2016 வரவு செலவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னறிவித்தல் எதுவுமின்றி எவ்வேளையிலும் இந்த போராட்டம் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவு செலவு திட்டத்தினூடாக அரச உத்தியோகத்தர்களின் சலுகைகள் பல இல்லாது செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த பேராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சகல தொழிற்சங்கங்களுடன் வைத்தியர் சங்கத்தினர் விசேட கலந்துரையாடலொன்றை கொழும்பில் நடத்த தீர்மானித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments