Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரிப்பு!!

 


கிழக்கு மாகாணத்தில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.


இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, அக்கரைப்பற்றில் 68 பேருக்கு செய்யப்பட்ட PCR பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் 88 பேருக்கும், அம்பாறையில் 95 பேருக்கும், திருகோணமலையில் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை அடுத்து மொத்த கிழக்கு மாகாண கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்குமாறும், முகக்கவசங்களை அணியுமாறும், குழுக்களாக செயற்படுவதை குறைக்குமாறும், தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும், சுகாதார துறையால் அறிவிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை சரியாக கடைப்பிடிக்குமாறும் அவ்வாறு கடைபிடிக்காதவர்களை கைது செய்து தனிமைப்படுத்துவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments