இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 124 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் குணமடைந்து வீடுகளுக்கு இன்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 560 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொற்றினால் இதுவரை 116 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 6 ஆயிரத்து 544 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், 498 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5 ஆயிரத்து 279 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்றைய நாளில் 12 ஆயிரத்து 31 பி சி ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்து 27 ஆயிரத்து 928 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: