நாடளாவிய ரீதியில் நாளை எத்தனை மணிநேர மின்வெட்டு? அறிவிப்பு வெளியானது

Monday, February 28, 2022

 


நாடளாவிய ரீதியில் நாளையும் (1) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க (Janaka Ratnakka) தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 க்கும் இடையில், இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை, தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரம் இரவு வேளைகளில் 30 நிமிட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிக மின்சார கேள்வி நிலவும் பகுதிகளிலேயே இந்த 30 நிமிட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனவே, நாளை (01) மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் மின்சார பயன்பாட்டை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்

READ MORE | comments

ரஷ்யாவின் கோரச் செயல்! வீதியில் இரத்த வெள்ளத்தில்- பதறவைக்கும் காட்சிகள்.

 


தொடர்ந்தும் ஐந்தாவது நாளாக உக்ரைன் ரஷ்யாவிடையே யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் உக்ரைன் நகரிலுள்ள குடியிருப்பு பகுதிகளின் மீது ரஷ்யா சரமாரியாக குண்டு தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்கிய போதிலும், ரஷ்யா தொடர்ந்தும் போர் தொடுத்து வருகின்றது.

அதன்படி பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையிலும், உக்ரைனின் கார்கிவ் நகரம் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல் நடத்திக்கொண்டுள்ளது.


இந்த தாக்குதலில் பல மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், இத்தாக்குதலில் சிக்கி மக்கள் வீதியில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் சரமாரியாக ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படும் காட்சிகளும் ராக்கெட் ஒன்று சாலையில் சொருகி நிற்கும் காட்சியும், தாக்குதலில் முதியவர் ஒருவர் காலை இழந்து இரத்த வெள்ளத்தில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது

READ MORE | comments

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலை நாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

 


எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களிலிருந்து வேலைசெய்யும் பணியாளர் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமது பணிகளை மேற்கொண்டு நேரகாலத்தோடு வீடுகளுக்குச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கி குறித்த யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தனியார் வாகன பாவனையினை குறைத்து பொது போக்குவரத்துக்களை முடிந்தளவு பயன்படுத்துமாறும் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
READ MORE | comments

நாளை(1) நாடு முழுவதும் மின்சார தடை

 


நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நாளைய தினம் (01) மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.


நாளைய தினம் மூன்று மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரையான கால எல்லைக்குள் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் கூறுகின்றார்.

இதேவேளை, தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரம் இரவு வேளைகளில் 30 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.

அதிக மின்சார கேள்வி நிலவும் பகுதிகளிலேயே இந்த 30 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எனவே, நாளை (01) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப் பகுதிக்குள் மின்சார பயன்பாட்டை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை காலமும் வலயங்களாக பிரிக்கப்பட்டு, மின்சார விநியோகம் தடை செய்யப்பட்ட நிலையில், நாளைய தினம் (01) நாடு முழுவதும் மின்சார தடையை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

உக்கிர போர் முடிவுறுமா? சற்று முன்னர் எல்லையில் ஆரம்பமானது பேச்சுவார்த்தை!

 


உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெலாரஸ் எல்லையில் தொடங்கியுள்ளதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உக்ரைன் அதிபரின் அலுவலகம், கலந்துரையாடலுக்கான உக்ரைனின் இலக்கு உடனடியான போர்நிறுத்தம் மற்றும் உக்ரைனில் இருந்து அனைத்து ரஷ்ய படைகளையும் திரும்பப் பெறுவது எனக் கூறியது.

அதேவேளை தனது நாட்டுக்கு உடனடி உறுப்புரிமை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எங்கள் இலக்கு அனைத்து ஐரோப்பியர்களுடனும் ஒன்றாக இருக்க வேண்டும், மிக முக்கியமாக, சமமான நிலையில் இருக்க வேண்டும். இது நியாயமானது என்று நான் நம்புகிறேன். அது சாத்தியம் என்று நான் நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.

மேலும் ஒரு காணொளி அறிக்கையில், ரஷ்ய வீரர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடுமாறு ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். ‘உங்கள் ஆயுதங்களை கைவிடுங்கள். இங்கிருந்து வெளியேறுங்கள். உங்கள் தளபதிகளை நம்பாதீர்கள். உங்கள் பிரசாரகரர்களை நம்பாதீர்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்’ என்று அவர் கூறினார்.

READ MORE | comments

உக்ரைன் மீதான படையெடுப்பு- ரஷ்யாவிற்கு விழப்போகும் பாரிய அடி!

 


ரஷ்யாவின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பும் சரிவும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், ரஷ்யாவின் ரூபிள் நாணயம், அமெரிக்க டொலருக்கு நிகரான 20 வீதம் அளவில் மிகப் பெரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் ரஷ்யாவிற்கு எதிராக தடைவிதித்து வருகின்றன.

இந்த தடையே ரஷ்யாவின் ரூபிள் நாணயம் வீழ்ச்சியடைய காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோல், இதற்கு இணையாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் டொலர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணயங்களும் அமெரிக்க டொலருக்கு நிராக ஒரு வீதம் அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் தெரிவிகப்பட்டுள்ளது

READ MORE | comments

ரஷ்யா - உக்ரைன் போர்! நடந்து கொண்டிருப்பதும் என்ன?


 சர்வதேச அரசியல் அரங்கை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கிய ஆப்கானிஸ்தான் விவகாரம் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு மெல்ல நீர்த்துப்போன நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாத இறுதியில் உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களைக் குவித்த ரஷ்யா, கடந்த வியாழன் அன்று உக்ரைனுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதலைத் தொடங்கியது.

மூன்று நாட்களாக நடந்து வரும் மோதலில் 190க்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்கள் பலியாகியுள்ளதாக உக்ரைனிய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைனுக்கு இடையே என்னதான் பிரச்சனை?

READ MORE | comments

இலங்கையில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் - மன்னிப்பு கோரியுள்ள ரஷ்ய தம்பதி!


இலங்கையில் ரஷ்ய நாட்டு தம்பதி உக்ரேன் நாட்டவர்களை கட்டி அணைத்து ரஷ்யாவின் செயற்பாட்டிற்கு மன்னிப்பு கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காலி பகுதியிலுள்ள உக்ரேனிய சுற்றுலா பயணிகள் குழுவொன்றினால் காலி கோட்டையில் உள்ள தேவாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது உயிரிழந்த தமது உறவினர்களின் நினைவாக விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். காலி, உனவட்டுன, பெந்தோட்டை, ஹிக்கடுவ, வெலிகம மற்றும் மிரிஸ்ஸ ஆகிய பகுதிகளில் தங்கியிருக்கும் உக்ரேனியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ரஷ்ய தாக்குதல்களில் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களது குடும்பத்தினர் பதுங்கு குழிகளில் பதுங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல் என்றும், இதை தடுக்க உலக நாட்டுத் தலைவர்கள் தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த ரஷ்ய நாட்டு தம்பதி உக்ரேன் நாட்டவர்களை கட்டி அணைத்து ரஷ்யாவின் செயற்பாட்டிற்கு மன்னிப்பு கோரியுள்ளனர்.

அந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்ததென சம்பவத்தை நேரில் பார்த்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உறவினர்களின் நினைவாக விளக்குகளை ஏற்றும் நடவடிக்கையில் இலங்கையர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

ரஷ்யா மீதான பிடி இறுகுகிறது - மேலும் புதிய தடைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்

 


உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்யா மீதான புதிய தடைகளை விதித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

குறித்த அறிவிப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன் வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் முதன் முறையாக தாக்குதலுக்கு உட்பட்டுள்ள ஒரு நாட்டுக்கு ஆயுதங்களை அனுப்பவுள்ளதாக உர்சுலா தெரிவித்தார்.

மேலும் மூன்று புதிய தடைகள் குறித்த விபரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்பரப்பில் அனைத்து ரஷ்ய விமானங்களும் பறக்க தடை “ரஷ்ய விமாங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய வான் பரப்பில் இடமில்லை” “ரஷ்யாவுக்கு சொந்தமான, ரஷ்யாவால் பதிவு செய்யப்பட்ட மற்றும் ரஷ்யாவால் கட்டுப்படுத்தப்படும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” “இந்த விமானங்கள் இனி இங்கு இறங்கவோ, மேலெழும்பவோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தின் வான்பரப்பில் பறக்கவோ முடியாது” மேலும் இது ரஷ்ய பெரும் பணக்காரர்களின் தனியார் விமானங்களுக்கும் பொருந்தும் என்று உர்சுலா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று “ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரஷ்யா டுடே மற்றும் ஸ்புட்நிக் போன்ற ஊடகங்கள் புடினின் போரை நியாயப்படுத்தி இனி பொய்களை பரப்ப முடியாது. அந்த பொய் தகவல்களை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

அத்துடன் “யுக்ரேனுக்கு எதிரான இந்த கொடூரமான போருக்கு பெலாரஸ் ஆதரவு வழங்குகிறது. பெலாரஸின் முக்கிய துறைகள் மற்றும் ஏற்றுமதி துறைகளை இலக்கு வைத்து தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.” என்றார்

READ MORE | comments

அணுவாயுத தாக்குதல் நடத்தப்படும் - புடின் விடுத்த எச்சரிக்கை

 


உலக நாடுகளின் கடும் அழுத்தங்களையும் மீறி உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தம் நான்காவது நாளாகவும் தீவிரமடைந்துள்ளது.

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக முன்னேறி வரும் ரஷ்ய படைகளுக்கு பதில் தாக்குதலை உக்ரைன் படைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பல ஐரோப்பிய நாடுகள் இராணுவ உதவி வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளன. இன்றையதினம் சில நாடுகளின் ஆயுத தளபாடங்கள் உக்ரைன் எல்லையை தாண்டியுள்ளன.

இந்நிலையில் தமது இராணுவ நடவடிக்கைக்கு எந்தவொரு நாடும் இடையூறு செய்தால் அணுவாயு தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மீது அணு ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், உலக நாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அணு ஆயுதம் தொடர்பான எச்சரிக்கையை ரஷ்ய அரச தலைவர் புடின் விடுத்திருந்தார். உலகின் மிக வலிமையான அணு ஆயுதங்கள் உள்ள நாடாக, ரஷ்யா விளங்குகிறது. அதுமட்டுமன்றி, ஏராளமான அதிநவீன போர் ஆயுதங்களும் ரஷ்யாவிடம் உள்ளதென ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இதனால் ரஷ்யாவை யார் தாக்கினாலும், அவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு பின் உலக தலைவர் ஒருவர், தன்னிடம் அணு ஆயுதங்கள் உள்ளதை பகிரங்கமாக தெரிவித்து எச்சரித்துள்ளார்.

இது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

ரஷ்யா - உக்ரைன் மோதலின் எதிரொலி: இலங்கையில் வாழ்க்கை செலவு மூன்று மடங்காக அதிகரிக்க வாய்ப்பு

Sunday, February 27, 2022

 


நாட்டில் அடுத்த சில தினங்களில் வாழ்க்கை செலவு மூன்று மடங்காக அதிகரிக்கலாம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

உலகம் தற்போது மிகவும் பாரதூரமான விடயத்தை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்ததே அந்த நிலைமை.

இந்த நிலைமையானது உலகில் அனைத்து நாடுகளுக்கும் பொருளாதார, சமூக ரீதியாக ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலைமையில், குறிப்பாக ரஷ்யாவும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையின் சிறந்த நட்பு நாடுகள்.

இப்படியான சூழ்நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இலங்கையின் உறவுகள் போர் நிலைமையால் பாதிக்கப்படலாம். இவ்வாறான நிலைமையில், எமது உற்பத்திகள் குறிப்பாக தேயிலை ஏற்றுமதியில் பிரச்சினைகள் உருவாகலாம். ரஷ்யா அதிகளவில் எம்மிடம் தேயிலை கொள்வனவு செய்து எமக்கு உதவும் நாடு. பல வகையில் ரஷ்யா, இலங்கைக்கு உதவி வருகிறது.

READ MORE | comments

கொன்று குவிக்கப்பட்ட 4, 300 ரஷ்ய படையினர்! பலர் சிறைப்பிடிப்பு - உக்ரைன் பாதுகாப்பு தலைமையகம் அதிரடி அறிவிப்பு


 ரஷ்ய - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இதுவரை இடம்பெற்ற யுத்தத்தில் சுமார் 4,300 ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி, இன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய இராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலைநகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.

இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4,300இற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள் மற்றும் 26 உலங்கு வானூர்திகள் ஆகியன சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. 

READ MORE | comments

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யக் கோரும் போராட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பில் காலை இடம்பெற்றது

 


பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யக் கோரும் போராட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பில் காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் வடகிழக்கு வாலிப முன்னணி தலைவர் கி. சேயோன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது





இந்த போராட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மறை.மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை இந்து மற்றும் முஸ்லீம் மதத்தலைவர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்-முஸ்லிம் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் உட்பட பல்வேறு பொது அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தனர். இன்றைய இந்த கையெழுத்துப்பெறும் போராட்டத்தில் பெருமளவான முஸ்லிம் பெண்களும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியிருந்தனர். இதன் போது அவர்கள் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தும் போராட்டம் நடைபெற்றதுடன், குறித்த தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

READ MORE | comments

மருத்துவ பீடத்துக்குத் தெரிவான மாணவி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்

 


( அஸ்ஹர் இப்றாஹிம் )

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் மட்டக்களப்பு மருத்துவ பீடத்துக்கு ஆண்டு 2020/2021 இல் தெரிவான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸனூஸ் பாத்திமா நூஹா பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
.வைத்தியசாலை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள்  மற்றும்  ஊழியர்களின் பிள்ளைகள் சிறந்த அடைவு

மட்டத்தை அடையும் போது அவர்களை கெளரவித்தல் திட்டத்தின்  கீழ்  முதல் தடவையாக இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டாக்டர் ஜீவா சிவசுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மாணவியின் பெற்றோர் , வைத்தியசாலை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள்  மற்றும்  ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலை  தாதிய பரிபாலகர் பீ.எம்.நஸீறுதீன் இந்நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தார்.
READ MORE | comments

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட விபுலானந்த தேசிய பாடசாலைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள பிரதான பாலம் இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.


 ( அஸ்ஹர் இப்றாஹிம்)


காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட விபுலானந்த தேசிய பாடசாலைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள பிரதான பாலம் இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
இப்பாலத்தை தினசரி ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
காரைதீவு விபுலானந்த தேசிய பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் இவ்வீதியில் கனகரெட்ணம் விளையாட்டு மைதானம் , விதாதா வளநிலையம் , வீரபத்திரசுவாமி ஆலையம் , ஸ்ரீசித்தானைக்குட்டி ஆலயம் என்பன அமைந்துள்ளன.
காரைதீவு தோணாவிற்கு மேலான அமையப்பெற்றுள்ள இப்பாலம் சுமார் 50 வருடங்கள் பழைமை வாய்ந்த்து.பாலத்திற்குள் போடப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிவதோடு பாலத்தினூடாக வாகனங்கள் செல்லும் போது ஒருவிதமான அதிர்வும் ஏற்பட்டு எந்த நேரத்திலும இடிந்து விழக்கூடிய நிலைமையில் உள்ளது.
அண்மையில் இவ்வீதி கார்பட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டபோது பிரதேசவாசிகளினால் சம்பந்தப்பட்ட பொறியியலாளரிடம் இப்பாலம் சம்பந்தமாக எடுத்துக் கூறிய போதும் எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.
எனவே தற்போது பழுதடைந்த பாலத்தை முற்றாக அகற்றி புதிய பாலமொன்றை அமைத்து தருமாறு பொதுமக்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
READ MORE | comments

இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ்லஸ் மாலைதீவில் உயிரிழந்துள்ளார்


 (அஸ்ஹர் இப்றாஹிம்)


இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ்லஸ் மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே கடந்த சனிக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் உதைபந்தாட்ட மத்திய களத்தில்  தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.
இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், காற்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராகவும் விளங்கினார்.  கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார். அந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இவ்வருடத்திற்க்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் இரண்டாவது வீரராக பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
READ MORE | comments

திருகோணமலை கொழும்பு பிரதான வீதியில் விபத்து


 ( தாரிக் ஹஸன்)


திருகோணமலை கொழும்பு பிரதான வீதியில் கலேவெலவில் தனியார்  அதிசொகுசு பஸ்சொன்று லொரியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கலேவெலவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்த்து.
கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்சொன்றே இவ்வாறு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
READ MORE | comments

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி தமிழர் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்! முஸ்லிம் மக்களும் இணைவு (படங்கள்)

 


இலங்கை தமிழ் அரசுக்கட்சி இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் காலை மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போத மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் எஸ்.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், உட்பட பொது மக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Gallery Gallery Gallery 
READ MORE | comments

ரஷ்ய இராணுவத்திற்கு தலையிடியாக மாறிய உக்ரைன் பெண்களின் திடீர் முடிவு!

 


உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தமானது நாளுக்கு நாள் உக்கிரமடைந்து செல்கின்றது. இந்த நிலையில் வரும்காலத்தில் இந்த போர் மேலும் தீவிரமடையும்போது பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் பொதுமக்களாகத் தான் இருக்கின்றனர் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் (Nehru Gunaratnam) தெரிவித்துள்ளார்.

வெறுமையாக ஆண்கள் என்றில்லாமல் பெண்கள் தங்களால் முடிந்த கள உதவிகளை செய்து கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சக ஊடகத்தில் ஒளிபரப்பாகும்  “ஊடறுப்பு” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

வவுனியாவை கொழுத்துவேன் ரவுடித்தனம் காட்டிய ஈபிடிபி எம்.பி தீலீபன்

 


நேற்றைய தினம் வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா அருகாமையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான திலீபன் அவர்கள் மதுபோதையில் இளைஞர்களை தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியருவதாவது பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்களின் மகன் சிறுவர் பூங்காவில் நின்றிருந்த இளைஞர்களிடம் வாய்தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் முரண்பாடானது கைகலப்பாக மாறியது இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மதுபோதையில் விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் திலீபனும் அவரது சாக்களும் அங்கிருந்த இளைஞர்களை தாக்கியதுடன்  வவுனியாவை கொழுத்துவேன் என ஆக்கிரோசமாக கத்தியுள்ளார். இதனால் அங்கிருந்த இளைஞர்கள் பதிலுக்கு தாக்குதல் நடாத்திய நிலையில் தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல்  திலீபனும் அவரது சாக்களும் மன்னார் வீதியில் அமைத்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு சென்ற நிலையில் இவர்களை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் கைகலப்பு நீண்டு சென்றுள்ளதுடன் இப்பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் சம்பவத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன் சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் ஈபிடிபி கட்சியினரின் ரவுடித்தனம்; தலைதூக்கியுள்ளதாகவும் வவுனியாவின் அமைதிநிலைக்கு குந்தகம் விளைவிக்கும் இவ்வாறன அரசியல் கட்சியினரின் கீழ்தரமான செயற்பாட்டினால் மாவட்டத்தின் பெயர் கெட்டுப்போவதாகவும் சில சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

 


நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெறும் இசை கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொவிட் வகையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

புள்ளிவிபர ரீதியாக கொவிட் தொற்று தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்படாத போதிலும், இலங்கையில் கொவிட் பரவல் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

நாடளாவிய ரீதியில் இன்று இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது!

 


நாடளாவிய ரீதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது


எனினும் இன்று ஏ,பி,சி ஆகிய பிரிவுகளில் பகலில் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வாரம் இருந்த அதே அட்டவணையின் கீழ் நாளை முதல் ஒவ்வொரு பிரதேசத்திலும் மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் காரணமாக பல மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழப்பதால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

உக்ரைன் தலைநகரில் பெரும் தீப்பிழம்பு!! உக்கிரமடையும் மோதல் (காணொளி)


உக்ரைனில் ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கிடங்கு பெரும் தீப்பிழம்புகளுடன் பற்றி எரியும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

உக்ரைனின் தலைநகர் கிவ் பிராந்தியத்தில் உள்ள வாசில்கிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றே ரஷ்ய படைகளின் எறிகனை தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில மணி நேரத்துக்கு முன்னர் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை நகரின் முதல்வர் நடாலியா பாலசினோவிச் மற்றும் அரசாங்க ஆலோசகர் என்டன் ஜெராசென்கோ ஆகியோர் உறுதிப்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

READ MORE | comments

உக்ரைன் மக்களிடம் பிடிபட்ட ரஷ்ய வீரருக்கு நேர்ந்த கதி

Saturday, February 26, 2022


 உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலால் 115,000க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் போலந்திற்குள் எல்லையைக் கடந்து சென்றுள்ளனர் என்று போலந்து அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த நான்கு மணி நேரத்தில் மட்டும் 15,000 பேர் நாட்டிற்குள் நுழைந்ததாக உள்துறை அமைச்சர் பாவெ செபர்னேக்கர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்களில் ஒருவர் அந்நாட்டு பொதுமக்களிடம் சிக்கியிருக்கிறார்.

இதையடுத்து அவரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நிலைதடுமாறி போனார் அவர், இது தொடர்பான வீடியோ தீயாக பரவி வருகிறது    pic.twitter.com/bVINALc6Mw

READ MORE | comments

உக்ரைன் - ரஷ்ய மோதல்!! இலங்கைக்கும் கடும் அதிர்வு

 


உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் ( Gopalappillai Amirthalingam) சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் - ரஷ்ய மோதலால் இலங்கை எதிர்நோக்கப்போகும் விளைவுகள் குறித்து ஐபிசி தமிழ் செய்திப் பிரிவு வினவிய போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.

உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய தாக்குதலை அடுத்து உக்ரைனுக்கான அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக தற்போது இலங்கைக்கு வந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கை, உக்ரைன் உட்பட ரஷ்ய பிராந்தியத்தில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன், இலங்கையின் தேயிலை கொள்வனவாளர்களில் உக்ரைனும் ரஷ்யாவும் முன்னணியில் உள்ளனர்.

இதனால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

இதேவேளை, உக்ரைனில் அதிகரிக்கும் வன்முறை குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன் ரஷ்ய – உக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் எனவும் யுத்தத்தினால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை இரு நாடுகளும் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

READ MORE | comments

பெண் போல் மிமிக்கிரி செய்து பண மோசடி! ஆயித்தியமலையைச் சேர்ந்த இளைஞன் கைது

 


அக்கரைப்பற்று இளைஞன் ஒருவனிடம் தனது குரலால் பெண்கள் போல மிமிக்கிரி குரலில் பேசி காதலிப்பது போல நடித்து பணமோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று முன்தினம் (24) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் முகநூல் பக்கத்தில் இருந்த அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனின் மெசேஞ்சர் ஊடாக உரையாடி அவரது தொலைபேசி இலக்கத்தை குறித்த இளைஞன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்டுள்ளான்.

இதனை தொடர்ந்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளைஞனுடன் தொடர்ந்து உரையாடிவந்த நிலையில் குறித்த இளைஞன் திருமணம் முடிக்கவில்லை என தெரிந்து கொண்ட நிலையில் தனது பெரியம்மாவின் மகள் இருப்பதாகவும் அவளுக்கு திருமணம் பேசிவருவதாக குறித்த இளைஞனுக்கு தெரிவித்து பின்னர் முகநூல் பக்கங்களில் இருக்கும் ஒரு அழகான பெண் ஒருவரின் படத்தை அனுப்பி இது தான் எனது பெரியம்மாவின் மகள் என தெரிவித்துள்ளான்.

குறித்த இளைஞனும் அழகான பெண் படத்தை பார்த்ததும் அவனுக்கு அந்த பெண் மீது ஆசை ஏற்பட்டதை கண்டு கொண்ட ஆயித்தியமலை இளைஞன் வேறு தொபேசி இலக்கத்தில் இருந்து அந்த பெண் கதைப்பது போல மிமிக்கிரி குரலில் குறித்த இளைஞனுடன் கதைத்து வந்ததுடன் பெண்னின் தாயார் எனவும் மிமிக்கிரி குரலில் கதைத்து வந்துள்ளதுடன் தொலைபேசிக்கு ரீலோட் செய்யுமாறு கூறி அடிக்கடி அவனிடம் இருந்து பணத்தையும் வாங்கி வந்துள்ளான்.

இந்த நிலையில் கொழும்பில் மேசன் தொழில் ஈடுபட்டுவரும் அக்கரைப்பற்று இளைஞனுக்கு அந்த பெண் மீது காதல் ஏற்பட்டதையடுத்து அவளை திருமணம் முடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பெரியம்மாவின் மகளுக்கு சீதனமாக வீடு பணம் தருவதாகவும் அவர்கள் பணக்காரர் எனவும் பொய்களை கூறி வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் மாப்பிளையை பார்ப்பதற்கு அக்கரைப்பற்றுக்கு வருவதற்கான திகதியை தீர்மானித்தனர்.

திகதி தீர்மானிக்கப்பட்டதையடுத்து மாப்பிள்ளை வீட்டினர் தமது வீட்டிற்கு வர்ணம் தீட்டி மற்றும் பெண் பகுதியினர் வரும்போது அவர்களுக்கான உணவு வழங்க பல ஆயிரம் ரூபா செலவு செய்து உணவு ஏற்பாடுகள் செய்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் காத்திருந்தனர்.

நேரம் பகல் 12 மணியை தாண்டியும் பெண் வீட்டாரை காணாததால் குறித்த ஆயித்தியமலை இளைஞனுக்கு தோலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது, மாப்பிளை பார்ப்பதற்கு வேன் ஒன்றில் வெளியேறிய போது வீட்டின் வாசலில் பூனை குறுக்கால் போனது சகுணம் சரியில்லை அதனால் வரவில்லை என தெரிவித்து வேறு ஒரு தினத்தில் வருவதாக தெரிவித்துள்ளான்.

இதனை தொடர்ந்து மாப்பிளையை பார்ப்பதற்கு வருவதற்கு பல சாக்கு போக்குகளை தெரிவித்து வந்துள்ள நிலையில் பெண்னை பார்ப்பதற்கு பெண் வீட்டிற்கு தாங்கள் வருவதாக அக்கரைப்பற்று இளைஞன் தெரிவித்து அதற்கான திகதியான கடந்த 23ம் திகதி தீர்மானிக்கப்பட்டு அன்று பெண்ணை பார்ப்பதற்கு மாப்பிளை வீட்டினர் வான் ஒன்றை வாடைகைக்கு பெற்றுக் கொண்டு காலையில் மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்தனர்.

கல்முனையில் வைத்து ஆயித்தியமலை இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது.

பலமுறை முயற்சித்தும் அவ்வாறு அழைப்பு வந்துள்ளதையடுத்து பெண்ணின் விலாசம் தெரியாது என்ன செய்வது என தெரியாது நீண்ட நேரம் கல்முனையில் காத்துநின்றுவிட்டு அங்கிருந்து அக்கரைப்பற்று மாப்பிளை வீட்டினர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

இதன்பின்னர் அன்று மாலை அக்கரைப்பற்று இளைஞனுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட ஆயித்தியமலை இளைஞன் மன்னிக்கவும் தொலைபேசியின் பற்றி சார்ச் இல்லாததால் தொலைபேசி தானகாக நின்றுவிட்டது. நான் உங்கள் வீட்டிற்கு வருகின்றேன் என தெரிவித்து மட்டக்களப்பில் இருந்து பஸ்வண்டியில் அக்கரைப்பற்றுக்கு சென்ற நிலையில் அவனை தனது வீட்டிற்கு கூட்டிச் சென்று இரவு தங்கவைத்து உபசரிப்பு இடம்பெற்றதுடன் பெண் வீட்டிற்கு நாளைக்கு கூட்டிச் செல்வதாக தெரிவித்து கலந்துரையாடியுள்ளனர்.

அடுத்த நாள் 24 ம் திகதி வியாழக்கிழமை காலை குறித்த ஆயித்தியமலை இளைஞன் மற்றும் அக்கரைப்பற்று இளைஞன் அவனின் உறவினர்களான இரு பெண்களுடன் மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்துக்கு வந்தடைந்த பின்னர் பெண் வீடு கூளாவடியில் இருப்பதாகவும் பல சாக்கு போக்கு தெரிவித்து என்ன செய்வது என தெரியாது முழுசிக் கொண்டிருந்த அவனை அக்கரைப்பற்று இளைஞன் விடாப்பிடியாக பெண்வீட்டிற்கு கூட்டிச் செல்ல வற்புறுத்தியுள்ளான். அவனுக்கு என்ன செய்வது என தெரியாது கொக்குவில் பிரதேசத்திலுள்ள அவனின் தூரத்து உறவினர் வீட்டிற்கு கூட்டிச் சென்ற போது இவனின் நடவடிக்கையில் அக்கரைப்பற்று இளைஞனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவன் உறவினரிடம் கூட்டிச் சென்ற நிலையில் அவன் தனது தாய் என அனுப்பிய படத்தை காட்டி இவனின் தாயாரா நீங்கள் என கேட்டபோது, அவர்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அக்கரைப்பற்று இளைஞன் உசாரடைந்து கொண்டு அவனை பிடித்துக்கொண்டு கொக்குவில் பொலிசாரிடம் சென்று தமக்கு நடந்ததை தெரிவித்து, இவனால் சுமார் ஒன்றரை இலச்சத்துக்கு மேலாக கடந்த 2 மாதத்தில் செலவாகியுள்ளதாக அக்கரைப்பற்று இளைஞன் தெரிவித்தான்.

இதனை தொடர்ந்து குறித்த இளைஞன் தான் மிமிக்கிரி குரலில் பெண்கள் போல கதைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதை ஓப்புக் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரின் சகோதரி பொலிஸ் நிலையத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று இளைஞனின் குடும்பத்தினரிடம் தமது கஷ்ட நிலையை தெரிவித்து சகோதரன் தவறு செய்துவிட்டார் என மன்னிப்பு கேட்டதையடுத்து அந்த இளைஞன் முறைப்பாடு செய்யாது சென்றுள்ளான். அதேவேளை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞனை ஆயித்தியமலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
READ MORE | comments

மதுவரித் திணைக்களத்தின் அதிரடி தீர்மானம்




பீர் மற்றும் வைன் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாத சில இடங்களுக்கு சட்டரீதியான அனுமதி வழங்க மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு, பானங்கள் மற்றும் தங்குமிடங்களை வழங்குவதற்காக வணிகங்களை பதிவு செய்துள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளுக்கு பீர் மற்றும் வைன் விற்பனை செய்வதற்கான உரிமங்களை வழங்க எதிர்ப்பார்ப்பதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய முறையின் ஊடாக தற்போது உரிமம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கனவே மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் சட்ட கட்டமைப்பில் சேர்க்கப்படுவதால் இட உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சிரமங்களைக் குறைக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனூடாக சட்டப்பூர்வ மது விநியோகச் சங்கிலியில் இந்த இடங்களைச் சேர்ப்பதன் மூலம், அவற்றில் சட்டப்பூர்வ மற்றும் தரமான மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக நியாயமற்ற விலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு மதுபானம் விற்பனை செய்வதைக் தடுக்கலாம்.

சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் ஒத்துழைப்புடன் நிதியமைச்சு மற்றும் நிதிக் கொள்கை திணைக்களத்தின் அனுமதியுடன் இந்த பீர் மற்றும் வைன்களை விற்பனை செய்வதற்கான புதிய மதுவரி உரிமம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது
READ MORE | comments

தலை நகருக்குள் ஊடுருவ முயன்ற ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் பதிலடி!

 


உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

கீவ் நகரில் உள்ள இராணுவ தளத்தைக் குறிவைத்து ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

உக்ரைன் அரசாங்கமும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டை நடந்து வருகிறது எனவும் உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. 

READ MORE | comments

ஒருபோதும் சரணடையவும் மாட்டோம் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம்- ஜெலன்ஸ்கி பகிரங்கம்!

 


உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி இரகசிய இடத்தில் உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இரகசிய இடத்திலிருந்து உக்ரைன் அதிபர் தான் பேசும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நாங்கள் அனைவரும் தலைநகர் கீவ்வில் தான் இருக்கிறோம். இராணுவமும் இங்குதான் இருக்கிறது.

குடிமக்களும் இங்குதான் இருக்கிறார்கள். நாங்கள் எங்களது சுதந்திரம், நாட்டை பாதுகாப்பதற்காக இங்கு இருக்கிறோம். இதே வழியில் தொடர்ந்து இங்கேயே இருப்போம். மேலும் தலைநகர் கீவ்வில் கடுமையான சண்டை நடந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

இன்று இரவு ரஷ்ய படைகள் கடும் தாக்குதலை தொடுக்க முயற்சிக்கும். நான் முற்றிலும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். இந்த இரவு கடினமாக இருக்கும். நமது நாட்டின் பல நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.

கீவ் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள். நமது தலைநகரை இழக்கக் கூடாது. உக்ரைனின் தலைவிதி விரைவில் தெரிந்துவிடும். நாட்டு மக்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். நமது நாட்டுக்கு அதிக உதவி, அதிக ஆதரவு கேட்டு இருக்கிறோம்.

இந்த படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதே நமது முக்கிய நோக்கம். இராணுவத்தை சரண் அடைய நான் கூறியதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் அவ்வாறு கூறவில்லை. நாட்டை விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

எங்கள் ஆயுதங்களையும் கீழே போட மாட்டோம். இது எங்கள் நாடு. எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம். எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிபர் மாளிகைக்கு முன்பு நின்றபடி  அவர் பேசுகிறார். இதற்கிடையே அமெரிக்கா அரசு உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் அமெரிக்கா தெரிவித்தது.

ஆனால் இதனை அவர் ஏற்க மறுத்து விட்டார். போர் இங்குதான் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு தேவை வெடிமருந்துகள்தான். சவாரி அல்ல என்று ஜெலன்ஸ்கி கூறியதாக அமெரிக்கா மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

READ MORE | comments

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சிறு சத்திரசிகிச்சைக் கூடம் திறந்து வைப்பு

 



நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சிறு சத்திரசிகிச்சைக் கூடம் மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் கலந்து கொண்டு கூடத்தை திறந்து வைத்தார்.

கெளரவ அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி  எம்.சி. எம். மாஹீர், விஷேட அதீதியாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருதுதிக்குழு செயலாளர், வைத்தியர்கள் ,தாதிய பரிபாலகர் ,நிருவாக உத்தியோகத்தர், தாதியர்கள் மற்றும் ஏனைய அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



திறந்து வைத்த வெள்ளிக்கிழமை அன்று 6  சிறு சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |