இந்த வருடத்தின் இது வரைரயான காலப் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு இலக்கான 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 11 மாத காலப்பகுதியில் நாட்டில் சகல மாவட்டங்களிலும் 8248 பேர் டெங்னு காய்ச்சலுக்கு இலக்காகியிருந்த நிலையில் அவர்களில் கடமையாக பாதிக்கப்பட்ட 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 4 பேர் கடந்த இரண்டு வாரத்திற்குள் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மைக்காலமாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் நிலவுவதாகவும் இதனால் அது தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments