பூஜாபிட்டிய பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய மதுபானசாலைக்கு எதிராக போராட்டம் காரணமாக மிகவும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று (22) காலை முதல் பிற்பகல் வரை மதுபானசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், இதற்காக பிரதேசத்திலுள்ள வெஹெர விகாரைகளின் பிக்குகள், சமய குருக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மக்களின் வாழ்க்கைச் சுமையைத் தாங்க முடியாமல் இருக்கும் இக்காலகட்டத்தில் மதுபானக் கடைகளைத் திறப்பது பொருளாதாரத்தை மேலும் சீர்குலைப்பதோடு, அப்பகுதியிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அறநெறி பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன், பூஜாபிட்டிய கண்டி வீதியை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவினர் முயற்சித்த போதிலும், பொலிஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து அந்த முயற்சியை முறியடித்துள்ளனர்.
மதுக்கடையை மூடும் வரை போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments: