சிரியாவில் மீண்டும் மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளப்படுவது அதிகரித்துள்ளது குறித்து மனித உரிமை அமைப்புகள் கடும் கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளன.
சிரிய அரச படைகளே இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மனிதஉரிமை மற்றும மனிதாபிமான அமைப்புகள் மருத்துவமனைகள் மீதான தாக்குல்களை சர்வதேச சமூகம் அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளன.
கடந்த சில வாரங்களில் இட்லிப்பிராந்தியத்தில் நான்கு மருத்துவமனைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஐந்தாவது மருத்துவமனையொன்று சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் வாழும் பகுதியொன்றில் இடம்பெற்ற குண்டுவீச்சு காரணமாக 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இட்லிப் பிராந்தியத்தில் மருத்துவமனைகள் குண்டுவீச்சுக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளமை வெளிப்படையாக தெரிகின்றது இது கண்டிக்கத்தக்க விடயம் என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
புதன் கிழமை குண்டுவீச்வு இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக இரு மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments