Home » » அடுத்த 48 மணிநேரத்துக்குள் தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும்!

அடுத்த 48 மணிநேரத்துக்குள் தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும்!

 


அடுத்த 48 மணிநேரத்துக்குள் தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

அரசுக்கு ஆதரவு வழங்கி வந்த டலஸ் அழகப்பெரும, பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திவிட்டார். மற்றுமொரு ஆளுங்கட்சி உறுப்பினரான சரித ஹேரத்தும், டலஸின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார்.

அத்துடன், எதிரணி உறுப்பினர்களை வளைத்துபோடும் அரசின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகும் முடிவை அறிவிக்கக்கூடும், அவ்வாறு இல்லாவிட்டால் மேலும் சிலர் அரசியிலிருந்து வெளியேறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், பல பகுதிகளில் மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பத் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் அரசாங்கத்திற்குள்ளும் பல்வேறு முரண்பாடுகள், பிணக்குகள் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்ததடுத்த பல்வேறு திருப்பங்கள் அரசியல் மட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |