தொடர்ந்தும் ஐந்தாவது நாளாக உக்ரைன் ரஷ்யாவிடையே யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் உக்ரைன் நகரிலுள்ள குடியிருப்பு பகுதிகளின் மீது ரஷ்யா சரமாரியாக குண்டு தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்கிய போதிலும், ரஷ்யா தொடர்ந்தும் போர் தொடுத்து வருகின்றது.
அதன்படி பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையிலும், உக்ரைனின் கார்கிவ் நகரம் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல் நடத்திக்கொண்டுள்ளது.
இந்த தாக்குதலில் பல மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், இத்தாக்குதலில் சிக்கி மக்கள் வீதியில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் சரமாரியாக ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படும் காட்சிகளும் ராக்கெட் ஒன்று சாலையில் சொருகி நிற்கும் காட்சியும், தாக்குதலில் முதியவர் ஒருவர் காலை இழந்து இரத்த வெள்ளத்தில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது
0 Comments