மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் கிரிதரன் இறைபதமடைந்தார்

Sunday, October 29, 2023

 என்றும் சிரித்த முகம் கொண்ட இளமகனை காலன் சீக்கிரத்தில் கவர்ந்ததேனோ........ நிலையில்லா வாழ்க்கை..... தத்துவத்தில்...... சென்றுவா மகனே இறையடி.... உன் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.........



READ MORE | comments

ஆசிரியர்கள் தீர்மானத்தில்

Friday, October 27, 2023

 


ஆசிரியர் சங்கங்கள் இன்று (27) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.

கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

அதன்படி, இன்று மதியம் 1.30 மணிக்கு பாடசாலை முடிந்ததும், பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (27) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாவது பாடசாலை தவணை நவம்பர் 1 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

ரூ.20,000 சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

Thursday, October 26, 2023


 இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை வீச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அகில இலங்கை அரச முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதேனி திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பள அதிகரிப்பு தேவைப்படுவதாக தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் டி.எம்.பி.அபேரத்ன, சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

READ MORE | comments

சாணக்கியன் எம்.பியின் அலுவலகம் முற்றுகை-100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண மோசடியால் தஞ்சம் )

Wednesday, October 25, 2023

 



மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.


சுமார் 8 கோடி ரூபாவினை போலி முகவர்களின் ஆசைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான எம்மை காப்பாற்றுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.

திங்கட்கிழமை(23) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு வந்திருந்த குறித்த பணத்தை இழந்தவர்கள் சுமார் பல மணித்தியாலங்கள் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து தத்தமது பிரச்சினைகளை முன்வைத்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட   நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என கூறி   185 பேரிடம் 8 கோடிகளுக்கு அதிகமாக  மோசடி   அரச உத்தியோகத்தில் உள்ள சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு உடந்தையாக பாடசாலை மாணவன் ஒருவரும் உள்ளடங்குவதாக அறிகின்றேன். தற்போது இவ்விடயம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கலந்துரையாடினேன்.பாதிக்கப்பட்ட மக்கள்   என்னை இதற்கான உரிய நீதியினை பெற்றுத் தரும்படி எனது அலுவலகத்தில்  சந்தித்திருந்தார்கள். தற்பொழுது இவ்வாறான மோசடிகள் அதிகளவாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஏமாற்றுக்காரர்கள் இடம் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும் என தெரிவித்தார்.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் 188 பேரை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.இதில் 146 பேர் டுபாய் நாட்டிற்கும் டென்மார்க் நாட்டிற்கு 20 பேரும் தாய்லாந்து நாட்டிற்கு 22 பேரும் உள்ளடங்குகின்றனர்.அத்துடன் டுபாய்  நாட்டிற்கு செல்பவர்களிடம் 350000 ரூபாவும் டென்மார் நாட்டிற்கு செல்பவர்களிடம் 550000 ரூபாவும் தாய்லாந்து நாட்டிற்கு செல்பவர்களிடம் 4 முதல் 5 இலட்சம் வரை பணம் வாங்கியுள்ளனர்.மொத்தமாக 188 பேரிடம் அண்ணளவாக 7 அரை கோடி ரூபாவினை மோசடி செய்துள்ளனர் என பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
READ MORE | comments

பூஜாபிட்டிய பிரதேசத்தில் அமைதியின்மை

Sunday, October 22, 2023


 பூஜாபிட்டிய பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய மதுபானசாலைக்கு எதிராக போராட்டம் காரணமாக மிகவும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று (22) காலை முதல் பிற்பகல் வரை மதுபானசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், இதற்காக பிரதேசத்திலுள்ள வெஹெர விகாரைகளின் பிக்குகள், சமய குருக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மக்களின் வாழ்க்கைச் சுமையைத் தாங்க முடியாமல் இருக்கும் இக்காலகட்டத்தில் மதுபானக் கடைகளைத் திறப்பது பொருளாதாரத்தை மேலும் சீர்குலைப்பதோடு, அப்பகுதியிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அறநெறி பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன், பூஜாபிட்டிய கண்டி வீதியை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவினர் முயற்சித்த போதிலும், பொலிஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து அந்த முயற்சியை முறியடித்துள்ளனர்.

மதுக்கடையை மூடும் வரை போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

READ MORE | comments

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

 


அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெளிநாட்டு கடனை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் தேவையான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

இராஜாங்க அமைச்சர் டயானா வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு

Saturday, October 21, 2023

 


இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தன்னை தாக்கியதாக அதே கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தின் பின்னர் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

READ MORE | comments

Channel 4 குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் குழு விசாரணை நடத்தும்

Monday, October 16, 2023

 


ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய Channel 4 தொலைக்காட்சி விடுத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை இன்று (16) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் சில அரசியல்வாதிகள் மற்றும் மூத்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தொடர்பு வைத்திருப்பதாகவும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பெரிய சதி இருப்பதாகவும் திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், விசாரணை நடத்துவது முக்கியம் என்று எம்.பி.க்கள் இந்தப் பிரேரணையில் தெரிவித்தனர்.

இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

READ MORE | comments

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நவம்பரில்


 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்தில் பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்களை பரீட்சையின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்

 


இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதில் 2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் தெரியவந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு நெருக்கடி ஏற்படுமா என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதற்கு, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

READ MORE | comments

மது விற்பனை குறைந்துள்ளதால் அரசுக்கு வருமானமும் குறைவு

Sunday, October 15, 2023


 இந்த நாட்டில் மது விற்பனை குறைந்துள்ளதால் கலால் வரி வருமானம் குறைந்துள்ளதாக கலால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 31, 2022 க்குள் கலால் வருவாயின் பாக்கிகள் குறித்தும் கோபா குழு கவனம் செலுத்தியது, மேலும் இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாத மதுபானக் கடைகளின் உரிமத்தை இரத்து செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

READ MORE | comments

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று

Saturday, October 14, 2023

 


இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் நிகழ்கிறது.

இந்நிழ்வை அமெரிக்காவில் எளிதாக பார்க்க முடியும் எனவும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த அரிய காட்சியை பார்க்கும் வாய்ப்பு குறைவாக காணப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவில் நன்றாக தெரியும் என்றும் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

READ MORE | comments

பரீட்சை வினாத்தாள்கள் கொண்டு செல்லும் பணிகள் நிறைவு

 


நாளை (15) நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அனர்த்த நிலைமைகள் ஏற்படும் எந்த இடத்திலும் இருக்கும் சகல பரீட்சார்த்திகளும் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் குறிப்பிட்டார்.

READ MORE | comments

உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணை வெளியீடு

Wednesday, October 11, 2023

 




2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை 2024 ஜனவரி 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download click

https://drive.google.com/file/d/1EkAhEb2Gk6vNteR2oL0WSJV94ny4etTu/view?usp=drivesdk


READ MORE | comments

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிவாநந்த வித்தியாலய பழைய மாணவர்களது நிதி பங்களிப்புடன் புனருத்தாரனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான அறையினை ( Teachers Staff Room) ராமகிருஷ்ணமிஷன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா மகராஜ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

Saturday, October 7, 2023

 





ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிவாநந்த பழைய மாணவர்களது நிதி பங்களிப்புடன் பழைய மாணவர் சங்கத்தின் நடைமுறைப்படுத்தலின் கீழ் அதிபர் திரு. த. தயாபரன் மற்றும் பிரதி அதிபர்திரு. க. சுவர்ணேஸ்வரன் , ஆசிரியர் திரு. தி. தயாபரன் ஆகியோரின் வழிகாட்டலுடன் ஆசிரியர்களுக்கான அறையினை ( Teachers Staff Room) புனருத்தாரணம் செய்து மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா மகராஜ் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க தலைவர் திரு. வ.வாசுதேவன், 96 O/L & 99 A/L வகுப்பு பழைய மாணவர்கள் குழுவின் தலைவர் திருமதி. சிவப்ரியா வில்வரட்னெம், விவேகானந்தா பழைய மாணவிகள் சங்கத்தின் செயலாளர் மற்றும் 2030 திட்ட அமைப்பின் சார்பில் வைத்தியர் பிரமீளா சசிகுமார், 94ம் ஆண்டு உயர்தர வகுப்பு Bio மாணவர்கள் சார்பாக திரு. இளங்கோ ஆகியோருடன் பழைய மாணவர் சங்கம் சார்பில் விளையாட்டு இணைப்பு செயலாளர் திரு.டிஷாந்த் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் திரு. ஜெயராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

இதற்கான நிதி அனுசரணையாளர்
திரு. பிரவீணாத் ( கட்டார் ) - ரூபா 35,000
2030 திட்ட அமைப்பினர் - ரூபா 25,000
96 O/L and 99 A/L வகுப்பு பழைய மாணவர்கள் - ரூபா 100,000
94ம் ஆண்டு Bio உயர்தர வகுப்பு பழைய மாணவர்கள் - ரூபா - 55,000
இந்தவேளையில் இவற்றுக்கு நிதி உதவி செய்த நிதி அனுசரணையாளர்கள் மற்றும் தொழிநுட்ப உதவி வழங்கிய பழைய மாணவர் சங்க உட்கட்டுமானசெயலாளர் எந்திரி. சுரேஷ்குமார் மற்றும் உட்கட்டுமான குழு அங்கத்தவர்களான தொழிநுட்பவியலார்களான திரு. ஜெயராஜன் திரு. வரதராஜ் ஆகியோரும் பங்களிப்பு வழங்கி இருந்தது      குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

தரம் - 5 ற்கான நேரசூசி வெளியிடபட்டுள்ளது.

Tuesday, October 3, 2023

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |