ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிவாநந்த பழைய மாணவர்களது நிதி பங்களிப்புடன் பழைய மாணவர் சங்கத்தின் நடைமுறைப்படுத்தலின் கீழ் அதிபர் திரு. த. தயாபரன் மற்றும் பிரதி அதிபர்திரு. க. சுவர்ணேஸ்வரன் , ஆசிரியர் திரு. தி. தயாபரன் ஆகியோரின் வழிகாட்டலுடன் ஆசிரியர்களுக்கான அறையினை ( Teachers Staff Room) புனருத்தாரணம் செய்து மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா மகராஜ் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க தலைவர் திரு. வ.வாசுதேவன், 96 O/L & 99 A/L வகுப்பு பழைய மாணவர்கள் குழுவின் தலைவர் திருமதி. சிவப்ரியா வில்வரட்னெம், விவேகானந்தா பழைய மாணவிகள் சங்கத்தின் செயலாளர் மற்றும் 2030 திட்ட அமைப்பின் சார்பில் வைத்தியர் பிரமீளா சசிகுமார், 94ம் ஆண்டு உயர்தர வகுப்பு Bio மாணவர்கள் சார்பாக திரு. இளங்கோ ஆகியோருடன் பழைய மாணவர் சங்கம் சார்பில் விளையாட்டு இணைப்பு செயலாளர் திரு.டிஷாந்த் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் திரு. ஜெயராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
இதற்கான நிதி அனுசரணையாளர்
திரு. பிரவீணாத் ( கட்டார் ) - ரூபா 35,000
2030 திட்ட அமைப்பினர் - ரூபா 25,000
96 O/L and 99 A/L வகுப்பு பழைய மாணவர்கள் - ரூபா 100,000
94ம் ஆண்டு Bio உயர்தர வகுப்பு பழைய மாணவர்கள் - ரூபா - 55,000
இந்தவேளையில் இவற்றுக்கு நிதி உதவி செய்த நிதி அனுசரணையாளர்கள் மற்றும் தொழிநுட்ப உதவி வழங்கிய பழைய மாணவர் சங்க உட்கட்டுமானசெயலாளர் எந்திரி. சுரேஷ்குமார் மற்றும் உட்கட்டுமான குழு அங்கத்தவர்களான தொழிநுட்பவியலார்களான திரு. ஜெயராஜன் திரு. வரதராஜ் ஆகியோரும் பங்களிப்பு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது
0 comments: