2016 ஜனவரி முதல் புதிய கல்வி உரிமைச் சட்டமொன்றை கொண்டு வருவது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வியமைச்சர அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்குவது தொடர்பில் மாகாண மட்ட கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் தினங்களில் பிரதமருடன் கலந்துரையாட இருப்பதாகவும் இதன்போது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற தரம் ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments