சிரியாவில் மீண்டும் மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளப்படுவது அதிகரித்துள்ளது குறித்து மனித உரிமை அமைப்புகள் கடும் கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளன. சிரிய அரச படைகளே இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மனிதஉரிமை மற்றும மனிதாபிமான அமைப்புகள் மருத்துவமனைகள் மீதான தாக்குல்களை சர்வதேச சமூகம் அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளன. கடந்த சில வாரங்களில் இட்லிப்பிராந்தியத்தில் நான்கு மருத்துவமனைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஐந்தாவது மருத்துவமனையொன்று சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் வாழும் பகுதியொன்றில் இடம்பெற்ற குண்டுவீச்சு காரணமாக 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இட்லிப் பிராந்தியத்தில் மருத்துவமனைகள் குண்டுவீச்சுக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளமை வெளிப்படையாக தெரிகின்றது இது கண்டிக்கத்தக்க விடயம் என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. புதன் கிழமை குண்டுவீச்வு இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக இரு மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே அவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவுத் ஆனால் இன்னும் எத்தனை ரூபாவினால் அதிகரிப்பது என்று தீர்மானிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி, பெரியவெங்காயம், ரின் மீன், பால்மா, நெத்தலி உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைச் செலவின குழுக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலைகளை குறைக்குமாறு ஆலோசனை வழங்கியதாக கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் கலாநிதி ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஒரு கிலோ நாட்டரசி 74 ரூபாவிற்கும் ஒரு கிலோ சிவப்பு அரிசி 75 ரூபாவிற்கும் ஒரு கிலோ சம்பா அரிசி 84 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ 88 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது. கைக்குத்தல் அரிசிக்கு உயர்ந்த பட்ச கிராக்கி நிலவுகிறது. இந்த வகை அரிசி ஒரு கிலோ 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ நெத்தலி 535 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதோடு, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 125 ரூபாவாகும். ஒரு கிலோ உள்நாட்டு உருளைக் கிழக்கு 130 ரூபாவாகும். ஒரு கிலோ சீனியின் விலை 107 ரூபாவாகும். ஒரு கிலோ பருப்பு 152 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது. ஒரு கிலோ கோதுமை மா 86 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். இவற்றை சதொச கிளைகள் ஊடாக இன்று முதல் குறைந்த விலையில் கொள்வனவு செய்யலாம். இவற்றின் ஊடாக மீன், தேங்காய் போன்றவற்றையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நாடெங்கிலும் 370 சதொச கிளைகள் இயங்குகின்றன. விரைவில் 30 கிளைகள் புதிதாக திறக்கப்படும் கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் கலாநிதி ரி.எம்.கே.பி.தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தல்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சர்வஜன வாக்கெடுப்புக்கான தேர்தல் நடத்தப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அரசாங்கம் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு மூவாயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கூடுதல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 800 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிதாக மாணவர்கள் சேர்த்துக்கொள்ளல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இவர் 30.09.1957ல் மட்/பழுகாமத்தில் பிறந்த இவர் 60வது வயதை நாளை கொண்டாடுகின்றார். தனது முதல் நியமனத்தை 1991 ம் ஆண்டு பெற்றுக் கொண்டு மட்/கன்னங்குடா ம.வில் ஆசிரியராகக் கடமையேற்றார். இங்கு 3 வருடங்கள் கடமையாற்றினார். பின் மட்/பெரிய கல்லாறு ம.கல்லூரியிலும், பட்டிருப்பு தே.பாடசாலையிலும், சிவானந்தா தே.பாடசாலையிலும் ஓய்வு பெறும் வேளையில் பட்டிருப்பு தே.பாடசாலையிலும் கடமையாற்றினார். ஆசிரியர் சேவையில் 26 வருடங்கள் இவர் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்முறைக் கற்பித்திலில் விஞ்ஞான பாடத்தில் தேர்ச்சி பெற்ற இவர் பல புத்தாக்கங்களை படைத்துள்ளார். இதில் இரண்டு விறகு அடுப்பு, நுளம்புபுத்திரி, மின் பகுப்பு உபகரணம், பிளமிங்கின் இடக்கை விதி உபகரணம், யுரேக்கா கிண்ணம் என்பன அடங்கும். இவரின் சேவைகளையும், திறமைகளையும் பிரதி அதிபர்கள், அசிரியர்கள் , மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் பாடசாலை ஒன்றுகூடலில் நினைபடுத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யவுள்ளதாக, தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
13.05.2015 பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா வீடு திரும்பவில்லை.
14.05.2015 வித்தியா சடலமாக மீட்பு
புங்குடுதீவு மக்கள் ஆர்ப்பாட்டம்.
சந்தேகத்தில் மூவர் கைது.
15.05.2015 வித்தியாவின் இறுதி ஊர்வலம்.
நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
18.05.2015 சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது.
04.03.2016 வித்தியாவின் கொலைக்கு ஒரு தலை காதலே காரணம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
04.03.2016 வித்தியாவின் கொலைக்கு சுவிஸில் இருந்து வந்த மற்றுமொரு சந்தேகநபர் திட்டம் தீட்டி கொடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
20.04.2016 வித்தியாவின் வழக்கு விசாரணை தொடர்பில் ஜின் டெக் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளருக்கும், தகவல் ஊடக தொழிநுட்ப மையத்தின் பிரதம பொறியியலாளருக்கும் ஊர்காவற்துறை நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
மரபணு ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதில் உள்ள தாமதம் குறித்து மே மாதம் ஐந்தாம் திகதி தலைமை ஆய்வாளர் மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
18.05.2016 வித்தியா கொலை வழக்கின் முக்கிய மரபணு பரிசோதனை அறிக்கை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
வன்புனர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்திலிருந்து பெறப்பட்ட விந்தணு மாதிரிகளுடன் வழக்கின் முதல் 9 சந்தேகநபர்களின் விந்தணு மாதிரிகள் பொருந்துகின்றனவா என்பது தொடர்பிலான பரிசோதனை அறிக்கையே ஒப்படைக்கப்பட்டது.
13.07.2016 வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
20.09.2016 யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் பாலியல் வன்கொடுமை கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என ஊர்காவற்துறை நீதிமன்றம் அறிவித்தது.
15.11.2016 புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் குறித்த வங்கி தரவுகளை வழங்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
02.02.2017 வித்தியா கொலை வழக்கின் பத்தாம் இலக்க சந்தேகநபரின் பிணை மனுவை, யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நிராகரித்தார்.
வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணைகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தே இந்த பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
22.02.2017 யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கின் 11 ஆம் இலக்க சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராக மாறினார்.
28.04.2017 வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 10 மற்றும் 12 ஆம் இலக்க சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
05.05.2017 கொலை வழக்கு தொடர்பில் ஜூரி சபை அல்லாத, மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்தார்.
ஏழு நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் யாழ். மேல் நீதிமன்றத்தில் அறிவித்தது.
23.05.2017 சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பினால் வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், யாழ். மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டதுடன், அதன் தலைவராக நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
மூவரடங்கிய நீதிபதிகள் குழாமிற்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் சட்ட மா அதிபர் தெரிவித்தார்.
12.06.2017 வித்தியாவின் படுகொலை வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் (ட்ரயல் அட்பார்) யாழ் மேல் நீதிமன்றத்தில் முதற்தடவையாக கூடியது.
இந்த வழக்கின் 9 சந்தேகநபர்களுக்கும் எதிராக சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமாரரட்ணம், யாழ். மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணி நிசாந் நாகரட்ணம் அவர்களுடன் இணைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார். இதன் பிரகாரம் கூட்டு பாலியல் வல்லுறவு, கொலை குற்றச்சாட்டுக்கள் நிரம்பிய 41 குற்றச்சாட்டுக்கள் 9 சந்தேகநபர்கள் மீதும் சுமத்தப்பட்டன.
28.06.2017 மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காட்சிகளை சுவிஸ்குமார் விற்பனை செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததாக பதில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவருக்கு சிறைச்சாலையிலிருந்த சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுப்பதற்கு முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
29.06.2017 இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஃபைன்ஸ் வோகர் நெதர்கூன், சுவிஸ்குமார் சுவிட்சர்லாந்து பிரஜை அல்லவெனவும் சுவிட்சர்லாந்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த இலங்கையர் எனவும் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்ததுடன் தேவை ஏற்படின் சட்ட உதவி வழங்கத் தயார் எனவும் தெரிவித்திருந்தார்.
பார்வையாளர்கள் நீதிமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டு வஆம் இலக்க சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
30.06.2017 நிதி மோசடி தொடர்பில் பிறிதொரு வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மென்பொருள் தயாரிப்பு பொறியியலாளர் ஒருவரே ஆறாவது சாட்சியாக சாட்சியமளிப்பு. இதன்போது மென்பொருளைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட காணொளிகளை மீள தரவிறக்கம் செய்ய முடியுமா என சுவிஸ் குமார் தன்னிடம் வினவியதாகவும், தான் அரச தரப்பு சாட்சியாளராக மாறுவதற்கு விருப்பமாகவுள்ளதாகவும் அதனை பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த டி. சில்வாவிற்கு தெரிவிக்குமாறும்இ இதற்கு இரண்டு கோடி ரூபா வழங்க முடியும் எனவும் தெரிவித்ததாக சாட்சியமளிப்பு.
03.07.2017 36 சாட்சியங்களில் ஐவரின் சாட்சியங்களை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் ரட்ணம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் நீதிபதிகள் குழு வழக்கிலிருந்து விடுவித்தது. அத்துடன் 9, 4, 7, 15 ஆம் இலக்க சாட்சிகள் சாட்சியமளிப்பு.
04.07.2017 14, 19 ஆம் இலக்க சாட்சியாளர்கள் சாட்சியமளிப்பு.
05.07.2017 22 ஆம் இலக்க சாட்சியாளரான தடவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியமளிப்பு. அவர் இதன்போது 13 சான்றுப் பொருட்களை திறந்த நீதிமன்றத்தில் பிரித்துக் காண்பிக்கப்பட்டதுடன், அவற்றையும் சாட்சியாளர் அடையாளம் காண்பித்தார்.
07.07.2017 படுகொலை வழக்குடன் தொடர்புடைய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரான ஸ்ரீ கஜன் வெளிநாடு செல்வதற்கு விமானன நிலையம் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டது.
09.07.2017 25 ஆம் இலக்க சாட்சியான, சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் வி.ரீ.தமிழ்மாறனிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
15.07.2017 வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டார்.
16.07.2017 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்கவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர் அவரை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
18.07.2017 முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
38, 21 ஆம் இலக்க சாட்சியங்கள் பதிவு.
19.07.2017 41, 44, 45, 46, 51 ஆம் இலக்க சாட்சியங்கள் பதிவு. சுவிஸ் குமார் சம்பவ தினத்தில் கொழும்பில் தங்கவில்லையென விடுதி உரிமையாளரான 46 ஆம் இலக்க சாட்சியாளர் தெரிவித்தார்.
20.07.2017 42 ஆம் இலக்க சாட்சியாளர் சாட்சியமளிப்பு.
உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீ கஜனுக்கு வௌிநாடு செல்லவதற்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
22.07.2017 யாழ்ப்பாணம் – நல்லூரில் யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
24.07.2017 35, 52, 49 ஆம் இலக்க சாட்சியாளர் சாட்சியமளிப்பு
02.08.2017 35 ஆம் இலக்க சாட்சியாளர் தொடர்ந்தும் சாட்சியமளிப்பு.
09.08.2017 சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு
22.08.2017 சுவிஸ் குமாரை காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு
28.08.2017 1, 2, 3, 4 ஆம் இலக்க சாட்சியங்கள் பதிவு. சந்தேக நபர்களே சாட்சிக் கூண்டில் ஏறி அந்தச் சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.
29.08.2017
7, 8, 9 ஆம் இலக்க பிரதிவாதிகள் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியமளிப்பு. பிரதான நபரான 9 இலக்க சந்தேக நபர் சுவிஸ் குமார் சாட்சியமளிக்கையில், 2015 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வேலணையிலிருந்து புங்குடுதீவிற்கு சென்றபோது வேலணை மக்கள் தன்னை மறித்து வைத்து, ‘வித்தியா கொலையுடன் தொடர்புடையவன் இவன்தான்’ என கூறி மின்கம்பத்தில் கட்டி அடித்ததாகவும், அன்றிரவு 11.30 அளவில் அமைச்சர் விஜயகலா அவருடைய சாரதியுடன் அங்கு வருகை தந்து தன்னைக் காப்பாற்றி விடுவித்ததாகவும் சுவிஸ் குமார் கூறினார்.
அத்துடன் சுவிஸ் குமாரின் மனைவியும் சாட்சியமளித்திருந்தார்.
04.09.2017
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தொடர்பில் அனைத்து விசாரணைகளும் ஊர்காவத்துறை நீதிமன்றில் நிறைவு
12.09.2017 சாட்சியங்களின் தொகுப்புரைகளின் அடிப்படையில் வழக்கின் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் இலக்க சந்தேகநபர்கள் மாணவியைக் கடத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமாரரட்ணம் தெரிவித்தார். மேலும், வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் அறிவிக்கப்பட்டிருந்தது
13.09.2017 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில் விடுதலை
சந்தேகநபர்கள் சார்பான சாட்சியங்களின் தொகுப்புரைகள் இடம்பெற்றன.
ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக நேற்று முன்தினம் கல்கிசை பகுதியில் நடத்தப்பட்ட செயற்பாடுகளை ஐ.நாவின் அகதிகள் தொடர்பாக உயிரிஸ்தானிகர் அலுவலகம் கண்டித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கத்திற்கும் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஏதேனும் நாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்கு வந்திருந்தால் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரை அவர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கமே முழு பாதுகாப்பையும் வழங்க வேண்டுமெனவும் இதன்படி அண்மையில் ரோஹிங்யா அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா உண்ணிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி தேங்காயை விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். தேங்காய் விலை அதிகரிப்பு பற்றி உடனடியாக கவனம் செலுத்துமாறு இதன்போது ஜனாதிபதி தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மூன்று உறுப்பினர்கள் அந்த கட்சியிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர். இவ்வாறாக சந்திரா தேவரப்பெரும , டீ.எம்.ஜயசேன மற்றும் வீரசிங்க ஆகியோரே இவ்வாறாக விலக தீர்மானித்துள்ளனர். இவர்கள் அந்த கட்சியிலிருந்து விலகி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய ச.தொ.ச விற்பனை நிலையங்களினூடாக 8 அரிசி வகைகளினதும் மற்றும் நெத்தலியினதும் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன்படி சம்பா – 84 ரூபா , வெள்ளை நாடு – 74 ரூபா , சிவப்பு நாடு -80 ரூபா , வெள்ளை கெக்குலு -65 , சிவப்பு கெக்குலு – 75 ரூபா , குருனை அரிசி – 60 ரூபா , வெள்ளை கெக்குலு சம்பா -90 ரூபா , சிவப்பு கெக்குலு சம்பா -88 ரூபா , நெத்தலி (தாய்லாந்து) -525 ரூபா என்ற ரீதியில் ச.தொ.சவில் விற்பனையாகவுள்ளது.
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை மேற்கிந்திய அணியின் இளம் வீரர் எவின் லூவிஸ் இன்று தவறவிட்டுள்ளார்.
இங்கிலாந்திற்கு எதிராக இன்று இடம்பெற்றுவரும் நான்காவது ஒருநாள் போட்டியில் 47 ஓவரில் 176 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை எவின் லூவிஸ் காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார் 47 ஓவரில் யேக்போல் வீசிய யோக்கர் பந்து காலை தாக்கியதன் காரணமாக கடும் வலியால் துடித்த எவின் லூவிஸ் மைதானத்திலிருந்து அழைத்துசெல்லப்பட்டார். அவ்வேளை மைதானத்தில் திரண்டிருந்த இரசிகர்கள் எழுந்து நின்று தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வாணி விழா இந் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்கள் நடனங்கள், பாடல்களையும் வழங்கியிருந்தனர். பங்கு பற்றிய மாணவர்களுக்கும் ஆசிரியர்கட்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி எஸ் எம் சார்ல்ஸ், உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நியமனம் பெற்றுள்ளார். நிதியமைச்சு இது தொடர்பான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இலங்கையின் நிர்வாகசேவையின் சிறப்பு அலுவலராக செயற்படும் பிஎஸ்எம் சார்ல்ஸ், நிர்வாக சேவையில் 26 வருடங்களை பூர்த்திசெய்துள்ளார் ஏற்கனவே அவர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராகவும் செயற்பட்டார். தமக்கு வழங்கப்பட்ட புதிய பதவி சவாலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார் என்றும் பிஎஸ்எம் சார்ல்ஸ் தெரிவித்தார்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஐ.சி.சியினால் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ள நான்கு புதிய விதிகள் பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டித் தொடர்களின்போது நடைமுறைக்கு வரும் என ஐ.சி.சி இன்று (26) அறிவித்தது.
போட்டியின்போதுமைதானத்திற்குள்ஒழுங்கீனமாகநடந்துகொள்ளும்கிரிக்கெட்வீரர்களை சிவப்பு அட்டை காண்பித்துமைதானத்திலிருந்துவெளியேற்றுவதற்கும், அவ்வாறுநடந்துகொண்டகுற்றத்திற்காகமேலதிக (போனஸ்)புள்ளியொன்றைவழங்கவும்நடுவர்களுக்குஅனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டியின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் வீரர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது. போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு வீரர்கள் அந்த விதிமுறையை மீறுவது வழக்கம். வீரர்கள் ஸ்லெட்ஜிங் மற்றும் வார்த்தை போர்களில் ஈடுபடும் நிலை ஏற்படும். சில சமயங்களில் அது எல்லை மீறுவதும் உண்டு.
தற்போதைய நிலையில் வீரர்கள் எல்லை மீறி நடந்தது நடுவர்களுக்கு தெரியவந்தால், போட்டி முடிந்த பின்னர் விசாரணை நடத்தப்படும். அதன்பின் அபராதம் அல்லது தடை விதிக்கப்படும். இந்த விதிமுறையால் உடனடி தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை.
எனவே, கால்பந்தில் விதிமுறையை மீறும் வீரர்கள் மீது மைதான நடுவர்களே சிவப்பு அட்டை காண்பித்து அவர்களை வெளியேற்றும் விதிமுறை போன்று கிரிக்கெட் போட்டியிலும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதன்படி இப்புதிய விதிமுறை 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
புதியடி.ஆர்.எஸ்முறை (DRS)
டி.ஆர்.எஸ்முறையைப்பயன்படுத்தி LBW ஆட்டமிழப்பிற்கு கேட்கப்படும் வேண்டுகோள், இனிமேல்கவனத்தில்கொள்ளப்படமாட்டாது. அதாவது, LBW மீதானவேண்டுகோள்தோல்வியடைந்தாலும், ரிவ்யூக்களின்எண்ணிக்கைகுறையாது.
அதேபோல, டெஸ்ட்போட்டியில்முதல்நாள்ஆட்டத்தின்இறுதிக் கட்டத்தில், அதாவது 80 ஓவர்களுக்குமேல்கேட்கப்படும்ரிவ்யூக்களின்எண்ணிக்கைஅதிகரிக்கப்படமாட்டாது. இதன்படிஒருஇன்னிங்ஸிற்கு 2 ரிவ்யூக்கள்மாத்திரமேஅணியொன்றுக்குவழங்கப்படும்.