இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றைய தினம் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை வீச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
அகில இலங்கை அரச முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதேனி திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பள அதிகரிப்பு தேவைப்படுவதாக தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் டி.எம்.பி.அபேரத்ன, சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
0 comments: