Home » » சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஐ.சி.சியினால் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ள நான்கு புதிய விதிகள் பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டித் தொடர்களின்போது நடைமுறைக்கு வரும் என ஐ.சி.சி இன்று (26) அறிவித்தது.
கிரிக்கெட்டின் புதிய விதிப்படி மைதானத்தில் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் நடுவரால் வெளியேற்றப்படுவார்கள்அத்துடன்டெஸ்ட் போட்டியில் 80 ஓவர்களுக்கு பிறகு டி.ஆர்.எஸ்முறை பயன்படுத்தப்படாது. 20 ஓவர் போட்டிகளில்நடுவரின் முன்பு மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ்முறை முதல் முறையாகஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுஅதேபோல ரன் அவுட்பிடியெடுப்பு மற்றும் துடுப்பாட்டமட்டைகளின் எடை ஆகியவற்றிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வீரர்கள் பயன்படுத்தும் துடுப்பு மட்டைகளின் அளவுகள்
Bat sizesபோட்டிகளின்போது வீரர்கள்பயன்படுத்துகின்ற பல்வேறுபட்டஅளவுகளைக் கொண்ட துடுப்புமட்டைகளுக்குப் பதிலாக ஒரே தரத்திலானஒரே அளவுகளைக் கொண்ட துடுப்புமட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. துடுப்பு மட்டையின் முனைப்பு 40 மில்.மீற்றரை மேற்படக்கூடாது என்பதுடன், எந்தவோர் இடத்திலும் துடுப்பு மட்டையின் தடிப்பானது 67 மில்.மீற்றரை விட மேற்படக்கூடாது.   
ஓடும் போது ஆட்டமிழப்பு (ரன்– அவுட்)
New cricket rules to be introduced from 28th Septemberவீரரொருவர் ஓடும்போது ரன்அவுட் முறையில்ஆட்டமிழக்கும் போது, அவர் எல்லைக்கோட்டுக்கு வெளியே துடுப்பு மட்டையைவைத்த சந்தர்ப்பத்தில் அது ஒருதடவை எல்லைக் கோட்டை தொட்டு மீண்டும்மேலே உயர்ந்தால் அதனை ஆட்டமிழப்புஅல்ல என அறிவிக்க முடியும்.  
சிவப்பு அட்டை
Red Cardபோட்டியின் போது மைதானத்திற்குள்ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் கிரிக்கெட்வீரர்களை சிவப்பு அட்டை காண்பித்துமைதானத்திலிருந்து வெளியேற்றுவதற்கும்அவ்வாறு நடந்துகொண்ட குற்றத்திற்காகமேலதிக (போனஸ்) புள்ளியொன்றைவழங்கவும் நடுவர்களுக்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டியின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் வீரர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது. போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு வீரர்கள் அந்த விதிமுறையை மீறுவது வழக்கம். வீரர்கள் ஸ்லெட்ஜிங் மற்றும் வார்த்தை போர்களில் ஈடுபடும் நிலை ஏற்படும். சில சமயங்களில் அது எல்லை மீறுவதும் உண்டு.
தற்போதைய நிலையில் வீரர்கள் எல்லை மீறி நடந்தது நடுவர்களுக்கு தெரியவந்தால், போட்டி முடிந்த பின்னர் விசாரணை நடத்தப்படும். அதன்பின் அபராதம் அல்லது தடை விதிக்கப்படும். இந்த விதிமுறையால் உடனடி தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை.
எனவே, கால்பந்தில் விதிமுறையை மீறும் வீரர்கள் மீது மைதான நடுவர்களே சிவப்பு அட்டை காண்பித்து அவர்களை வெளியேற்றும் விதிமுறை போன்று கிரிக்கெட் போட்டியிலும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதன்படி இப்புதிய விதிமுறை 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
புதிய டி.ஆர்.எஸ் முறை (DRS)
DRSடி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்தி LBW ஆட்டமிழப்பிற்கு கேட்கப்படும் வேண்டுகோள்இனிமேல் கவனத்தில் கொள்ளப்படமாட்டாதுஅதாவது, LBW மீதான வேண்டுகோள்தோல்வியடைந்தாலும்ரிவ்யூக்களின்எண்ணிக்கை குறையாது.  
அதேபோலடெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில்அதாவது 80 ஓவர்களுக்கு மேல் கேட்கப்படும் ரிவ்யூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படமாட்டாதுஇதன்படி ஒரு இன்னிங்ஸிற்கு 2 ரிவ்யூக்கள் மாத்திரமே அணியொன்றுக்குவழங்கப்படும்.
வீரர்களின் நடத்தை விதிகள்நடுவரின் முடிவு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்மற்றும்வீரர்கள் பயன்படுத்தும் துடுப்பாட்ட மட்டைகளின் அளவுகள் மீதான புதிய விதிகள்என்பன ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்துதான் நடைமுறைக்கு வருவதாகஇருந்ததுஎனினும்செப்டம்பர் 27ஆம் திகதி பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும்இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள்நடைபெறவுள்ளதால்அந்த தினத்திலிருந்து புதிய விதிமுறைகளைநடைமுறைப்படுத்துவதற்கு .சி.சி தீர்மானித்துள்ளது.
ஆனாலும் தற்போது நடைபெற்றுவருகின்ற இந்தியா மற்றும் அவுஸ்திரேலியஅணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் T-20 தொடரில் இப்புதிய விதிகள்பயன்படுத்தப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்புதிய கிரிக்கெட் விதிமுறைகள் அனைத்தும் எம்.சி.சியின்சட்டக்கோவையிலும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இது அனைத்து வகையானகிரிக்கெட் போட்டிகளிலும் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |