கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு மூவாயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கூடுதல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 800 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிதாக மாணவர்கள் சேர்த்துக்கொள்ளல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
0 Comments