உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெலாரஸ் எல்லையில் தொடங்கியுள்ளதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உக்ரைன் அதிபரின் அலுவலகம், கலந்துரையாடலுக்கான உக்ரைனின் இலக்கு உடனடியான போர்நிறுத்தம் மற்றும் உக்ரைனில் இருந்து அனைத்து ரஷ்ய படைகளையும் திரும்பப் பெறுவது எனக் கூறியது.
அதேவேளை தனது நாட்டுக்கு உடனடி உறுப்புரிமை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எங்கள் இலக்கு அனைத்து ஐரோப்பியர்களுடனும் ஒன்றாக இருக்க வேண்டும், மிக முக்கியமாக, சமமான நிலையில் இருக்க வேண்டும். இது நியாயமானது என்று நான் நம்புகிறேன். அது சாத்தியம் என்று நான் நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.
மேலும் ஒரு காணொளி அறிக்கையில், ரஷ்ய வீரர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடுமாறு ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். ‘உங்கள் ஆயுதங்களை கைவிடுங்கள். இங்கிருந்து வெளியேறுங்கள். உங்கள் தளபதிகளை நம்பாதீர்கள். உங்கள் பிரசாரகரர்களை நம்பாதீர்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்’ என்று அவர் கூறினார்.
0 Comments