சம்பளத்தை மும்மடங்காக அதிகரித்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி

Monday, November 30, 2015

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதிக்கான மாத சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவில் இருந்து 97 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
2006 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி அவர் தனது சம்பளத்தை அதிகரித்துக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாகவே மகிந்த ராஜபக்சவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் வழங்கப்படும் ஓய்வூதியத்தில் ஏற்றதாழ்வு இருந்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாளாந்தம் 2 கோடியே 50 லட்சத்திற்கும் மேலதிகமான நிதியை செலவுக்காக ஒதுக்கி கொண்ட நிலையிலேயே மகிந்த ராஜபக்ச தனது மாத ஊதியத்தை அதிகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவையே சம்பளமாக பெற்றுள்ளதுடன் ஓய்வுபெற்ற பின்னர் அந்த தொகை முழுமையாக ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஓய்வூதியத்தை 97 ஆயிரத்து 500 ரூபா அதிகரிக்கும் யோசனை ஒன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதுடன் அந்த யோசனை தொடர்பில் இந்த வாரம் கலந்துரையாடப்பட உள்ளது.
READ MORE | comments

ஐ.நா காலநிலை மாற்றம் – 2015 மாநாடு இன்று

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாடு இன்று பிரான்சின் பாரீஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த மாநாடானது டிசம்பர் 11ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் உள்ளிட்ட 147 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
READ MORE | comments

திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை

ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அவர்களின் விஜயத்தின் ஒரு கட்டமாக திருகோணமலை கடற்படை முகாமிலும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது முகாமுக்குள் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் ரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதைக் கூடங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.அத்துடன் குறித்த சித்திரவதைக் கூடங்களில் இருந்து மனித எலும்புக் கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிசார் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்ததுடன், எலும்புக்கூடுகளையும் தமது பொறுப்பில் எடுத்திருந்தனர்.
தற்போது குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு, கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலுமபுக்கூடுகள் தொடர்பில் ரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை நடத்த கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
READ MORE | comments

மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர் நாளை முதல் விநியோகம்

பாடசாலை மாணவர்களின் சீருடைகளுக்கான வவுச்சர்கள் நாளை முதலாம் திகதி முதல் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்குவது தொடர்பில் மாகாண மட்ட கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சர் தரம் ஒன்றிலிருந்து கல்வி கற்கும் பிக்கு மாணவர்கள் உட்பட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைகளுக்கான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்படும். 450 ருபாவிலிருந்து 1700 ருபா வரையிலான வவுச்சர்களே இதன் போது வழங்கப்படவுள்ளன.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வவுச்சர் திட்டத்தின் மூலம் பெற்றோர்களும் மாணவர்களும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும். 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் படியே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் நாட்டிலுள்ள அனைத்து கடைகளிலும் சிறந்த தரமான சீருடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் உள்ளுர் விற்பனையாளர்களும் சிறந்த பலனையடைய முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக அரச வைத்தியர்கள் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு

2016 வரவு செலவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னறிவித்தல் எதுவுமின்றி எவ்வேளையிலும் இந்த போராட்டம் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவு செலவு திட்டத்தினூடாக அரச உத்தியோகத்தர்களின் சலுகைகள் பல  இல்லாது செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த பேராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சகல தொழிற்சங்கங்களுடன் வைத்தியர் சங்கத்தினர் விசேட கலந்துரையாடலொன்றை கொழும்பில் நடத்த தீர்மானித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

கூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்தகர்கள் தொடர்பாக இந்த இலக்கங்களுக்கு அறிவிக்கவும்

Sunday, November 29, 2015

வரவு செலவு திட்டத்தினூடாக விலை குறைப்பு செய்யப்பட்ட பொருட்களின் விலையை பழையை விலைக்கே விற்கும் வர்த்தகர்கள் தொடர்பாக தமக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி 011 7 755 481 அல்லது 0117 755 482 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நடலாவிய ரீதியில் இது தொடர்பாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதன்போது யாரேனும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென அதிகார சபை தெரிவித்துள்ளது.
READ MORE | comments

2005ல் ரணிலுக்கு ஜனாதிபதி பதவி இழக்கப்பட்டதற்கான இரகசியம் அம்பலம்!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் வெளிவந்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களின் கருத்துக்களை மாற்றுவதற்காக புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமரிடம் கோரியுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த விசாரணைகளுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை பெற்றது,186,000 என்ற சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்திலே என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணம், வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொண்ட தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிட்டத்தட்ட 3 லட்ச மக்கள் வாக்களிக்க செல்லவில்லை.
இந்த நிலைமை காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் ஒரு தீர்க்கமான பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் அனைத்து முடிவுகளிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மஹிந்த ராஜபக்ச தரப்பினரால் பணம் வழங்கப்பட்டதாக காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி 2007ம் ஆண்டு ஜுன் மாதம் 21ம் திகதி முதல் முறையாக நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.
இதன் போது தானும் பசில் ராஜபக்சவுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்ததாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 200 மில்லியன் பணமும் தேர்தலுக்கு பின்னர் பல்வேறு வகையில் பல பில்லியன் பணமும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ராடா வீடமைப்பு திட்டமும் குறித்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என அவர் மூலம் நாடாளுமன்றில் தகவல் வெளியாகின.
பின்னர் “மவ்பிம” பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் வீட்டிற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அந்த இடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட முறை தொடர்பிலும் அதற்கு தொடர்புடைய நபர்கள் தொடர்பிலும் தகவல் வெளியிட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வர்த்தகத் துறை பிரதானியான எமில்காந்தன் என்பவரே இதன் போது இந்த ஒப்பந்தத்திற்காக புலிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
எமில்காந்தன் மற்றும் டிரான் அலஸ் வர்த்தக பங்காளிகளாக செயற்பட்டுள்ளனர்.
2002ம் ஆண்டு டயலொக் நிறுவனம் வடக்கு மாகாணத்தில் பரவியதற்கான நடவடிக்கைகளும் குறித்த இருவரினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் குறித்த ஜனாதிபதி தேர்தலில் பணம் வழங்கியமை தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களும் ரோஸ்மீட் பிரதேசத்தில் டிரான் அலஸின் அலுவலகத்திலே இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பசில் ராஜபக்ச, எமில் காந்தன், ஜனாதிபதி முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
2005ம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இரு தரப்பினருக்கு இடையிலான நம்பிக்கையை உறுதி செய்துகொள்வதற்காக 180 மில்லியன் கைமாற்றப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான பைகளில் குறித்த பணத்தினை கொண்டு வந்து பசில் ராஜபக்ச, எமில் காந்தனிடம் தன் முன்னால் ஒப்படைத்ததாக டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பின்னர் விஜேதாஸ ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 784 மில்லியன் பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூர் தூதரகம் மூலம் கிடைத்த அமெரிக்க மில்லியன் டொலர் பணத்தினை ரூபாவாக மாற்றி கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு குறித்த பணத்தினை கடந்த அரசாங்கத்தின் முன்னாள் பிரபல அமைச்சர் மற்றும் வர்த்தக நிறுவனத்தின் பிரதானியினால் கொண்டு வரப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் அண்மையில் லண்டனில் வைத்து இந்த நாட்டு அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் இருவரை சந்தித்த விடுதலைப் புலிகளின் புலம்பெயர் பிரதிநிதிகள், விடுதலைப் புலிகள் அமைப்பினால் குறித்த பணம் பெற்றுகொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பினை பிளவுபடுத்துவதற்காக ரணில் விக்ரமசிங்கவினால் சூழச்சிகள் மேற்கொள்ளப்பட்டமையினால் அவரை தோல்வியடைய செய்வதற்காக அரசியல் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அதற்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த பணம் யாரால் பெற்றுகொள்ளப்பட்டிருக்கும் என்பது தொடர்பில்  குழப்ப நிலை ஒன்று உருவாகியுள்ளது.
அதற்கமைய அந்த பணத்திற்கு என்ன நடத்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற யோசனையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன் வைக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் பல சாட்சிகள் தன்னிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு தொடர்புடைய வர்த்தக பிரதானியிடமும் இதுவரையில் டுபாய் நாட்டில் வசிக்கும் எமில் காந்தனிடமும் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டால் குறித்த பணம் இறுதியாக யாருடைய கைக்கு சென்றுள்ளது என்து தொடர்பில் தகவல் தெரிந்துகொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
READ MORE | comments

டெங்கு காய்ச்சலால் 11 மாதங்களில் 44 பேர் பலி

இந்த வருடத்தின் இது வரைரயான காலப் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு இலக்கான 44  பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 11 மாத காலப்பகுதியில் நாட்டில் சகல மாவட்டங்களிலும் 8248 பேர் டெங்னு காய்ச்சலுக்கு இலக்காகியிருந்த நிலையில் அவர்களில் கடமையாக பாதிக்கப்பட்ட 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 4 பேர் கடந்த இரண்டு வாரத்திற்குள் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மைக்காலமாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் நிலவுவதாகவும் இதனால் அது தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
READ MORE | comments

ஜனவரி முதல் புதிய கல்வி உரிமைச் சட்டம்: அமைச்சர் அகில விராஜ் தகவல்

2016 ஜனவரி முதல்  புதிய கல்வி உரிமைச் சட்டமொன்றை  கொண்டு வருவது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக  கல்வியமைச்சர அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற  சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்குவது தொடர்பில் மாகாண மட்ட கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் தினங்களில் பிரதமருடன் கலந்துரையாட இருப்பதாகவும் இதன்போது   தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற தரம் ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

வர்த்தமானியில் தவறவிடப்பட்ட நான்கு பொருட்கள்

வரவு - செலவுத்திட்டத்தின் ஊடாக 11 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், 07 அத்தியாவசிய பொருட்களின் விலை மாத்திரமே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வரவு - செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், பருப்பு, எரிவாயு, நெத்தலி, கட்டா கருவாடு, சாலயா கருவாடு, கடலை, உள்நாட்டு பால்மா, ரின் மீன், குழந்தைகளுக்கான பால்மா, கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றிற்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனினும், வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், எரிவாயு, நெத்தலி, பருப்பு, கடலை, சாலயா கருவாடு. கட்டா கருவாடு, உள்நாட்டு பால்மா ஆகியவற்றின் விலைகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரின் மீன், குழந்தைகளுக்கான பால்மா, கிழங்கு, வெங்காயம் அகியவற்றின் பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
READ MORE | comments

வடகிழக்கு பருவகாற்றால் பல இடங்களில் மழை பெய்யும்

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று வடகிழக்கு பருவக்காற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வட வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல் சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இம்மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது எனவும் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
READ MORE | comments

கைதிகள் விடுவிக்கப்பட்டால் ஜனாதிபதி மாளிகை முற்றுகை: ராவண பலய எச்சரிக்கை

Saturday, November 28, 2015

தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்யுமானால் ஜனாதிபதி செயலகம் முற்றுகை இடப்படும் என்று ராவண பலய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறித்து எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மகஜர் ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை ராவண பலய விடுத்துள்ளது.
அரசியல் கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட ஆரம்பித்துவிடும் எனவும் ராவண பலய அமைப்பு அச்சம் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து கலந்துரையாட நேற்று வருகை தருமாறு ராவனா பலய அமைப்பிற்கு ஜனாதிபதி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு ஜனாதிபதி சென்றிருப்பதால் நேற்றைய சந்திப்பு இரத்து செய்யப்பட்ட போதிலும், ராவண பலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.
இதனையடுத்து உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், இந்த விடயத்தில் ஜனாதிபதி உரிய பதிலை அளிக்காவிட்டால் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
READ MORE | comments

நாடாளுமன்றத்தின் ஊடகவியலாளர் சங்கத்திற்கு இரண்டு தமிழர்கள் தெரிவு

இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் போது இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கினங்க தலைவராக லசந்த வீரகுலசூரிய (லக்பிம) தெரிவுசெய்யப்பட்டுள்ள அதேவேளை பி. கிருபாகரன் (தினக்குரல்) பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செயலாளராக டில்ஷான் தொடங்கொட (டி.வி. தெரண) நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பிரதிச் செயலாளராக சமன் இந்திரஜித் ( த அய்லன்ட்) நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை பொருளாளராக அஷ்வின் ஹெம்மாத்தகம (டெய்லி எப்.டி) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த சங்கத்தின் உறுப்பினர்களாக தயா பெரேரா (மவ்பிம), சிறிபால் வன்னியாராச்சி (சிரச டிவி), பத்மா வேரகொட ஆராச்சி (இதிரி லங்கா), சுராஜ் அல்விஸ் (வி.எப்எம்), மதுஷான் டி சில்வா ( சுவர்ணவாஹினி), ஆரியரத்ன ரணபாகு (லங்காதீப), சிந்தக்க பண்டார (ரூபவாஹினி கூட்டுத்தாபனம்), துஷார வீரரத்ன (பொலிடிக் வெப்) மற்றும் நிரோத காரியவசம் (ஹிரு எப்.எம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அநுர தோரகும்புர (சுயாதீன ரூபவாஹினி), ககனி வீரகோன் (சிலோன் டுடே), சமீர எல்தெனிய (தினமின), ஆர். சனத் (சுடரொலி), பிரபாத் ரத்நாயக்க ( அரசாங்க தகவல் திணைக்களம்), உதித குமாரசிஙக (சண்டே ஒப்சவர்), சமந்த குமார (நெத் எப்.எம்), ருச்சிர டிலன் மதுசங்க (ரிவிர) உள்ளிட்டவர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

செந்தூரனின் மரணம் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புமா? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியின் உயர்தர கலைப்பிரிவு மாணவன் செந்தூரன், இந்நாட்டின் ஜனாதிபதிக்கு ‘அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி’, உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அவரது செயல் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள விரக்திக்கும் உளவியல் தாக்கத்திற்கும் ஒரு உதாரணமாகப் பார்க்கப்படவேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையாகும்.
அரசியல் கைதிகளின் விடுதலையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் தமது வாக்குறுதிகளையும் உறுதிமொழியையும் நிறைவேற்றாத காரணத்தால்
விரக்தியுற்ற செந்தூரன் தனது விரக்தியின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டவுடன் மிகவும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். எமது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இத்தகைய முடிவுகளை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிபெற்று, எமது பிரதேசத்தை மாணவர்கள், இளைஞர்கள் தமது கல்வி மற்றும் ஆளுமையால் அபிவிருத்தி செய்து ஏனைய நாடுகளுடன் போட்டியிடக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
தனது வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தானே மீறும் செயலை, நல்லாட்சி என்று கூறிக்கொள்ளுகிறது இந்த அரசாங்கம். அத்தகைய அரசாங்கத்திற்கு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவினை வழங்கியிருப்பதையிட்டும் நாம் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் தனது காலக்கடத்தல் நாடகத்தை இனியும் அரங்கேற்றாமல், அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியல் ரீதியாக அணுகி அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டவர்கள் இதுவரை காலமும் அனுபவித்த சிறைவாசத்திற்கு இந்த அரசாங்கம் நட்டஈடு வழங்க முன்வரவேண்டும். தமது வாதத்திறமையால் அரசியல் கைதிகளை நிரபராதிகள் என்று நிரூபித்து விடுவித்த சட்டத்தரணிகள் அவர்களுக்கு நட்டஈட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உதவ வேண்டும். இதன் மூலமே வருங்காலத்தில் எழுந்தமானமான கைதுகள் தவிர்க்கப்படும். சட்டவல்லுனர்கள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.
செந்தூரனின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு, அஞ்சலிகளையும் செலுத்துகின்றோம்.
READ MORE | comments

விலை ஏற்றி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வரவு-செலவு திட்டத்தின் மூலம் விலை குறைக்கப்பட்ட பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருப்பதாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் ருவான் லங்கேஸ்வர தெரிவித்துள்ளார்.
இதன் படி பால்மா, பருப்பு, நெத்தலி, கருவாடு மற்றும் தானியவகைகள் போன்ற பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் பற்றி அறிந்தால் அவர்கள் தொடர்பான முறைப்பாட்டை 0117755481 மற்றும் 0117755482 ஆகிய எண்கள் மூலம் அறியத்தர முடியும் எனவும் இந்த அதிகார சபை கூறியுள்ளது.
READ MORE | comments

கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் மத்தி, கிழக்கு மாகாண சபையில் இருந்து வெளியேறுவோம்: யோகேஸ்வரன் எச்சரிக்கை

நல்லாட்சி அரசாங்கம் மனிதாபிமான முறையில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யாவிட்டால் கிழக்கு மாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியவற்றில் இருந்து வெளியேறவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
யாரும் இறந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்கமுடியாது.அது ஒவ்வொரு மனிதனிதமும் தலையாய கடமையாகும்.இலங்கையில் நடைபெற்றது ஒரு போர் அல்ல.அது ஒரு கிளர்ச்சி.ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை போராக கருதுகின்றது.போர் என்பது ஒரு நாட்டின் மீது மேற்கொள்வது.இதுஅவ்வாறு அல்ல ஒரு நாட்டிற்குள் நடைபெற்ற ஒரு கிளர்ச்சியாகும்.
அந்த கிளர்ச்சியின் போது ஒரு இனத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு அந்த இனம் அதிகமான முறையில் கொல்லப்பட்டுள்ளது.தமிழினம் தனது உரிமைக்காக போராடி தனது உயிர்களை தியாகம் செய்துள்ளது.அந்த தியாகத்தினை நினைவுகூரவேண்டிய கடமை இந்த நாட்டின் தேசிய இனம் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு உண்டு.
கடந்த காலத்தில் யுத்த சூழ்நிலையின்போது இறந்த உடல்களை யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பரிமாறிக்கொண்டார்கள்.அது மனிதாபிமான சட்டமாகும்.இறந்த உடல்கள் கௌரவமாக மதிக்கப்படவேண்டும்.இந்த நாட்டில் முன்னர் அதனை நினைவுபடுத்தியுள்ளார்கள்.
தமிழர்களின் ஆட்சியை குலைத்து பெரும்போரை முன்னெடுத்துச்சென்ற துட்டகைமுனு எல்லாளனை வென்ற பின்னர் தன்னோடு போர்புரிந்த எல்லாளனுக்கு சமாதி வைத்தது மட்டுமன்றி அந்த இடத்துக்கு செல்பவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.அந்த தமிழனின் வீரத்தினை அந்த துட்டகைமுனு மதித்துள்ளான்.ஆனால் தற்போதுள்ள அரசாங்கமும் அவர்களுக்கு பின்னால் உள்ளவர்களும் அந்த மரியாதையை செலுத்துவதில்லை.
மாவீரர் தினம் என்பது இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்து,இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அது எந்தவகையிலும் இன்னொரு போராட்டத்தினை தூண்டும் செயற்பாடு அல்ல.இவ்வாறான எண்ணப்பாங்கில் இருந்து அவர்கள் விடுதலையாகவேண்டும்.அவ்வாறான கருத்தினை எக்காலத்திலும் ஏற்படுத்தக்கூடாது.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் இந்த தியாகங்களை செய்துள்ளார்கள் என்று உணர்ந்து அவர்களை மதிக்க முன்வரவேண்டும்.
இந்தியாவில் இந்திரகாந்தியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியின்போது பொற்கோவில் பிரச்சினை ஏற்பட்டது.அந்தவேளையில் சீக்கிர்களுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடாத்தப்பட்டன.அதன்போது பல சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.இந்திய இராணுவம் இதன்போது வெற்றிபெற்று அதனை வெற்றிநாளாக கொண்டாட அன்றைய பிரதமர் இந்திராகாந்தியிடம் அனுமதிகோரியபோது துரதிர்ஸ்டவசமாக எமது நாட்டு மக்களை நாங்களே கொன்றுவிட்டோம். இதுவெற்றிநாள் அல்ல,வேதனையான நாள்.பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் வெற்றிகொள்ளவேண்டும்.அதற்கான வழிகளை பார்க்குமாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கனின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டபோராட்டத்தின்போது ஆபிரகாம் லங்கன் தனது இராணு படையிடம் இந்த யுத்ததின்போது எமது நாட்டு மக்களை கொன்றுவிடாதீர்கள் என தெரிவித்திருந்தார்.
அவ்வாறான ஆட்சியாளர்கள் வேண்டும். ஆனால் இன்று இறந்த உயிர்களைக்கூட சுதந்திரமாக நினைவுகூரமுடியாத நிலை உருவாகிவருவது வேதனைக்குரிய விடயமாகும்.
இதனை தற்போதைய ஆட்சியாளர்களும் முன்னாள் ஆட்சியாளர்களும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதையிட்டு வேதனையடைகின்றோம்.எமது உறவுகள் செய்த தியாகத்தினை நாங்கள் எக்காரணம்கொண்டும் மறக்கமாட்டோம்.நாங்கள் இந்த நிகழ்வினை தொடர்ந்து செய்வோம்.இதை யாரும் தடுக்க முடியாது.
இந்த நல்ல நாளில் அரசாங்கத்திற்கு நாங்கள் ஒன்றை சொல்ல விரும்புகின்றோம். எமது இனம் இந்த மண்ணில் சுதந்திரமாகவும் சகல உரிமைகளையும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகவே இத்தனை உறவுகளும் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். பல உறவுகள் இன்றுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் மகிந்த அரசாங்கம் மிகக் கொடுமையான ஆட்சியை செய்திருந்தாலும் 2009ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட போராளிகளில் 11900கைதிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்திருக்கின்றது.
ஆனால் நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்ற கைதிகள் பலவருடங்களாக பல துன்பங்களை அனுபவித்திருந்தும் இதுவரை அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படாததையிட்டு மிக வேதனையடைகின்றோம்.
கிட்டத்தட்ட 204கைதிகள் அரசியல் கைதிகளாக இருப்பதாக நீதியமைச்சு கூறியிருக்கின்றது. இவர்களில் 56கைதிகள் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றனர். 124பேருக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக கூறப்படுகின்றது. 24பேர் இதுவரை குற்றப்பத்திரம் எதுவுமில்லாது சிறையில் துன்பங்களை அனுபவித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இவர்களை விடுதலை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலில்லை என்றும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இப்படியானால் ஏன் அவர்களை அடைத்து வைத்திருக்கின்றீர்கள்? உங்களுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளுக்காக எங்கள் உறவுகளை இன்னும் அடைத்து வைத்திருக்கின்றீர்களா?
நாங்கள் அரசியல் கைதிகள் விடயமாக கதைத்தபோது 59பேரை மாத்திரமே பிணையிலோ அல்லது புனர்வாழ்வளித்தோ விடுதலை செய்யலாம் என்று கூறியிருக்கின்றார்கள். 39பேரை இதுவரை பிணையில் விடுதலை செய்திருக்கன்றார்கள். மிகுதி 20கைதிகளையா புனர்வாழ்வு என்ற பெயரில் விடுதலை செய்யப்போகின்றீர்கள்?ஏன் இந்த அநியாயம்? இதுதானா நல்லாட்சியின் மகத்துவம்? தமிழர்கள் மூலம் ஆட்சியை பிடித்துவிட்டு அவர்கள் கையைக்கொண்டு அவர்களின் கண்ணையே குத்துவதற்கு சமனாகும்.
அரசாங்கம் சிந்திக்க வேண்டும். நீங்கள் மனிதாபிமானத்துடன் நீதியான முறையிலும் நாட்டை வழிநடத்துவீர்கள் என்பதற்காகவே தமிழர்கள் தங்கள் பொன்னான வாக்குகளை உங்களுக்கு தந்தார்கள். அதை உணர்ந்து சிறைகளில் துன்பங்களை அனுபவித்துவரும் எங்கள் உறவுகளை எதிர்காலத்தில்கூட எதுவித கெடுபிடிகளும் ஏற்படாதவாறு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். அதன் மூலமே இந்நாட்டில் நீதியான முறையில் ஆட்சி நடத்துகின்றோம் என்பதை சர்வதேசத்திற்கு காட்ட முடியும். நல்லாட்சி என்று கூறி ஏமாற்றி வருகின்ற இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த தமிழ் மக்கள் கூறுகின்றார்கள்.
நாங்கள் கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்தின் ஆட்சியாளர்களாக அமர்ந்திருக்கின்றோம். பாராளுமன்றத்தில் குழுத்தலைவர் பதவியை பெற்றிருக்கின்றோம். நீங்கள் இதற்கு இணங்காமல் செயற்பட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் விருப்பத்தின்படி எதிர்க்கட்சியாக இந்த அரசாங்கம் எமக்கு அநீதி இழைத்துவருகின்றது என்பதை காட்டும் வகையில் வெளியேறவேண்டிய சூழல் உருவாகும்.
இந்த மாவீரர் நன்னாளில் எமது உறவுகளின் தியாகங்களை நாங்கள் மதிக்கின்றோம். நாங்கள் அவ்வாறு செயற்படுவதற்கு இடமளியுங்கள். சிறைகளில் துன்பங்களை அனுபவித்துவருகின்ற எமது உறவுகளை உடன் விடுதலை செய்யுங்கள். இல்லாதுவிட்டால் நாங்கள் உங்களுக்கு வழங்கிவரும் அத்தனை ஆதரவுகளையும் உடன் விலக்கிக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் உங்களுக்கு ஆதரவு வழங்குவது பற்றி நாங்கள் சிந்திக்கவேண்டிய சூழல் உருவாகும்.
READ MORE | comments

மட்டக்களப்புகாத்தான்குடியில் சட்டவிரோத மரக்குற்றிகள் கைப்படப்பட்டன

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பெறுமதி மிக்க ஒரு தொகை மரக்குற்றிகள் காத்தான்குடி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.
அம்பாறை விபிலை பிரதேசத்திலிருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை லொறி ஒன்றில் காத்தான்குடி பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.கோணர தெரிவித்தார்.
லொறி ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட தேக்கு மரக்குற்றிகள் 12, முத்திரை மரக்குற்றிகள் 41 கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், லொறிக்கு 50,000 தண்டப்பணமும் விதிக்கப்பட்டதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் மரக்குற்றிகளை நீதி மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
tree-03
READ MORE | comments

தந்தையைக் கொலை செய்த 15 வயது மகன் கைது

பதுளை மாவட்டத்தின் – ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் – ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் 27.11.2015 இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
son_killed_father_001son_killed_father_002
READ MORE | comments

திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது: கடற்படைத் தளபதி

திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது என கடற்படைத் தளபதி விளக்கம் அளித்துள்ளார்.
திருகோணமலை கடற்படை முகாமில் காணப்படும் நிலக்கீழ் முகாம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
திருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய சிறைக் கூடமொன்று அமைக்கப்பட்டு இயங்கி வந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இலங்கை பிரிட்டன் காலணித்துவ ஆட்சியில் இருந்த போது இந்த நிலக்கீழ் முகாம் நிர்மானிக்கப்பட்டது.
பிரிட்டன் ஆட்சியாளர்களினால் நிர்மானிக்கப்பட்ட நான்கு நிலக்கீழ் ஆயுதக் களஞ்சியங்கள் திருகோணமலை கடற்படை முகாமில் காணப்படுகின்றது.
கடற்படை முகாமின் பாதுகாப்பிற்காக இந்த ஆயுதக் களஞ்சியம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் பீரங்கி வெடிகுண்டுகளை களஞ்சியப்படுத்தவும் அந்தப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தங்கவும் ஆயுதக் களஞ்சியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விமானப்படை முகாம் வான் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கடற்படையினர் இந்த நிலக்கீழ் முகாமினை பொருட்களை களஞ்சியப்படுத்த பயன்படுத்தியுள்ளது.
மேலும் இந்த முகாமை பார்வையிடுவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணையொன்று நடத்தப்பட்டு வருகின்றது என கடற்படையின் தளபதிää கொழும்பு ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் இரகசிய சித்திரவதை கூடமொன்றை நடத்தி வந்ததாக சுமத்தப்பட்ட குற்;றச்சாட்டை நிராகரிக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

2016 வரவுசெலவுத்திட்டம் வசதி படைத்தவர்களுக்கே வரப்பிரசாதம்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Friday, November 27, 2015

தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரவுசெலவுத்திட்டமானது திருப்திகரமானதாக, ஆரோக்கியம் பயப்பதாக அமையவில்லை. பல குறைபாடுகளை கொண்ட வரவுசெலவுத்திட்டமாக உள்ளது. சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் குறைக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு ஒரு மயக்கநிலையை 2016 வரவுசெலவுத்திட்டம் கொடுத்தாலும், உண்மையாக, அறிவுபூர்வமாக நோக்கின் வசதிவாய்ப்பு படைத்தவர்களுக்கு பெரியளவில் அநுகூலங்களை கொடுக்கும் ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே உள்ளது என்றும்,
போரின் அழிவுகளை நேரடியாக சந்தித்துள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களை விசேட தேவைக்குட்பட்ட மாகாணங்களாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தி வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை அறிவிக்கவில்லை என்றும், மிகவும் முக்கியமாக இந்த வரவுசெலவுத்திட்டமானது போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்விதமான நிவாரணங்களையும் அளிப்பதாக இல்லை. போரில் இடம்பெற்ற சொத்தழிவுகள், உயிரிழப்புகள். அங்கவீன இழப்புகளுக்கு நியாயமாக இழப்பீட்டுத்தொகையை வழங்குமாறு ஒவ்வொரு வரவுசெலவுத்திட்டத்தின் போதும் வலியுறுத்தியே வந்திருக்கிறோம். முன்னைய அரசாங்கம் போலவே புதிய அரசாங்கமும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரல்களை, கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்பதாகத்தெரியவில்லை என்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வரவுசெலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரையின் முழுவிவரம்:
காலம்சென்ற முன்னாள் நிதி அமைச்சர் கௌரவ ரொனி டிமெல்லிற்குப் பின்னர் மிக நீண்ட வரவு-செலவு திட்ட உரை நிகழ்த்திய நிதியமைச்சர் அவர்களுக்கு அத்தகைய சக்தி தொடர்ந்தும் கிடைக்க வாழ்த்துகிறேன். இத்தகையதொரு வரவு-செலவு திட்டத்தை சபையில்  சமர்ப்பிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்ததில் தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் மக்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்பதை சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
இந்த வரவு-செலவுத்திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், குழந்தைகளுக்கான பால்மா உள்ளிட்ட பதினொரு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட, பல்வேறுபட்ட புதிய வரிகளும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த புதிய வரிகளில் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி நான்கு வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
வாகனங்களுக்கான இறக்குமதி வரியும் முன்னரை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வரி அதிகரிப்புகள் பொருட்களின் விலைகளை நிச்சயமாக அதிகரிக்கும் என்பதை மறுக்க முடியாது. இந்த நாட்டில் காணப்படும் உள்நாட்டு வளங்களின் உயரிய நுகர்வுக்கு அப்பால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் மீது அதீத நம்பிக்கை கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே  இந்த வரவு-செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும் பட்சத்தில் தான் நிதியமைச்சர் குறிப்பிட்டு உள்ளவாறான விடயங்களை நடைமுறைப்படுத்த முடியும். தற்போதைய நிலையில் ஏறத்தாழ 740 பில்லியன் ரூபாய் துண்டுவிழும் தொகையாக இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் காலப்பகுதியில் நாம் அதிகளவான வெளிநாட்டு கடன்களைப் பெறவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்படப்போகின்றோம். 
இதனால் இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கடன் சுமை அதிகளவில் ஏற்படப்போகின்றது. அந்தவகையில் முந்தைய அரசும் பல பில்லியன் ரூபாய்கள் கடனை விட்டுச்சென்றுள்ளது. ஆகவே இந்த வரவுசெலவுத்திட்டமும் மேலும் பல பில்லியன் ரூபாய்களுக்கு இந்த நாட்டு மக்களை கடனாளிகளாக மாற்றியுள்ளதென்றே கொள்ளவேண்டியிருக்கின்றது. 
எனவே வரவு செலவுத்திட்டத்தில் திட்டமிட்டுள்ளதன் பிரகாரம் வெளிநாட்டு முதலீடுகள் உள்நாட்டுக்குள்ளே வெகுவாக வரவேண்டுமாகவிருந்தால், முதலில் அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது. 
அரசியல் ஸ்திரத்தன்மை என்ற விடயத்திற்கும்  கடந்த கால ஆட்சியாளர்களுக்குமிடையில் பாரிய இடைவெளியொன்றே காணப்பட்டது. அவர்கள் அவ்வாறான ஸ்த்திரத்தன்மையொன்றை ஏற்படுத்துவதற்கு ஒரு தசாப்த ஆட்சிக்காலத்தில் எவ்விதமான முயற்சிகளையும் இதய சுத்தியுடன் ஏடுக்கவில்லை என்பது மிக முக்கிமானதாகின்றது. 
கடந்த கால ஆட்சி என்பது உலக நாடுகளுடன் முரண்பட்ட ஒரு போக்கினை கடைப்பிடித்ததுடன், தமிழ் மக்களை அனுசரித்துப்போகாத மனோநிலையையும் கொண்டிருந்தது. குறிப்பாக தமிழ் மக்கள் தேசிய இனம் என்ற அடையாளத்தை முற்றாக அழிப்பதற்கான செயற்பாடுகளையும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நிருவகிப்பதற்கான அகபுறச் சூழலை வலுவாக்கும் வகையிலுமே நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். 
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்துள்ள  நல்லாட்சி அரசாங்கமானது எவ்வாறான அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தப்போகின்றது? என்பது எதிர்பார்ப்புக்கள் நிரம்பிய மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. சர்வதேச சமூகத்துக்கும், நாட்டு மக்களுக்கும் பல்வேறுபட்ட கருத்துகளையும், வாக்குறுதிகளையும் அள்ளி வழங்கினாலும்  கூட, 
தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதிலும், போரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையிலான உரிய பொறுப்புக்கூறலை  ஏற்றுக்கொள்ளும் மனோநிலையையும் பார்க்கையில் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்குள் ஒருமித்த கருத்து இருப்பதை காணமுடியவில்லை.
இதனை அவர்கள் அன்றாடம் பகிரங்கமாக வெளியிடும் கருத்துக்கள் மூலம்  உணரந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட கோணங்களில் முன்னுக்குப்பின் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 
ஆறு தசாப்தகால பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அரசாங்கத்தரப்பினரின் இவ்வாறான வேறுபட்ட கருத்துக்கள்  ஒவ்வொரு நாளும் நாட்டுக்குள் புதிய புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இதனால் பிரச்சினைகள் நீறுபூத்த நெருப்பாகவே தொடருவதற்கான ஏதுநிலைமைகளே காணப்படுகின்றன. 
அண்மைய நாட்களில் ‘நயினாதீவு’ என்ற பாரம்பரியமிக்க தமிழ் பெயரை ‘நாகதீப’ என்று சிங்கள பெயராக மாற்ற முயற்சிக்கின்றார்கள். இது இனங்களுக்கிடையில் முறுகலை தோற்றுவிக்கும் செயற்பாடாகும். தமிழ் மக்களின் மனங்களில் மென்மேலும் வெறுப்புகளை உருவாக்கும் ஒரு செயலாகும். 
அங்கு ஒரு பௌத்த ஆலயம் தோற்றுவிக்க பட்டிருந்தாலும் கூட, அதனை அவமதிக்காமல் அதற்குரிய மரியாதையை தமிழ் மக்கள் கொடுத்தே வந்திருக்கின்றார்கள். ஆனால் பல நூற்றாண்டுகள் தொன்மைமிக்க, இந்துக்களின் பூர்வீகத்துடன் தொடர்புடைய ஆலயம் அமையப்பெற்றுள்ள இடத்தின் பெயரை மாற்றுவதென்பதை எம்மால் அனுமதிக்க முடியாது. 
ஆகவே இந்த அரசாங்கமும் வரலாற்று ரீதியான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களின் பெயர்களை சிங்கள பௌத்த கிராமங்களாக அல்லது பிரதேசங்களாக  மாற்றுகின்ற செயலில் ஈடுபடுகின்றது. 
அசாதாரண சூழலில் தமது சொந்த மண்ணை விட்டு இடம்பெயர்ந்து பரிதவித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேறவேண்டும் என்பதையே கோரி நிற்கின்றார்கள். அவர்களை துரிதகதியில் மீளக்குடியேறுவதற்கான எத்தகைய அரசியல் தீர்மானங்களையும் இதுவரையில் அரசாங்கம் எடுக்கவில்லை. மாறாக கடந்த அரசாங்கம் விட்டுச்சென்ற புதிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தை புதிய அரசாங்கமும் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது. 
நீங்களும், வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற மறுக்கின்றீர்கள். வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை கொடுக்க மறுக்கின்றீர்கள்.  தமிழ் மக்களை ஒரு அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்தும் அடக்கிவைக்க விரும்புகின்றீர்கள். ஆனால் தேசிய அரசாங்கம் என்றும், நல்லாட்சி அரசாங்கம் என்றும் பெருமையாக உதட்டளவில் கூறிக்கொள்கின்றீர்கள். 
தமிழ் மக்களை பொறுத்தவரையில் மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக்கூறல், சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளாக நியமித்தல் இப்படி இன்னோரன்ன அத்தியாவசிய பிரிச்சினைகளில் இந்த அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான  எவ்வித சமிக்ஞைகளைக்கூட தமிழ் மக்களால் இந்தநொடி வரையிலும் உணர முடியவில்லை. 
முன்னைய அரசாங்கம் விடுவிப்பதாக அமைச்சரவையில் தீர்மானம் எடுத்து அடையாளப்படுத்தியிருந்த மிகச்சொற்ப அளவு காணிகளையே விடுவித்துள்ளதாக நீங்களும் கூறுகின்றீர்கள். அப்படியென்றால் இதன் அர்த்தம் என்ன? தமிழ் மக்களுக்கு உரித்துடைய வேறு காணிகளை உங்களுடைய அரசாங்கம் புதிதாக விடுவிக்காது என்று தானே அர்த்தம். 
மிகவும் முக்கியமாக இந்த வரவுசெலவுத்திட்டமானது போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்விதமான நிவாரணங்களையும் அளிப்பதாக இல்லை. போரில் இடம்பெற்ற சொத்தழிவுகள், உயிரிழப்புகள். அங்கவீன இழப்புகளுக்கு நியாயமாக இழப்பீட்டுத்தொகையை வழங்குமாறு ஒவ்வொரு வரவுசெலவுத்திட்டத்தின்போதும் நாம் வலியுறுத்தியே வந்திருக்கிறோம். 
முன்னைய அரசாங்கம் போலவே உங்கள் அரசாங்கமும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரல்களை, கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்பதாகத்தெரியவில்லை. 
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் யுத்தத்துக்குப் பின்னரான சூழலில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. அவர்கள் வறுமைக்கு மத்தியில் தங்களது குடும்பச் சுமையையும்  சுமந்து செல்ல வேண்டியவர்களாக உள்ளனர். 
அவர்களுக்கான வாழ்வாதாரம், வீட்டுத்திட்டம், சுயதொழில் முயற்சிக்கான வட்டியற்ற இலகு தவணை அடிப்படையிலான கடன் வசதிகள், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி, பராமரிப்பு, சுகாதார வசதிகளை ஏற்படுத்தக் கொடுத்தல் போன்ற விடயங்களில் எவ்விதமான முக்கியத்துவமும், உத்தரவாதங்களும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் கொடுக்கப்படவில்லை. 
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்தியுள்ளோம் என்று கூறினாலும், அவர்களுக்கான தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. 
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நேர்மையான விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்பதை உண்மையாக வெளிப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நியதிகளுக்குட்பட்டு நட்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 
அதேபோல போரின் அழிவுகளை நேரடியாக சந்தித்துள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களை விசேட தேவைக்குட்பட்ட மாகாணங்களாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தி வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை அறிவிக்கவில்லை.
போரினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட படையினருக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் கடந்த அரசாங்கத்தினாலும் தற்போதைய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவு திட்டத்திலும் வழங்கப்பட்டிருந்தன. அதே போரில் அதே பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கும் எதுவித சலுகைகளும் கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கத்திலும் செய்யப்படவில்லை.
வடக்கு-கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அந்தந்த மாகாணசபைகளே முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில், மாகாண சபைகளுக்குப் போதுமான நிதியொதுக்கப்படவில்லை. அதிகாரங்கள் பகிரப்படவில்லை. 
அங்கவீனமாக்கப்;பட்டவர்கள், விசேடதேவைக்குட்பட்டோர் ஆகியோரின் குடும்பங்களுக்கும் இராணுவத்தினருக்கு இணையான வசதிகளும் கொடுப்பனவுகளும் வழங்கப்படவேண்டும்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்ய முடியாமல் பல ஆண்டுகாலம் சிறையில் வைக்கப்பட்டு பின்னர் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைப் போக்குகின்ற வகையில் உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
நல்லாட்சிக்கு அடையாளமாகவும் நல்லிணக்கத்திற்கான குறியீடாகவும் அனைத்து அரசியல் கைதிகளும் அரசியல் ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.
பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஏற்றவகையில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, 
விவசாய உற்பத்தியை பாதிக்காத உற்பத்திசார் தொழிற்சாலைகளை உருவாக்கி அவர்களுக்கு நிரந்தர தொழில்வாய்ப்பையும் வாழ்வில் பிடிப்பையும் நம்பிக்கையையும், வாழ்க்கைக்கு உத்தரவாதத்தையும் அளிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் இந்த உயர்ந்த சபையில் நாங்கள் சிரம்தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம். இந்த உரிமை இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கிறது. சர்வதேச சமூகமும் கடந்த காலங்களில் இதனை வலியுறுத்தியுள்ளது. ஆகவே, இராணுவமும் காவல்துறையும் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க முயலக்கூடாது.
இரகசிய முகாம் குறித்து இந்த நல்லாட்சிக்கான உயரிய சபையில் எமது கட்சியின் தலைவரும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் க.பிரேமச்சந்திரன் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் அன்று கடற்படைத் தளபதி அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். இப்போது ஐ.நா. குழுவினரின் மூலம் எமது சந்தேகம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறான நிலையிலும், அரசாங்கத்தரப்பினரோ ஐ.நா குழுவினர் எவ்வாறு அங்கு சென்றனர்? என வினாக்களை எழுப்புகின்றனரே தவிர, அம்முகாம்கள் தொடர்பாக விரிவான பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துவதற்கும், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நடந்தது? என்பது தொடர்பாகவும் விசாரிக்க தயார் என்ற அறிவிப்பை பகிரங்கமாகச் சொல்ல துணியவில்லை. 
கடந்த காலத்தில் இவ்வாறான இரகசிய முகாம்கள் இருந்தன என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆகவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், கடற்படைத்தளபதி, மற்றும் பாதுகாப்புத்துறைசார் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட சிலருக்கு தெரியாது இவ்விடயம் நிச்சயமாக முன்னெடுக்கப்பட்டிருக்காது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். 
நல்லாட்சியை நிலைநாட்ட ஆட்சிப்பீடமேறியிருக்கும் இந்த அரசாங்கம் அது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? யார் யார் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்? என்பதை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தவேண்டும். 
அவ்வாறான நீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதை தவிர்த்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை, பாதுகாப்பு அதிகாரிகளை தண்டிப்பதற்கு இடமளிக்கமாட்டோம். அவர்கள் யுத்த வெற்றி புருசர்கள் எனச் சித்தரித்துக் கொண்டிருப்பதானது இனங்களுக்கிடையில் ஐயப்பாடுகள் வலுத்து நெருக்கடி நிலைமைகள் ஏற்படுவதற்கான சூழமைவுகளையே தோற்றுவிக்கும். 
வன இலாகாவின் காணி சுவீகரிப்பு நடவடிக்கை
புதிய அரசாங்கத்தின் கீழும் வன இலாகா திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஆகியவை பகிரங்கமாகவே பொதுமக்களின் உறுதி மற்றும் போமிற் நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. அதற்கு அப்பால்  பறவைகள் சரணாலயம், வனவிலங்குகள் பாதுகாப்பு பிரதேசம் போன்ற காரணங்களை முன்வைத்தும் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகிறது. 
இதில் வன இலாகா திணைக்களம் ஏதேச்சதிகாரத்துடன் மிகமோசமாகச் செயற்படுகிறது. 
30 முதல் 40 இற்கும் அதிகமான வருடங்களாக மக்கள் அனுபவித்து வரும் காணிகளில் எல்லைக்கல்லை நாட்டி தனது அதிகாரத்திற்குள் கேட்டுகேள்வி இன்றி கொண்டு வருகிறது. மக்கள் அனுபவித்து வருகின்ற காணிகள் வன இலாகாவின் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக இருந்தாலும் அதனை விடுவித்து மக்களிடம் கையளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
வன்னி மாவட்டத்தில் உள்ள பலகோடி ரூபாய் பெறுமதியான பாலை, முதிரை, தேக்கு மரங்களை சட்டவிரோதமாக அரிந்துகொண்டு செல்வதற்கான அனுமதியை இலஞ்சம் வாங்கிக்கொண்டு வன இலாகா வழங்குகிறது. இதேபோல கருங்கல், ஆற்று மணல், கிரவல் போன்ற கனியவளங்களையும் இராணுவமும் அரச உயர்மட்ட செல்வாக்கு உள்ளவர்களும் வியாபார நோக்கத்தில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு காவல்துறையினரும் துணைபோயுள்ளனர். 
இதனால் சாதாரண மக்கள் வீட்டுத்திட்டம் போன்ற தமது அத்தியாவசிய தேவைகளுக்கு இந்த வளங்களை பெற முடியாத இடர் நிலைமை காணப்படுகின்றது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
போர் ஓய்வுக்குப் பின்னரான காலப்பகுதியில் பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. 
வீதிகள் பிரச்சினை
உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைக்குட்பட்ட பாதைகள் நீண்டகாலமாக திருத்தப்படாமல் இருப்பதால் இந்த பாதைகளில் போக்குவரத்தை மேற்கொள்வதில் பாரிய சிரமம் நிலவுகிறது. 
ஆகவே, அனைத்து வீதி உட்கட்டமைப்பு வசதிகளையும் துரிதமாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பதற்குப் போதிய நிதியொதுக்கீடு அவசியமாகும். 
மின்சார வசதிகள்
வன்னி மாவட்டத்தில் கிராமங்களுக்கான மின்சார வசதிகள் நீண்டகாலமாகப் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இதனால் காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்தும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். 
பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைபடுகின்றன. விவசாயிகளும் மின்சார தேவையை நீண்ட காலமாக பெறமுடியாத நிலையிலுள்ளனர். முன்பிருந்த இலவச மின்சாரத்திட்டத்தை மீண்டும் வழங்குவதற்கும், புதிய இணைப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வீட்டுத்திட்டம் மற்றும் மீள்குடியேற்றம்
மீள்குடியேற்றம் என்பது போர் முடிவடைந்து ஆறரை வருடங்களை கடந்தும், வன்னி மாவட்டத்தில் முழுமைப்படுத்தப்படவில்லை. 
வவுனியா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 803 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 415 வீடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 253 வீடுகளும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் தேவைப்படுகின்றன. மொத்தமாக வன்னி மாவட்டத்தில் மட்டும் இன்னும் 39 ஆயிரத்து 471 வீடுகள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படுவதாக மாவட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  
கடந்த அரசாங்கத்தில் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர் மற்றும் இருவரைக் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படாது என்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கை கடைப்பிடிக்கப்பட்டது. எனவே இந்த நடவடிக்கையை கைவிட்டு புதிய அரசாங்கம் போரால் பாதிக்கப்பட்டு சொத்தழிவுகளை சந்தித்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்க ஆவண செய்ய வேண்டும். 
மீள்குடியேற்ற அமைச்சர் அவர்கள், பயனாளிகளை தெரிவு செய்யும் போது மக்கள் பிரதிநிதிகளையும், அரச அதிகாரிகளையும், சிவில் சமுக அமைப்புகளையும் உள்ளடக்கி சரியான முறையில் தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் பயனாளிகள் தெரிவில் பல்வேறுபட்ட குளறுபடிகளும், அரசியல் தலையீடுகளும் காணப்பட்டமையினால், உண்மையாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு வீட்டுத்திட்டங்கள் கிடைக்காமல் போன அவல நிலை காணப்படுகின்றது. இந்த தவறுகள் திருத்திக்கொள்ளப்பட வேண்டும்.   
வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்குமாறு தொடர்ச்சியாக கோரியவாறே இருக்கின்றோம். ஆனால் தற்போது வரையில் ஒரு இராணுவ வீரரைக் கூட குறைக்கமாட்டோமென்றே கூறிவருகின்றீர்கள். 
வடக்கில் துப்பாக்கி, குண்டுச் சத்தங்கள் இன்றிய நிலைமைகள் இருந்தாலும் பொதுமக்களுக்கு இந்த நாட்டில் காணப்படும் அடிப்படைச் சுதந்திரத்தின் அடிப்படையில் நிம்மதியாக நடமாடும் நிலைமைகள் காணப்படவில்லை.
இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்
குறிப்பாக தற்போதும் கடந்த காலத்தில் விடுதலைப்போராட்டத்துடன் தொடர்புபட்ட குடும்ப அங்கத்தவர்கள் மீதான பார்வை வேறுபட்டதாகவே இருக்கின்றது. தற்போது நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேசதேசத்திற்கு வாக்குறுதியை வழங்கியுள்ள நிலையில் ஏன் தமிழ் மக்கள் இவ்வாறு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றார்கள்? 
வடக்கு மக்கள் தமது உரிமைகளை, தேவைகளை, நியாயங்களை கோரி வெகுஜன பேராட்டங்களை அகிம்சை முறையில் முன்னெடுக்கின்ற சந்தர்ப்பங்களிலும், பொது விழாக்களில் ஒன்றுகூடுகின்றபோதும் ஊடகவியலாளர்களுக்கு அதிகமாக அங்கு புலனாய்வாளர்களின் பிரசன்னம் காணப்படுகின்றது. 
அங்கு சமுகமளிக்கும் புலனாய்வாளர்கள் அனைவரும் தமிழ் பேசும் சமுகங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். நவீன தொலைபேசி, புகைப்பட, காணொளி கருவிகளை பயன்படுத்தி அனைவரையும் அனுமதியின்றி படம்பிடித்துச் செல்கின்ற நிலமைகள் உச்சமான அளவில் காணப்படுகின்றன. 
இத்தகைய புலனாய்வாளர்களை இயக்குவது யார்? இவர்கள் தமது சமுகங்களுக்கு எதிராக செயற்படுவதற்கான மூளைச்சலவையை செய்தது யார்? இவ்வாறு மக்களை அச்சுறுத்தும் வகையிலும் அவர்களின் குரல்களை நசுக்கும் வகையிலும் செயற்படும் புலனாய்வாளர்கள் தேசிய பாதுகாப்புக்காக செயற்பாடுகின்றார்கள் என அர்த்தம் கற்பிக்க போகின்றீர்களா? 
இவ்வாறு புலனாய்வாளர்கள் பிரசன்னம் செய்வது மக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்கள் யுவதிகளை மூளைச்சலவை செய்தோ அல்லது அழுத்தங்களை பிரயோகித்தோ இவ்வாறான செயற்பாடுகளுக்குள் வலிந்து உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள். 
இதனால் விடுதலைப்போராட்டத்தில் தம்மை இணைத்து தற்போது புனர்வாழ்வு பெற்று சமுகத்துடன் இணைந்து வாழும் மனநிலைக்கு திரும்பியுள்ள இளைஞர் யுவதிகளும் அச்சத்துடன் வெளியில் நடமுடியாத நிலைமையில் இருப்பதுடன் இவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு எவரும் முன்வராதவொரு சூழல் ஏற்பட்டுள்ளது.  
இதனால் அவர்கள் தமது எதிர்காலத்தை தொலைத்தவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறான நிலைமைகள் தொடருமாகவிருந்தால் அவர்களுக்கு சமுகத்தின் மீது விரக்தியுறும் சூழலே உருவாகும். அவ்வாறான நிலைமை ஏற்படுமாகவிருந்தால் தென்னிலங்கை தரப்புக்களே முழுமையாக பொறுப்புக்களையும் ஏற்கவேண்டும் என்பதை இச்சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அரசியல் கைதிகள் விவகாரம்
தமிழ் அரசியல் கைதிகளை பிணை அடிப்படையில் விடுத்திருந்தீர்கள். 62 பேரை விடுவிப்பதாக கூறப்பட்டிருந்தாலும் வெறுமனே 39 பேரை மட்டுமே விடுவித்துள்ளீர்கள். அவர்களில் 6 பேர் அரசியல் கைதிகள் அல்லாதவர்களாக காணப்படுகின்றார்கள்.  ஏனையோரை விடுதலை செய்வது குறித்து அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. புனர்வாழ்வு தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைளால் சிக்கல் தன்மையையே ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டவர்கள் என்பதை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு நிபந்தனையற்ற வகையில் விடுதலை அளிப்பதே நல்லெணத்தை விரும்பும் அரசாங்கத்தின் சமிக்ஞையாக இருக்க முடியும்.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கோரிக்கைகளை முன்வைக்கும் போது, இனவாதிகளுக்கு பயந்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான கௌரவ இரா.சம்பந்தன் ஐயா அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற தவறிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். 
அதற்கான உரிய பதிலை வழங்வேண்டுமென இச்சபையிடம் கேட்டுக்கொள்கின்றேன். தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடானது எமக்கு பாரிய ஐயப்பாடுகளை அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது. வாக்குறுதிகள் மீறப்பட்ட நிலையில் இவ்வாறான ஐயப்பாடுகள் ஏற்படுவதென்பது யதார்த்தமானது.
தென்னிலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தரப்பினர் இவ்விடயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி விடுவார்கள் என எமக்கு காரணம் கற்பிக்க முயல்கின்றீர்கள். தமிழ் மக்களுக்கு காணப்படும் பல்வேறு பிரச்சினைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினை முக்கியமானதொன்றாகும். 
அதற்கான தீர்வையளிப்பதற்கே இவ்வாறான தயக்கத்தை காண்பிக்கின்றீர்கள் என்றால், அதிகாரப்பரவலாக்கலுடனான அரசியல் தீர்வொன்றைப் பெறுவது குறித்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றீர்கள்? அவற்றை எவ்வாறு தென்னிலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் புரிந்துணர்வை ஏற்படுத்தப்போகின்றார்கள். 
தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த வரவுசெலவுத்திட்டமானது திருப்திகரமானதாக, ஆரோக்கியம் பயப்பதாக அமையவில்லை. பல குறைபாடுகளை கொண்ட வரவுசெலவுத்திட்டமாக இது உள்ளது. 
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் குறைக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு ஒரு மயக்கநிலையை இந்த வரவுசெலவுத்திட்டம் கொடுத்தாலும், 
உண்மையாக அறிவுபூர்வமாக நோக்கின் வசதி வாய்ப்பு படைத்தவர்களுக்கு பெரியளவில் அநுகூலங்களை கொடுக்கும் ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே இது உள்ளது. வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுக்குள்  கொண்டு வருகின்றோம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு வரவு செலவுத்திட்டமாகவும் இது பார்க்கப்பட வேண்டியுள்ளது. 
ஆனால் உண்மை என்னவெனில், வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவருவதாக இருந்தால், முதலில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுதல் வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டுமாகவிருந்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், இனப்பிரச்சினைக்கு தீர்வும் காணப்பட வேண்டும். 
இவை சாத்தியமாக்கப்படுதல் வேண்டும் என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறைகளையும், பரிந்துரைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் நியாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 
உள்நாட்டு விசாரணையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாகவே உள்ளனர். ஏனெனில் கடந்த ஆணைக்குழுக்கள் உண்மையற்ற, வெளிப்படைத்தன்மையற்ற விடையங்களாகவே இருந்திருக்கின்றன. 
எனவே தற்போதைய ஜெனிவா பேரவையின் பரிந்துரைகளின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படும் விசாரணை குழுக்களில் அதிகளவான வெளிநாட்டு பிரதிநிதிகள் இடம்பெறவேண்டும் என்று தமிழ் மக்களும், நாங்களும் விரும்புகின்றோம். அப்போதுதான் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். 
ஆகவே அவ்விதமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் பொறிமுறைகள் அமைய வேண்டும் என்பது எங்களது பெருத்த எதிர்பார்ப்பாகும். 
எங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் வகையில் விசாரணைகளும், அதன் பொறிமுறைகளும் அமையாத பட்சத்தில், அரசியல் ஸ்திரத்தன்மையானது ஏற்படாது. ஸ்திரத்தன்மை ஏற்படாத பட்சத்தில் நாட்டுக்குள் வெளிநாட்டு முதலீடுகளை உட்கொண்டு வருவதும் சாத்தியமாகாமல் போகும் நிலைமைகள் ஏற்படலாம். அவ்வாறான நிலையில் எவ்வாறு நாட்டை முன்னோக்கிய பாதையில் கொண்டு செல்ல முடியும்.
அரசியலும் பொருளாதாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்தெடுக்க முடியாத விடயதானங்கள். இவற்றில் ஏதாவது ஒருவிடயத்தை மட்டும் இலக்கு வைத்து மற்றையதை எட்டி உதைத்து உலக அரங்கில் தலைநிமிர்ந்து கைவீசி நடப்போமெனக் சிந்திப்பது கானல் நீர்போன்றது. தற்போதைய நிலையில்  மேலைத்தேய நாடுகளின் பங்களிப்புடன் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் வளச்சி மிக்கதொரு பொருளாதரத்தை நாட்;டில் ஸ்தாபிப்பதையுமே அரசாங்கம் இலக்காக கொண்டிருகின்றது. ஆனால் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையேல் அந்த இலக்கு நோக்கிய பயணம் சாத்தியமாகுவதற்கான வாய்ப்புக்கள் நிச்சயமாக ஏற்படப்போவதில்லை. 
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |