நாட்டில் அடுத்த சில தினங்களில் வாழ்க்கை செலவு மூன்று மடங்காக அதிகரிக்கலாம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உலகம் தற்போது மிகவும் பாரதூரமான விடயத்தை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்ததே அந்த நிலைமை.
இந்த நிலைமையானது உலகில் அனைத்து நாடுகளுக்கும் பொருளாதார, சமூக ரீதியாக ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலைமையில், குறிப்பாக ரஷ்யாவும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையின் சிறந்த நட்பு நாடுகள்.
இப்படியான சூழ்நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இலங்கையின் உறவுகள் போர் நிலைமையால் பாதிக்கப்படலாம். இவ்வாறான நிலைமையில், எமது உற்பத்திகள் குறிப்பாக தேயிலை ஏற்றுமதியில் பிரச்சினைகள் உருவாகலாம். ரஷ்யா அதிகளவில் எம்மிடம் தேயிலை கொள்வனவு செய்து எமக்கு உதவும் நாடு. பல வகையில் ரஷ்யா, இலங்கைக்கு உதவி வருகிறது.
0 Comments