Advertisement

Responsive Advertisement

எடுக்கப்படும் முடிவுகளுக்கு நான் தயார்! தேரர்களிடம் அறிவித்தார் மகிந்த

 


தற்போதைய நிலையில், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை முன்னெடுத்துச் செல்வதற்காக எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைய செயற்பட தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான பிக்குமாறு நேற்று அலரி மாளிகையில் தன்னை சந்தித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மஹாநாயக்க தேரர்கள் வெளியிட்டுள்ள கடிதம் தொடர்பாக ஓமல்பே சோபித தேரர் இதன் போ பிரதமருக்கு விளக்கியுள்ளார்.

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமான பிக்குகள் இதன் போது தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இடைக்கால அரசாாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமாயின் அது சம்பந்தமாக மஹாநாயக்க தேரர்கள், பிரதான சமய தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களின் இணக்கத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர், ஓமல்பே சோபித தேரர் உட்பட பௌத்த பிக்குகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது எனவும் இதனால், எந்த காரணத்தை கொண்டு நாட்டை அராஜக நிலைமை செல்ல இடமளிக்க போவதில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமருடனான இந்த சந்திப்பில், ஓமல்பே சோபித தேரர், அகலகட சிறிசுமண தேரர், ரஜவத்தே வப்ப தேரர், பாஹிங்கல ஆனந்த சாகர தேரர் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.


Gallery Gallery Gallery

Post a Comment

0 Comments