உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலால் 115,000க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் போலந்திற்குள் எல்லையைக் கடந்து சென்றுள்ளனர் என்று போலந்து அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த நான்கு மணி நேரத்தில் மட்டும் 15,000 பேர் நாட்டிற்குள் நுழைந்ததாக உள்துறை அமைச்சர் பாவெ செபர்னேக்கர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்களில் ஒருவர் அந்நாட்டு பொதுமக்களிடம் சிக்கியிருக்கிறார்.
இதையடுத்து அவரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நிலைதடுமாறி போனார் அவர், இது தொடர்பான வீடியோ தீயாக பரவி வருகிறது pic.twitter.com/bVINALc6Mw
0 comments: