உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்யா மீதான புதிய தடைகளை விதித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
குறித்த அறிவிப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன் வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் முதன் முறையாக தாக்குதலுக்கு உட்பட்டுள்ள ஒரு நாட்டுக்கு ஆயுதங்களை அனுப்பவுள்ளதாக உர்சுலா தெரிவித்தார்.
மேலும் மூன்று புதிய தடைகள் குறித்த விபரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்பரப்பில் அனைத்து ரஷ்ய விமானங்களும் பறக்க தடை “ரஷ்ய விமாங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய வான் பரப்பில் இடமில்லை” “ரஷ்யாவுக்கு சொந்தமான, ரஷ்யாவால் பதிவு செய்யப்பட்ட மற்றும் ரஷ்யாவால் கட்டுப்படுத்தப்படும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” “இந்த விமானங்கள் இனி இங்கு இறங்கவோ, மேலெழும்பவோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தின் வான்பரப்பில் பறக்கவோ முடியாது” மேலும் இது ரஷ்ய பெரும் பணக்காரர்களின் தனியார் விமானங்களுக்கும் பொருந்தும் என்று உர்சுலா தெரிவித்துள்ளார்.
அதேபோன்று “ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரஷ்யா டுடே மற்றும் ஸ்புட்நிக் போன்ற ஊடகங்கள் புடினின் போரை நியாயப்படுத்தி இனி பொய்களை பரப்ப முடியாது. அந்த பொய் தகவல்களை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
அத்துடன் “யுக்ரேனுக்கு எதிரான இந்த கொடூரமான போருக்கு பெலாரஸ் ஆதரவு வழங்குகிறது. பெலாரஸின் முக்கிய துறைகள் மற்றும் ஏற்றுமதி துறைகளை இலக்கு வைத்து தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.” என்றார்
0 Comments