நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நாளைய தினம் (01) மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
நாளைய தினம் மூன்று மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
இதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரையான கால எல்லைக்குள் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் கூறுகின்றார்.
இதேவேளை, தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரம் இரவு வேளைகளில் 30 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அதிக மின்சார கேள்வி நிலவும் பகுதிகளிலேயே இந்த 30 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எனவே, நாளை (01) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப் பகுதிக்குள் மின்சார பயன்பாட்டை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை காலமும் வலயங்களாக பிரிக்கப்பட்டு, மின்சார விநியோகம் தடை செய்யப்பட்ட நிலையில், நாளைய தினம் (01) நாடு முழுவதும் மின்சார தடையை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments