ரஷ்ய - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இதுவரை இடம்பெற்ற யுத்தத்தில் சுமார் 4,300 ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி, இன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய இராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலைநகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன.
இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.
இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4,300இற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள் மற்றும் 26 உலங்கு வானூர்திகள் ஆகியன சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments: