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவண்ணமும் அரசாங்கத்துக்கு எதிரான கோசங்களை எழுப்பியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், எம். ஏ. சுமந்திரன் மற்றும் பெருந்திரளான மக்கள் இணைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

READ MORE | comments

கோட்டாபய ரணிலிடம் விடுத்துள்ள கோரிக்கை

 


இடைக்கால அனைத்துக் கட்சி அரசாங்கம் தொடர்பான வேலைத்திட்டத்துடன் ஏற்படுத்தப்படவுள்ள “தேசிய பேரவையில்” இணைந்துகொள்ளுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்கும் தேவை மற்றும் அதன் அடிப்படை நடவடிக்கையாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களை கொண்ட தேசிய பேரவையை நியமிப்பது தொடர்பான முடிவை அரச தலைவர் எடுத்துள்ளார்.

அதேவேளை, சில வாரங்களுக்கு முன்னர், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், பிரதமர் பதவியை ஏற்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு மக்கள் கூறினால், நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அதனைப் பொறுப்பேற்கத் தயார் எனக் கூறியுள்ளார்.

இதனிடையே ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றால், மேற்குலக நாடுகள் அவருக்கு உதவ முன்வரலாம் எனவும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, நேற்று முன்தினம் அரச தலைவருக்கும் யோஷித ராஜபக்சவுக்கும் இடையில் மூடிய அறையில் பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் போது, இராணுவ வெற்றிக்கு முன்னர் ஒரு அடி பின்நோக்கி நகர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் விதத்தில் ராஜபக்சவினரின் அரசியலை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதமர் தனது பதவியை துறக்க வேண்டும் எனவும் அதற்கு உதவுமாறும் அரச தலைவர் கோரியுள்ளதாக பேசப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் புதல்வர் சஷீந்திர ராஜபக்சவையும் அரச தலைவர் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது

READ MORE | comments

4,643 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

 


2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

2018 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிலுனர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர், 2018 ஆம் ஆண்டு தேசிய கல்வியற் கல்லூரியின் பயிற்சியை நிறைவு செய்துள்ள 4 ஆயிரத்து 643 ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமங்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், மே 4 ஆம் திகதி நியமன கடிதங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்
READ MORE | comments

கொழும்பில் நாளை வன்முறைகள் வெடிக்கும் அபாயம் - அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே முதலாம் திகதியான நாளை கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் கொழும்பிற்கு பயணித்தல், கொழும்பில் இருந்து பயணித்தல், கொழும்பிற்குள் பயணித்தல் போன்ற அனைத்தையும் ஏனைய பயணங்களை மிகவும் கடினமாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாள் முழுவதும் வீதி மூடல் மற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

சில ஆர்ப்பாட்டங்கள் பற்றி அமெரிக்க தூதரகம் அறிந்திருப்பதாகவும், ஆனால் இலங்கை முழுவதும் மேலதிக போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளையதினம் கொழும்பின் பல பகுதிகளில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் தொடர்பல் அமெரிக்க தூதரகம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய  கொழும்பு 6, லலித் அத்துலத்முதலி மைதானத்தில் பிற்பகல் 1:00 மணிக்கு ஆர்ப்பாட்டம். சுமார் 10,000 பேர் பங்கேற்பாளர்கள்.

கொழும்பு 7, விக்டோரியா பூங்காவில் காலை 9:30 மணிக்கு ஆர்ப்பாட்டம். சுமார் 5,000 பேர் பங்கேற்பாளர்கள்.

கொழும்பு 02, ஹைட் பார்க்கில் பிற்பகல் 2:00 மணிக்கு ஆர்ப்பாட்டம். 3,000 பங்கேற்பாளர்கள்.

கொழும்பு 02, ஸ்டென்லி ஜென்ஸ் மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆர்ப்பாட்டம். சுமார் 2,000 பங்கேற்பாளர்கள்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க அலுவலகத்தில் ஆரம்பமாகும் பேரணி 1,000 பங்கேற்பாளர்களுடன் கொள்ளுப்பிட்டி சந்தி நோக்கி வந்தடையும்.

ஏப்ரல் 26 ஆம் திகதி கண்டியில் ஆரம்பமான அணிவகுப்பு நாளை பிற்பகல் 3:00 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

கேம்பல் பூங்காவில் 15,000 பங்கேற்பாளர்களுடன் கூட்டம் நடைபெறும். அமைதியான முறையில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் கூட மோதலாக மாறி வன்முறையாக மாறக்கூடும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது. போராட்டங்களை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

READ MORE | comments

வரலாற்றில் முதல் முறையாக அரச தலைவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம்


நிறைவேற்று அதிகாரம் கொண்ட  அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து திட்டங்களையும் உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

சாதாரணமாக அரச தலைவர் ஒருவருக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தாலும் அரச தலைவருக்கு எதிராக இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில்லை.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் அரச தலைவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை நாட்டுக்கு காட்டுவதும் சர்வதேசத்திற்கு அதனை உறுதிப்படுத்துவதுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

READ MORE | comments

அக்கரைப்பற்று - பனங்காடு பாலத்திற்கு அருகில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு photosஅக்கரைப்பற்று - பனங்காடு பாலத்திற்கு அருகில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள்  இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

READ MORE | comments

காலிமுகத்திடல் போராட்ட களத்தில் இருந்து விசேட செய்தி

Friday, April 29, 2022

 


காலிமுகத் திடல் போராட்ட களத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் செய்தி ஒன்றை வழங்கியுள்ளனர்.

எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று அரசியல்வாதிகளை அழைத்துக்கொண்டு போராட்ட களத்திற்கு வர வேண்டாம் என அவர்கள் அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, மே தினத்தன்று தமது கட்சியினரை காலிமுகத்திடல் போராட்ட களத்திற்கு செல்லுமாறு அறிவித்திருந்தார்.

இதனையடுத்தே போராட்ட களத்தில் உள்ள இளைஞர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

READ MORE | comments

மின்வெட்டுத் தொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பு

 


ரமழான் பண்டிகையை முன்னிட்டு மே 01 (மே தினம்) மற்றும் மே 03 ஆகிய நாட்களில் மின்வெட்டு இருக்காது - ஜானக ரத்நாயக்க, பொதுஜன பெரமுனவின் தலைவர்-

READ MORE | comments

போராட்ட வடிவத்தை மாற்றிய கொழும்பு மக்கள்! நடு வீதியில் சமையலை தொடங்கிய போராட்டக்காரர்கள்

Thursday, April 28, 2022


கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து பாரிய ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மகிந்த மற்றும் அரச தலைவர் கோட்டாபய பதவி விலக வேண்டும் என தெரிவித்து, கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் மக்கள் அனைவரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது மக்கள் பிரதான வீதியில் விறகடுப்பில் சோற்றுக் கஞ்சி சமைத்து வருவதுடன், இதனை மாத்திரமே தற்போது உண்ண வேண்டிய நிலையில் மக்கள் இருப்பதாகவும், தற்போது சமைக்கப்படும் கஞ்சியையே தாம் இன்று உண்ணவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தாம் இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்பதால் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு கோட்டாபய மற்றும் மகிந்த ஆகியோரை வலியுறுத்தியுள்ளதுடன், மக்கள் அனைவரும் காலிமுகத்திடலில் இருக்கும் நிலையில் நாமல் நுவரெலியாவில் தேநீர் அருந்துவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதுடன், அவர்களும் கோட்டாபய மற்றும் மகிந்தவை பதவிகளில் இருந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

READ MORE | comments

கோட்டாபாயவுக்கு எதிராக அணி திரளும் முன்னாள் இராணுவத்தினர்: தென்னிலங்கையில் ஏற்படும் மாற்றங்கள்

Wednesday, April 27, 2022

 


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கை இழந்துள்ளதாக, முன்னாள் இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முடியாது என அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இராணுவ வீரர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் இந்த நாட்டை காப்பாற்றுவதற்காக எங்களை அர்ப்பணித்தோம். ஆனால் தற்போது இடம்பெற்றுள்ள விடயங்களை பார்த்து கவலையடைந்துள்ளோம் என முன்னாள் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கவீனமான இராணுவத்தினரே இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர். நாட்டில் வரி செலுத்துபவர்கள் காரணமாக எமக்கு ஓய்வூதியம் கிடைக்கின்றது.

இந்த நாட்டை காப்பாற்றுவதற்கான இளைஞர்களின் துணிச்சலான முயற்சிக்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டும், அவர்கள் இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக போராடுகின்றனர் என முன்னாள் படைவீரரான குமார தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் 2009 மே 19 ம்திகதி முடிவிற்கு வருவதற்கு ஒருவாரத்திற்கு முன்னர் தனது கால்களை இழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரரான சமகால ஜனாதிபதியும் உத்தரவிட்டனர். இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என குமார குறிப்பிட்டுள்ளார்.

சிறிய எண்ணிக்கையிலான முன்னாள் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் அவர்களின் பிரசன்னம் ராஜபக்சாக்களின் தீவிர ஆதரவாளர்கள் கூட அதிருப்தியடைந்துள்ளனர். முன்னாள் படைவீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து இராணுவ பேச்சாளர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளிப்பது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இராணுவம் ஆதரிக்கின்றது என அவர் குறிப்பிட்டார். அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு எந்த தடங்களையும் ஏற்படுத்த மாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் தெளிவாக தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

READ MORE | comments

மண்ணெண்ணை வாங்க சென்றவர் உயிரிழப்பு!

 


வீட்டுக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 5 மணித்தியாலயங்களுக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர், இன்று (27) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹட்டன் - தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தேவநாயகம் கிருஸ்ணசாமி என தெரியவந்துள்ளது.

ஹட்டன் நகரில் வாடகைக்கு கடையொன்றை பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த நபர், நேற்று (26) மாலை 5 மணியளவில் மண்ணெண்ணையைப் பெறுவதற்காக, எரிபொருள் நிலையத்துக்கு சென்று, சுமார் இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வருகைத் தந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாக தெரிவித்து, வாந்தியும் எடுத்துள்ளதுடன், நித்திரைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அதிகாலை தனது கணவர் நித்திரையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது மனைவி, இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித நோய்களும் இருக்கவில்லை என்றும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருந்தமையாலேயே தனது கணவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
READ MORE | comments

மின்வெட்டுத் தொடர்பான அறிவிப்பு

 


PUCSL ஏப்ரல் 28 முதல் 30 வரை 3 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களுக்கு கீழ்க்கண்டவாறு மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பகுதிகள் ABCDEFGHIJKLPQRSTUVW - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் & 20 நிமிடங்கள்.

பகுதி CC: காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம்

- தலைவர், PUCSL-

READ MORE | comments

எடுக்கப்படும் முடிவுகளுக்கு நான் தயார்! தேரர்களிடம் அறிவித்தார் மகிந்த

 


தற்போதைய நிலையில், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை முன்னெடுத்துச் செல்வதற்காக எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைய செயற்பட தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான பிக்குமாறு நேற்று அலரி மாளிகையில் தன்னை சந்தித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மஹாநாயக்க தேரர்கள் வெளியிட்டுள்ள கடிதம் தொடர்பாக ஓமல்பே சோபித தேரர் இதன் போ பிரதமருக்கு விளக்கியுள்ளார்.

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமான பிக்குகள் இதன் போது தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இடைக்கால அரசாாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமாயின் அது சம்பந்தமாக மஹாநாயக்க தேரர்கள், பிரதான சமய தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களின் இணக்கத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர், ஓமல்பே சோபித தேரர் உட்பட பௌத்த பிக்குகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது எனவும் இதனால், எந்த காரணத்தை கொண்டு நாட்டை அராஜக நிலைமை செல்ல இடமளிக்க போவதில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமருடனான இந்த சந்திப்பில், ஓமல்பே சோபித தேரர், அகலகட சிறிசுமண தேரர், ரஜவத்தே வப்ப தேரர், பாஹிங்கல ஆனந்த சாகர தேரர் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.


Gallery Gallery Gallery
READ MORE | comments

எதிர்வரும் 28 ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் மீண்டும் சுகயீன போராட்டம்

Tuesday, April 26, 2022

 


அதிபர், ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் ஏப்ரல் 28ஆம் திகதி பாரிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் குறிப்பிடுகையில், தற்போது நாட்டில் உருவெடுத்து நீண்டு செல்லும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியினால் அனைத்து வேலை செய்யும் மக்கள் உட்பட அனைத்து இலங்கையரும் மோசமான பிரச்சினைகள் பலவற்றிற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளமையை கூறி தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இத் துர்ப்பாக்கிய நிலைக்கு காரணம் ஜனாதிபதி கோட்டபாய உட்பட தற்போதைய முழு அரசாங்கமே எனக்கூறி மக்கள் நாடு முழுவதும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அரசு ஊழியர்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிபர், ஆசிரியர் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் இருப்பதுடன் அவர்கள் சேவைக்கு சமூகம் அளித்தல், சேவை தளத்திலிருந்து வீடு செல்லல் அத்துடன் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்ற போது போக்குவரத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு, விலையேற்றம் மற்றும்அரசு மற்றும் தனியார் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளமை தொடர்பாக 2022.04.20 திகதி தங்களுக்கு கடிதம் மூலமாக அறியப் படுத்தியும் அதற்கான தீர்வு கிடைக்காமையினால் ஏப்ரல் 25ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்புக்கு நேர்ந்தது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற அரசியல் பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட முழு அரசாங்கத்தையும் பதவி விலக கோரி அரச, அரச ஆதிக்கம் உடைய நிறுவனம் மற்றும் தனியார், பெருந்தோட்டம் உட்பட சகல துறையைச் சேர்ந்த வேலை செய்யும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து 2022.04.28 திகதி அன்று பாரிய தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்..அதற்கமைய அதிபர், ஆசிரியர் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் 2022.04.28 ம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக அதன் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பே புலஸ்தினியைத் தேடிய சிறிலங்கா புலனாய்வுத்துறை!! நீடிக்கும் மர்மம்!!

 


புலஸ்தினி என்ற பெயர் கடந்த 3 வருடங்களாக இலங்கையின் ஊடகப்பரப்பில் அதிகம் பேசப்படும் ஒரு பெயராக இருந்துவருகின்றது.

2019 ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைக் குண்டுதாரிகளுள் ஒருவராக சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி ராஜேந்திரன் சிறிலங்கா காவல்றையால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் பெயர் சாதாரண தேணீர்க்கடை முதல் சிறிலங்காவின் நாடாளுமன்றம் வரை தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைதாரிகள் என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட பெயர்ப்பட்டியலில் ஒரு தமிழ் பெண்ணின் பெயரும் இணைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து IBC-தமிழ் அந்தப் பெண் யார், அவரது பின்னணி என்ன என்று தேடியபோது பல அதிர்ச்சிகரமான உண்மைகளைக் கண்டறிய முடிந்தது.

'உயிர் பறித்த ஞாயிறு' என்ற தலைப்பில் IBC-தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு சிறப்பு ஒளியாவணத்தில் மிக முக்கியமான சில உண்மைகள் இன்றைக்கு 3 வருடங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டிருந்தது.

1. 'புலஸ்தினி' என்ற அந்தப் பெண் 2019 ஈஸ்டர் தினத்தன்று காலியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின்; மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் ஹஸ்த்தும் என்பவரின் மனைவி என்று தெரியவந்தது.

2. ஹஸ்த்தும் என்ற இளஞனால் தனது மகள் கடத்திச் செல்லப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாக எங்களிடம் குற்றம் சுமத்தினார் புலஸ்தினியின் தாயார்.

3. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வரங்களுக்கு முன்னர் 'புலஸ்தினி' என்ற அந்தப் பெண்ணைத் தேடி ஒரு இளைஞன் புலஸ்தினியின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டிருந்தார் என்றும் அந்த இளைஞன் தன்னை சிறிலங்கா புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு 'புலஸ்தினி எங்கே?' என்று கேள்வி எழுப்பியதாகவும் புலஸ்தினியின் தாயார் எம்மிடம் தெரிவித்திருந்தார்.

4. புலஸ்தினி கடத்தப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்திய புலஸ்தினியின் தாயார், 'சிறிலங்கா தௌபிக் ஜமாத்' என்ற அமைப்பு பற்றியும் அந்த அமைப்பின் முக்கியஸ்தரான ராசிக் என்பவரின் பெயரையும் குறிப்பிட்டு, தனது மகளை இஸ்லாம் மதத்திற்கு மதம்மாற்றியது, தனது மகளை கொழும்பில் மறைத்துவைத்தது எல்லாமே இந்த ராசிக் என்பவர்தான் என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

5. சிறிலங்கா தௌஹித் ஜமாத் என்ற அமைப்பின் செயலாளரான இந்த 'ராசிக்' சிறிலங்கா புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்தவர் என்றும், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவிடம் மாதாந்தச் சம்பளம் பெற்றுவந்தவர் என்றும் சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான ராஜித சேனாரெட்ன பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

6. ராசிக் கோட்டாபய ராஜபக்ஹவின் நெருங்கிய சகா என்பதற்கான ஆதாரங்களையும் அமைச்சர் பகிரங்கமாக வழங்கியிருந்தார். உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று ஒரு சில நாட்களில் ஐ.பீ.சி. தமிழ் வெளியிட்ட 'உயிர் பறித்த ஞாயிறு' என்ற தலைப்பிலான அந்தச் சிறப்பு ஒளியாவணத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகளையும் இங்கு சுட்டிக் காண்பிக்க விரும்புகிறோம்.

தற்கொலைத்தாக்குதலை நடாத்தியதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிய புலஸ்தினி, தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்பாகவே தப்பிச் சென்றுவிட்டாரா?- இந்தக் கேள்வியை தாக்குதல் நடைபெற்ற ஒரு சில தினங்களில் எழுப்பியிருந்தோம்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சிலங்காப் புலனாய்வுப் பிரிவினர் சம்பந்தப்பட்டிருப்பது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தோம்.

சிறிலங்கா புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த றொஷhன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் எம்மைத் தொடர்ப்புகொண்டு உடனடியான அந்த ஆக்கத்தையும், செய்தியையும் நீக்கும்படி எமக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.

'புலஸ்தினியின் வீட்டுக்குச் சென்று தேடியது தான்தான்' என்றும், 'தனது மேலதிகாரிகளுக்கு அந்தவிடயம் தெரியும்' என்றும் குறிப்பிட்ட அவர், எதற்காக புலஸ்தினியின் வீட்டுக்கு அவர் சென்றார் என்கின்ற விடயத்தை தெரிவிக்க மறுத்திருந்தார்.

READ MORE | comments

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை அதிகரிப்பு

 


லிட்ரோ உள்நாட்டு எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 4,860 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் -Litro Gas

READ MORE | comments

காலி முகத்திடலில் போராட்டக் களத்தில் பதற்ற நிலை

 


அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்வோம் என தெரிவித்து நடத்தப்பட்டும் இந்த போராட்டத்தில் கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தகவல்களை சிலர் திருடியுள்ளதாகவும், அவர்களை கையும் களவுமாக தற்போது பிடித்ததனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

READ MORE | comments

அடுத்த 48 மணிநேரத்துக்குள் தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும்!

Sunday, April 24, 2022

 


அடுத்த 48 மணிநேரத்துக்குள் தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

அரசுக்கு ஆதரவு வழங்கி வந்த டலஸ் அழகப்பெரும, பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திவிட்டார். மற்றுமொரு ஆளுங்கட்சி உறுப்பினரான சரித ஹேரத்தும், டலஸின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார்.

அத்துடன், எதிரணி உறுப்பினர்களை வளைத்துபோடும் அரசின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகும் முடிவை அறிவிக்கக்கூடும், அவ்வாறு இல்லாவிட்டால் மேலும் சிலர் அரசியிலிருந்து வெளியேறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், பல பகுதிகளில் மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பத் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் அரசாங்கத்திற்குள்ளும் பல்வேறு முரண்பாடுகள், பிணக்குகள் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்ததடுத்த பல்வேறு திருப்பங்கள் அரசியல் மட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

READ MORE | comments

உகண்டாவில் ராஜபக்சவினரின் கறுப்பு பணம்! அம்பலத்திற்கு வரும் பல்வேறு தகவல்கள்

 


இலங்கையின் அரசியல்வாதிகள் வெளிநாட்டு கடன்களை பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை எனவும் அவர்கள் தரகு பணத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டனர் எனவும் பேராசிரியர் அனுர குமார உத்துமன்கே மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சிங்கள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவர்கள் இதனை கூறியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கொள்ளையடிப்பு பிரதானமான ஒரு காரணம். நாட்டின் ஆட்சியாளர்கள் கடனை பெறும் போது அவர்களுக்கு தரகு பணம் கிடைக்கும்.

நாட்டிற்னு கடனுதவியின் கீழ் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது அரசியல்வாதிகள் அவற்றில் இருந்து தரகு பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

கடந்த காலங்களில் வணிக சந்தைகளில் கடன் பெறப்பட்டுள்ளது. தரகு பணத்தை பெறுதற்காகவே வணிக சந்தைகளில் கடனை பெற்றுள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட பல கடன்கள் தமது அரசியல் திட்டங்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,

READ MORE | comments

பால்மா விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு !!

 


இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இவ்வார இறுதியில் மேலும் அதிகரிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


பால்மாவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதால் விரும்பியவாறு அதன் விலையை பால்மா நிறுவனங்கள் அதிகரித்து வருவதாகவும், எவ்வளவு விலை அதிகரிக்குமென கூற முடியாதெனவும் அச்சங்கம் ​மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஒரு கி​லோ பால்மாவின் விலை 800 ‌‌‌ரூபாயிலிருந்து 1000 ‌ரூபாய் வரையில் அதிகரிக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
READ MORE | comments

போதை பொருளுடன் 20 வயது இளம்பெண் கைது

 


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை 780 மில்லிக்கிராம் ஹெரோயின், 2,784 மில்லிக்கிராம் கேரளா கஞ்சா, 5 போதை மாத்திரைகளுடன் இன்று (24) பகல் கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி. பண்டார தெரிவித்தார்.


மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் பிறந்துறைச்சேனை கோவில் வீதியில் உள்ள குறித்த வீட்டை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிசார் முற்றுகையிட்டனர்.

இதன் போது போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய பெண்ணை கைது செய்ததுடன் 780 மில்லிக்கிராம் ஹெரோயின், 2,784 மில்லிக்கிராம் கேரளா கஞ்சா, 5 போதை மாத்திரைகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் ஏற்கனவே இரண்டு தடவைகள் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கையில் வரலாறு காணாத வகையில் 100 வீதத்திற்கும் மேல் அதிகரித்த சவர்க்காரங்களின் விலைகள்

 


சவர்க்காரங்களின் விலைகளை 100 வீதத்திற்கும் மேல் அதிகரிக்க சவர்க்கார இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இலங்கையில் மிகவும் பிரபலமான சவர்க்காரமான 115 கிராம் சன்லைட் சர்வர்க்காரத்தின் விலை 70 ரூபாவாக காணப்பட்டதுடன் தற்போது 135 ரூபாயாக அதிகரித்துள்ளது.

74 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளுக்கான சவர்க்காரத்தின் விலை 175 ரூபாவாக அதிகரித்துள்ளது. 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட லைட் போய் சவர்க்காரத்தின் விலை 145 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்புடன் சலவை தூள், திரவ சவர்க்காரம் ஆகியவற்றின் விலைகளும் 100 வீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனை தவிர பற் தூரிகை, பற்பசை, சேம்பூகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

READ MORE | comments

பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்களால் பதற்றம்

 புதிய இணைப்பு

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக பெருமளவான மாணவர்கள் ஒன்றிணைந்து தற்சமயம் ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர்.  

முதலாம் இணைப்புகொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.  

கொழும்பு காலி முகத்திடலை நோக்கி இவர்கள் பேரணியாகச் செல்ல உள்ளனர். 

கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுக்கப்படுகின்றது. 

எனினும், இந்த போராட்டங்களை தடுப்பதற்கென பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளதுடன், கடமையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  


Gallery 

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |