20 ஆயிரம் தொற்றாளர்களை கடந்த மினுவங்கொட - பேலியகொட கொத்தணி

Monday, November 30, 2020


20 ஆயிரம் தொற்றாளர்களை கடந்த மினுவங்கொட - பேலியகொட கொத்தணி

 இலங்கையில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் மினுவங்கொட - பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,124 ஆக அதிகரித்துள்ளது.

READ MORE | comments

அக்கரைப்பற்று ஆபத்து நிறைந்த பகுதியாக அறிவிப்பு


 சயனொளிபவன் )

அக்கரைப்பற்று பிரதேசம் கொரோனா தொற்று காரணமாக அபாய வலயமாக கிழக்கு மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றில்  மேலும் பலருக்கு தொற்று இருப்பது உறுதியாகியதை அடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
READ MORE | comments

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா- தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் அடையாளம்!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


இதன்படி, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 124 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் குணமடைந்து வீடுகளுக்கு இன்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 560 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொற்றினால் இதுவரை 116 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 6 ஆயிரத்து 544 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், 498 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5 ஆயிரத்து 279 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றைய நாளில் 12 ஆயிரத்து 31 பி சி ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்து 27 ஆயிரத்து 928 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பில் கொரோனா தொற்று காலத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்!!

 


கொரோனா தொற்றுகாலத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.


நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற வேளையில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று(30) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முன் வைத்தனர். அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கமைவாக பாடசாலைகளை முன்னெடுத்து நடாத்திச் செல்வதில் சில நடைமுறைப்பிரச்சினைகள் காணப்படுவதாகவும் பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களின் வரவு 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் வலயக்கல்விப் பணிப்பாளர்களினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களை பாடசாலைக்கு அழைக்காமல் வீடுகளில் இருந்து தொலைக்காட்சி மூலம் இடம்பெறுகின்ற கல்வி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதற்கு பெற்றோர்கள் உறவினர்கள் கவனம் எடுக்க வேண்டும் என்றும் இத்தொலைக்காட்சி கல்வி நடவடிக்கையில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவதும் சிறந்தது என ஆலோசிக்கப்பட்டது. 

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர், ஏ. மயூரன் கருத்து தெரிவிக்கையில் அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கமைவாக பாடசாலைகளை நடாத்திச்செல்லவேண்டும் என்றும் பாடசாலைகளில் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளிகளை பேணல் கைகழுவுதல் போன்ற நடைமுறைகளையும் பின்பற்றுமாறும் கருத்துத்தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ். குலேந்திரகுமார், பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் என். புலநாயகம், கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் ரீ. ரவி, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ. ஞானசூரியம், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ் உமார் மௌலானா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
READ MORE | comments

கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- சூறாவளி ஏற்பட வாய்ப்பு வளிமண்டலவியல் திணைக்களம்!!

 


இலங்கையின் கிழக்கு பகுதியை ஊடறுத்து சூறாவளியொன்று கடந்து செல்லவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை இந்த சூறாவளி கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மீனவர்களை நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரித்துள்ளது.
READ MORE | comments

மட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் திரு .T.ஜசோதரன் அவர்கள் பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வு



 


மட்/சிவாந்த tவித்தியாலய அதிபர்                திரு .T.ஜசோதரன் (SLEAS) அவர்கள்  மட்டு மேற்கு வலயத்துக்கு பிரதிகல்வி பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு அவர்களுக்கு பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள் ஆரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியணிசாரா உத்தியோகத்தர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.







READ MORE | comments

வங்கக்கடலில் உருவாகும் ”புரேவி” புயல்! விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை

 


வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு வங்க கடலின் மத்தியில் நிலை கொண்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புரேவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

READ MORE | comments

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்..!!

 


அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைக்கும் போது தொடர்ந்தும் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் அழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பான அறிவித்தலை அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி விடுத்துள்ளார்.

அரச சேவையின் அவசியத்திற்கமைய நிறுவனங்களின் பிரதானிகளினால் ஒரு ஊழியரை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அழைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த நடவடிக்கைகள் சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் நிறுவனங்களின் பிரதானிகளினால் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் உள்ளடக்கி ஜனாதிபதி செயலகத்தினால் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி மற்றும் 2020ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதிகளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின் ஆலோசனைக்கமைய மீள் அறிவிப்பு வரை செயற்படுமாறு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மீண்டும் திறக்கப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்


 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமானது சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக விமான நிலையத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கவே அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக 44 ஆயிரம் வரையான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைக்க எதிர்பார்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த பேச்சுவார்த்தை சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகளுக்கு இடையே இந்த வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

கலவரத்தால் பற்றியெரிந்த மஹர சிறைச்சாலை; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

 


இலங்கையின் மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற வன்முறையின் போது 6 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக செய்திகளை அறிந்து கொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.


READ MORE | comments

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்..!



கடந்த இரண்டு வாரங்களுக்குள் அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல்லது அங்கு வியாபாரம் செய்பவர்களுடன் நெருக்கமான நேரடி தொடர்பைக்கொண்டிருந்தவர்கள் தமது விபரங்களை தத்தமது பொது சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தி பரிசோதனை செய்வதற்காக பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும்.


உங்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம் அல்லது கணக்கில் எடுக்க முடியாத இலேசான சில அறிகுறிகள் இருக்கலாம். 


ஆயினும், உங்களிடம் இருந்து ஏனையோருக்கு கொரோனா வைரஸ் கிருமிகள் பரவக்கூடும்.


அத்துடன், அவ்வாறானவர்கள் அடுத்து வரும் 14 நாட்களுக்கு தம்மை சுய தனிமைப்படுத்துவதும் அவசியமாகும்.


ஒன்றுபட்டு எமது பிராந்தியத்தை கொரோனாவிலிருந்து பாதுகாக்க உதவுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Dr. N. Ariff,

Regional Epidemiologist,

Office of RDHS,

Kalmunai

READ MORE | comments

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரிப்பு!!

 


கிழக்கு மாகாணத்தில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.


இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, அக்கரைப்பற்றில் 68 பேருக்கு செய்யப்பட்ட PCR பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் 88 பேருக்கும், அம்பாறையில் 95 பேருக்கும், திருகோணமலையில் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை அடுத்து மொத்த கிழக்கு மாகாண கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்குமாறும், முகக்கவசங்களை அணியுமாறும், குழுக்களாக செயற்படுவதை குறைக்குமாறும், தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும், சுகாதார துறையால் அறிவிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை சரியாக கடைப்பிடிக்குமாறும் அவ்வாறு கடைபிடிக்காதவர்களை கைது செய்து தனிமைப்படுத்துவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

தம்பிலுவிலில் கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா !

Sunday, November 29, 2020

 


திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தம்பிலுவில்  கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அக்கரைப்பற்று  சந்தை பகுதியில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றை அடுத்து திருக்கோவில் பிரதேசத்தில் கடைக்காரர்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது .    

கிழக்கு மாகாணத்தில் கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது . 
READ MORE | comments

மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த டிப்பர் வாகனத்தை தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பலி !

 


குருணாகல், கொபேகனே பகுதியில் நேற்றிரவு சட்டவிரோத மணல் அகழ்வுப் பணிகளை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டிந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சட்டவிரோதமாக மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக பொலிஸார் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த டிப்பர் வாகனமொன்றை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் முயற்சித்தபோது, அது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த கொபேகனே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 32 வயதான கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

மட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியை றொட்சி காலமானார்

 


மன்/சவேரியார் பெண்கள் கல்லூரியின் ஆசிரியர் றொட்சி 30.11.2020 அன்று இறைபதமடைந்தார்

அன்னார் மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை பாடசாலைச் சமுகத்தினர் தெரிவித்துக் கொள்வதோடு, ஆத்மா சாந்தியடையவும் பிராத்திக்கின்றார்கள். இறைபதமடைந்த றொட்சியின் இறுதிச் சடங்குகள் 01.12.2020 அன்று மு.ப 9.30 மணிக்கு இடம் பெறும் என அன்னாரது குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்; கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள் !

 


மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமுகத்தினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.


இந் நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் நேற்று(28) சனிக்கிழமை மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிக்கு விஜயம் செய்து பண்ணையாளர்களுட

ன் கலந்துரையாடியிருந்தனர்.


இதன் போது கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் கால்நடைகளை வளர்த்துவருவதாகவும், சில காலமாக பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

எனினும் தற்போது மீண்டும் பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிப்பதுடன் அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவை தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமையினால் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து பாராமரித்து வந்த காணிகளை விட்டு தற்போது வெளியேறி வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்னையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
READ MORE | comments

தம்புள்ள கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..!!

 


தம்புள்ள கல்வி வலயத்திற்குற்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கொரோனா அச்சம் அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
READ MORE | comments

வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை! மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை

 


பி.சி.ஆர் பரிசோதனையைத் தவிர்ப்பவர்களின் வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு ஆஜராக வேண்டாம் என்று நான்கு பேர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்குப் பிரசாரம் செய்து வருவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போது 18 பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 11 கிராம சேவகர் பிரிவுகளும் இதற்குள் அடங்கும். இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகள், கம்பஹா மாவட்டத்தில் 05 பொலிஸ் பிரிவுகள் மற் றும் அடுலுகம பிரதேசத்தில் 09 கிராம சேவை பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி மற்றும் அலவத்த பிரதேசத்தில் 02 கிராம சேகவர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர பல கிராமக சேவகர் பிரிவில் தனிமைப்படுத் தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள பொதுச் சுகாதார பிரிவு அறிவித்தல் விடுத்தால் தவிர்க்காமல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுக்கிறோம்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு ஆஜராக வேண்டாம் என்று ஒரு குழுவினர் பொது மக்களுக்குப் பிரசாரம் செய்து வருவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், 4 பேர் கொண்ட குழு இணையம் மூலம் இந்த செயலை மேற்கொண்டு வருவதாகவும், இது குறித்துச் சிறப்பு விசாரணை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவித்தல் விடுத்து பி.சி.ஆர் பரிசோதனையைத் தவிர்ப்பவர்களுக்கு எதிராகச் சட்டம் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்றும், அவர்களின் வீடுகளுக்குச் சீல் வைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரி வித்துள்ளார்.


READ MORE | comments

வைத்தியருக்கு கொரோனா! 500 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை

Saturday, November 28, 2020

 


கேகாலை – ருவன்வெல்ல பகுதியில் உள்ள அங்குருவெல்லவில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து 500 க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பொருட்படுத்தாமல் குறித்த மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு - நாரஹென்பிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் 14 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

மட்டக்களப்பில் பழமைவாய்ந்த மரமொன்றில் தோன்றிய அதிசய அம்மன்: படையெடுக்கும் பக்தர்கள் (காணொளி இணைப்பு)

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின் திருவுருவம் தெரிவதால் பக்தர்கள் படையெடுத்து வருவதை காண முடிகின்றது.

குறித்த ஆலயத்திலுள்ள எண்பது வருடம் பழமைவாய்ந்த ஆலமரத்தின் விழுதில் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டது போன்று காட்சி அளிப்பதை தொடர்ந்து மக்கள் அங்கு வருவதை காண முடிகிறது

குறித்த இடத்திற்கு வரும் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதையும் பூசைகளும் இடம்பெறுகின்றது நாட்டில் தற்போது அசாதாரன சூழ்நிலையும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மாள் உருவம் தோன்றியதால் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இதன் காரணமாக மக்கள் மிகுந்த பயத்துடன் குறித்த உருவச்சிலையும் ஆலயத்திலுள்ள அம்பாளையும் வழிபட்டு வருவதைக் காணமுடிகின்றது.

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மாள் உருவம் தோன்றியதையடுத்து ஆலயத்தின் பிரதம குரு சத்திய புவேனேஸ்வர சிவாச்சாரியார் விஷேட பூஜையை நடாத்தி வைத்தார்.

READ MORE | comments

கொரோனா தொற்றாளர்கள் 274 பேர் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 22775ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 274 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்களே இன்று இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, பேலியகொடை கொரோனா கொத்தணியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியில், இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்க்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக அதிகத்துள்ளது.

இந்த நிலையில், 6 ஆயிரத்து 12 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
READ MORE | comments

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு!!

 


கிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் திருகோணமலை மாவட்டத்தில் 16 தொற்றாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 தொற்றாளர்களும் அம்பாறை பிராந்தியத்தில் 08 தொற்றாளர்களும் கல்முனை பிராந்தியத்தில் 65 தொற்றாளர்களும் உள்ளடங்குகின்றனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.


அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று(28) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்,
அக்கரைப்பற்று பிரதேசங்களில் ஏற்பட்ட கொத்தணி காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 37 பேரும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மற்றுமொருவரும் சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இறக்காமம் பகுதியை சேர்ந்த ஒருவரும் பி.சி.ஆர் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டு அம்பாறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஆலையடி வேம்பு அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்தொற்றின் பாதிப்பு காணப்படுகின்றது. இதனால் இப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் வீணாக நடமாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பதுடன் அத்தியாவசிய தேவை தொடர்பில் இம்மூன்று பகுதி பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரைக்கும் தனிமைப்படுத்தல் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்படும். இத்தனிமைப்படுத்தலானது 7 நாட்கள் முதல் 14 நாட்கள் தொடர்வதற்கு சாத்தியமுள்ளது. இத்தனிமைப்படுத்தல் நீடிக்க காரணம் தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் சந்தைப்பகுதிக்கு நாளாந்தம் நூற்றுக்கணக்கான நபரகள் வந்து செல்கின்றனர்.இதனால் குறித்த மூன்று பிரதேசத்தில் உள்ளவர்கள் சந்தையுடன் தொடர்புள்ளவர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் அடையாளப்படுத்தப்படும் வரை தனிமைப்படுத்தல் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படும். இந்த நோயின் தாக்கம் குறித்து அறிவதற்கு மக்களின் நடவடிக்கை அமைகின்றது. இந்த தொற்று நோயை சுகாதார துறை பொலிஸ் துறை இராணுவத்தினர் பிரதேச செயலகத்தினாலோ தடுக்க முடியாது. ஆலையடி வேம்பு அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பகுதி மக்கள் தங்களை உணர்ந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மக்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றார்.

இதே வேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் இன்று(28) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

புதிதாக அடையாளப்படுத்தப்பட்டவர்களில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், அட்டாளைச்சேனையில் இருவருக்கும், ஒருவர் ஆலைடியவேம்பு பிரதேச சுகாதார பணிமனைக்குட்பட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்களின் குடும்பங்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.

இதேநேரம் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என கூறிய அவர் புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் முகக்கவசம் அணிவதை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சமுக இடைவெளி பேனாமை, முகக்கவசம் அணியாமை, பலர்ஒன்றுகூடுதல் போன்ற நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படவுள்ளன. இதேவேளை அக்கரைப்பற்று சுகாதாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே தாங்களும் தங்களது உறவுகளும் பாதுகாப்பாக இருக்க கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் அக்கரைப்பற்று நகர் பகுதிக்கு செல்வதை முற்றாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

மேலும் பாடசாலை மாணவர்கள் எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் உறுதிப்படுத்தினார்.
READ MORE | comments

அரச பாடசாலை அதிபர், ஆசிரியர்களது சம்பள முரண்பாடு நீக்கப்படும் வரை இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படும்

 


அரச பாடசாலை அதிபர், ஆசிரியர்களது சம்பள முரண்பாடு நீக்கப்படும் வரை இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படும்.


- பாராளுமன்றில் கல்வி அமைச்சர்-

READ MORE | comments

யாழில் கொரோனா அச்சம்- தனியார் வைத்தியசாலை வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது!!

 


யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.


மேலும், யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள 3 வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.

காரைநகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே யாழ்ப்பாணம் மாநகர சபை பிரிவில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம்- கொழும்பு பயணிகள் மற்றும் பொருட்கள் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பேருந்து மற்றும் பாரவூர்தி வாடிக்கையாளர் நிலையமும் புடவையகம் ஒன்றும் நாவாந்துறையில் ஒரு வியாபார நிலையமும் இவ்வாறு உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலையின் பணியாளர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

READ MORE | comments

மாவீரர் தின எதிரொலி - சுமந்திரன் ஓர் இனவாதி! நாடாளுமன்றில் கடுமையான கூச்சல்

 


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராடி உயிர்நீத்தவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நினைவு கூர்ந்தமையால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை குறுக்கீடு செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, அவருடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் திருவுருவப்படத்துக்கு அவரது தாயாரோடு இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் சுடர் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

வல்வெட்டித்துறை, கம்பர்மலையைச் சேர்ந்த கப்டன் பண்டிதர், 1985 ஜனவரி 9 ஆம் திகதி அச்சுவேலிப் பகுதியில் நடந்த மோதலில் உயிர்நீத்திருந்தார்.

இந்த நிலையில் அவரது நினைவஞ்சலியில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டமையினால் நாடாளுமன்றத்திற்கு அகௌரவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர, கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

எனினும் அமைச்சரின் எதிர்ப்பை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தாம் நினைவேந்தலில் கலந்துகொண்டதை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

அவரது தாயார் தனது சட்டத்துறையில் மிகநெருங்கியவர் என்று குறிப்பிட்ட சுமந்திரன், தென்னிலங்கையில் ஜே.வி.பியினரின் கலவரத்தின் பின்னர் உயிர்நீத்தவர்களை மாவீரர்கள் என்ற பெயரில் நினைவுகூர்வதை எதிர்க்காதவர்கள், ஏன் வடக்கில் இடம்பெற்ற போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்வதை எதிர்க்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன் உயிர்நீத்த ஒவ்வொருவரையும் நினைவுகூர்வதற்கு அவர்களுடைய பெற்றோருக்கு உரிமையிருக்கின்றது என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் அழுத்தமாக சுட்டிக்காட்டினார்.

இருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இந்தக் கருத்தினால் கடும் கோபமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான அட்மிரல் சரத் வீரசேகர,

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜே.வி.பியினரை ஒப்பீடு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியதுடன் ஜே.வி.பியினரது போராட்டத்தை நியாயப்படுத்திக் காண்பித்தார்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்காகவே போராடினார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், அவர்களை நினைவுகூர்ந்ததினால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஓர் இனவாதி என்றும் அவர் முத்திரைப் பொறித்தார்.

இந்த இருவரது வாக்குவாதத்தினால் சபையில் கடுமையான கூச்சல் நிலைமை ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தலையீடு செய்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இருவரது வாக்குவதத்தை தடுத்து சபையை அமைதிப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

READ MORE | comments

எதிர்வரும் நாட்களில் இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும்- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

 


தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இது ஒரு சூறாவளியாக தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி எதிர்வரும் நாட்களில் அதாவது இன்று (சனிக்கிழமை) முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் தென்னிந்தியாவை குறித்த புரவி புயல் தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதுஇதேவேளை நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடக்கு, சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

READ MORE | comments

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

 


ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்நத மற்றும் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட வீடுகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அறிவியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
READ MORE | comments

கிழக்கில் மேலும் 05 பேருக்கு கொரோனா தொற்று- கிழக்கு மாகாணத்தில் மொத்த எண்ணிக்கை 173ஆக அதிகரிப்பு!!

 


கிழக்கு மாகாணத்தில் இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.


இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 173ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, அக்கரைப்பற்றில் 4 பேருக்கும், ஆலையடிவேம்பில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் 88 பேருக்கும், அம்பாறையில் 69 பேருக்கும், திருகோணமலையில் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்

பட்டுள்ளமையை அடுத்து மொத்த கிழக்கு மாகாண கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 173ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்குமாறும், முகக்கவசங்களை அணியுமாறும், குழுக்களாக செயற்படுவதை குறைக்குமாறும், தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும், சுகாதார துறையால் அறி
READ MORE | comments

மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 22279ஆக அதிகரிப்பு!!

Friday, November 27, 2020

 


இலங்கையில் மேலும் 251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 742ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 279ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 410பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 16 ஆயிரத்து 226பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 954 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

5000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான தகவல்!!

 


இலங்கையில் கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தல், ஊரடங்கு உத்தரவு மற்றும் நடமாட்டக் கட்டுபாட்டு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் உணவுப்பொதிகள் என்பன தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.


எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் முன்வைத்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
READ MORE | comments

நாட்டில் மற்றுமொரு வலயத்தில் அதிரடியாக மூடப்பட்ட பாடசாலைகள்


எஹெலியகொட – திவுரும்பிட்டியவில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் நேற்று 44 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.


இதன்படி அந்த தொழிற்சாலையில் இதுவரையில் 60 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பிரதேசத்தில் ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருப்பதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எஹெலியகொடை கல்வி வலயத்தின் பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டன.
READ MORE | comments

அக்கரைப்பற்றுப் பகுதியிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் அரச உத்தியோகத்தர்களை வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு பணிப்பு

 


அக்கரைப்பற்றுப் பகுதியிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் அரச உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் வியாழக்கிழமை(26) நடைபெற்ற கொவிட் செயலணிக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 


மேலும் அவர் தெரிவிக்கையில்,

அக்கரைப்பற்று பகுதியில் கொரோனா தொற்றாளர்கள், அடையாளம் காணப்பட்டதையடுத்து கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று ஆகிய பகுதிகிளிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரச கடமைக்கு வரும் உத்தியோகஸ்த்தர்களை கடமைக்கு வராமல் அவர்களது, வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு பணித்துள்ளோம். காத்தான்குடியிலும் புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மாவட்ட கொரோனா செயலணியில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக கிராமமட்டத்திலே உள்ள 5 பேர் கொண்ட கொரோனா செயலணிக்கு, பிரதேச மட்டத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய பிரதேச செயலாளரின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொது சுகாதார வைத்தியர், ஆகிய குழுவினால் அவர்களுக்கான பயிற்சியை மீண்டும் ஒருதடவை வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது உடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கு மேலாக மட்டக்களப்பு மாநகரத்திற்குப்ட்டப பகுதியில் சிலர் இரகசியமான முறையில் தனியார் வகுப்பக்கள் நடைபெறுவதாகவும் எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதோடு, இதனால் அச்சுறுத்தல் நிலவுவதாகவும் எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அது கண்டறியப்பட்டால் உரிய சுகாதார முறைப்படி நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதாரத் திணைக்களத்தினர் ஒத்துக் கொண்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க கொவிட்- 19 காரணமாக வாழைச்சேனைப் பகுதி முற்றாக மூடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் தொழில்வாய்ப்பை இழந்தமக்களுக்கும், வாழ்வாதாரங்களை இழங்த மக்களுக்கும் அரசாங்கம் 158 மில்லியனை ஒதுக்கீடு செய்து அதற்காக செலவிடப்பட்டுள்ளது. என அவர் இதன்போது அவர் மேலும் அதரிவித்தார்.
READ MORE | comments

FACE BOOK பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி!!

 


இலங்கை பேஸ்புக் பயனாளர்களின் தனிநபர் தரவுக்காப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை காவல் துறையினரால் கூட இலகுவாக அணுக முடியாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழொன்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளைக் கோரும் சட்டத் துறையினர் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பாதுகாப்பு கொள்கைக்கான தலைவர் Amber Hawkes இதனை கூறியுள்ளார்.

அடிப்படை பயனர் தரவு என அழைக்கப்படும் மிகவும் அடிப்படை மட்டத்திலான தரவுகளே தம்மிடம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பயனர்கள் எவரேனும் உள்ளூர் சட்டங்களை மீறியிருந்தால் அது தொடர்பிலான கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் இவ்வாறான கோரிக்கைகளை உள்ளூர் சட்டங்கள் குறித்து தெளிவுடைய தமது நிபுணர் குழு பரிசீலித்து தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேருந்து கோர விபத்து!

 


ஓமோன் நாட்டில் இருந்து வருகை தந்த 254 பேர், 11 பேருந்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் 25 பேரை கொண்டு யாழ்நோக்கி சென்ற பேருந்து இன்று காலை 8.00 மணியளவில் பச்சிலைப்பள்ளி அரசர் கேணி பகுதியில் விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மூவர் யாழ்.போதன வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |