இலங்கை தமிழ் அரசுக்கட்சி இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் காலை மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போத மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் எஸ்.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், உட்பட பொது மக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments