ஜனாதிபதி மற்றும் பிரதமரை வீட்டுக்கு அனுப்புவதே நமது போராட்டத்துக்கான ஒரே குறிக்கோள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அம்பாறை- கல்முனையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவண்ணமும் அரசாங்கத்துக்கு எதிரான கோசங்களை எழுப்பியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், எம். ஏ. சுமந்திரன் மற்றும் பெருந்திரளான மக்கள் இணைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments