Home » » ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பே புலஸ்தினியைத் தேடிய சிறிலங்கா புலனாய்வுத்துறை!! நீடிக்கும் மர்மம்!!

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பே புலஸ்தினியைத் தேடிய சிறிலங்கா புலனாய்வுத்துறை!! நீடிக்கும் மர்மம்!!

 


புலஸ்தினி என்ற பெயர் கடந்த 3 வருடங்களாக இலங்கையின் ஊடகப்பரப்பில் அதிகம் பேசப்படும் ஒரு பெயராக இருந்துவருகின்றது.

2019 ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைக் குண்டுதாரிகளுள் ஒருவராக சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி ராஜேந்திரன் சிறிலங்கா காவல்றையால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் பெயர் சாதாரண தேணீர்க்கடை முதல் சிறிலங்காவின் நாடாளுமன்றம் வரை தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைதாரிகள் என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட பெயர்ப்பட்டியலில் ஒரு தமிழ் பெண்ணின் பெயரும் இணைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து IBC-தமிழ் அந்தப் பெண் யார், அவரது பின்னணி என்ன என்று தேடியபோது பல அதிர்ச்சிகரமான உண்மைகளைக் கண்டறிய முடிந்தது.

'உயிர் பறித்த ஞாயிறு' என்ற தலைப்பில் IBC-தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு சிறப்பு ஒளியாவணத்தில் மிக முக்கியமான சில உண்மைகள் இன்றைக்கு 3 வருடங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டிருந்தது.

1. 'புலஸ்தினி' என்ற அந்தப் பெண் 2019 ஈஸ்டர் தினத்தன்று காலியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின்; மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் ஹஸ்த்தும் என்பவரின் மனைவி என்று தெரியவந்தது.

2. ஹஸ்த்தும் என்ற இளஞனால் தனது மகள் கடத்திச் செல்லப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாக எங்களிடம் குற்றம் சுமத்தினார் புலஸ்தினியின் தாயார்.

3. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வரங்களுக்கு முன்னர் 'புலஸ்தினி' என்ற அந்தப் பெண்ணைத் தேடி ஒரு இளைஞன் புலஸ்தினியின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டிருந்தார் என்றும் அந்த இளைஞன் தன்னை சிறிலங்கா புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு 'புலஸ்தினி எங்கே?' என்று கேள்வி எழுப்பியதாகவும் புலஸ்தினியின் தாயார் எம்மிடம் தெரிவித்திருந்தார்.

4. புலஸ்தினி கடத்தப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்திய புலஸ்தினியின் தாயார், 'சிறிலங்கா தௌபிக் ஜமாத்' என்ற அமைப்பு பற்றியும் அந்த அமைப்பின் முக்கியஸ்தரான ராசிக் என்பவரின் பெயரையும் குறிப்பிட்டு, தனது மகளை இஸ்லாம் மதத்திற்கு மதம்மாற்றியது, தனது மகளை கொழும்பில் மறைத்துவைத்தது எல்லாமே இந்த ராசிக் என்பவர்தான் என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

5. சிறிலங்கா தௌஹித் ஜமாத் என்ற அமைப்பின் செயலாளரான இந்த 'ராசிக்' சிறிலங்கா புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்தவர் என்றும், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவிடம் மாதாந்தச் சம்பளம் பெற்றுவந்தவர் என்றும் சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான ராஜித சேனாரெட்ன பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

6. ராசிக் கோட்டாபய ராஜபக்ஹவின் நெருங்கிய சகா என்பதற்கான ஆதாரங்களையும் அமைச்சர் பகிரங்கமாக வழங்கியிருந்தார். உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று ஒரு சில நாட்களில் ஐ.பீ.சி. தமிழ் வெளியிட்ட 'உயிர் பறித்த ஞாயிறு' என்ற தலைப்பிலான அந்தச் சிறப்பு ஒளியாவணத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகளையும் இங்கு சுட்டிக் காண்பிக்க விரும்புகிறோம்.

தற்கொலைத்தாக்குதலை நடாத்தியதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிய புலஸ்தினி, தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்பாகவே தப்பிச் சென்றுவிட்டாரா?- இந்தக் கேள்வியை தாக்குதல் நடைபெற்ற ஒரு சில தினங்களில் எழுப்பியிருந்தோம்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சிலங்காப் புலனாய்வுப் பிரிவினர் சம்பந்தப்பட்டிருப்பது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தோம்.

சிறிலங்கா புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த றொஷhன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் எம்மைத் தொடர்ப்புகொண்டு உடனடியான அந்த ஆக்கத்தையும், செய்தியையும் நீக்கும்படி எமக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.

'புலஸ்தினியின் வீட்டுக்குச் சென்று தேடியது தான்தான்' என்றும், 'தனது மேலதிகாரிகளுக்கு அந்தவிடயம் தெரியும்' என்றும் குறிப்பிட்ட அவர், எதற்காக புலஸ்தினியின் வீட்டுக்கு அவர் சென்றார் என்கின்ற விடயத்தை தெரிவிக்க மறுத்திருந்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |