கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் உயிரிழப்பு!!

Sunday, February 28, 2021

 
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.


அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
READ MORE | comments

மாணவர்கள் மற்றும் பரீட்சை நடத்தும் உத்தியோகத்தர்களின் நலன்கருதி புகை விசுறும் பணிகள்!!


 (எச்.எம்.எம்.பர்ஸான்)

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நடத்தும் உத்தியோகத்தர்களின் சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசுறும் நடவடிக்கைகள் வாழைச்சேனை பிரதேச பாடசாலைகளில் சனிக்கிழமை (27) இடம்பெற்றன.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில், டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு, புகை விசுறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால், பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.நெளஷாத் அவர்களின் மேற்பார்வையில் புகை விசுறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

உலகிற்கு சிவப்பு எச்சரிக்கை! ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு

 


உலக நாடுகள் புவி வெப்பமடைதல் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்காது விட்டால் அடுத்த சில ஆண்டுகளில் உலக வெப்பமாதல் மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என தெரியவந்துள்ளது.

சர்வதேச அமைப்பினால் மேற்கொண்ட ஆய்விலிருந்து இது தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையை உலகம் எதிர்கொண்டால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள நாடுகள் இனிமேல் தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

புவி வெப்பமடைதல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை உலகிற்கு பொது சிவப்பு எச்சரிக்கை என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

கஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கல்லாறு சோதனை சாவடியில் கைது

 


பொத்துவில் இருந்து அனுராதபுரத்திற்கு மோட்டர்சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்ற சென்ற விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரை மட்டக்களப்பு கல்லாறு பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இன்று (27) அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 215 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான இன்று அதிகாலை களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லாறு பொலிஸ் வீதி சோதனைச்சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பொத்துவில் அறுகம்பை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த வீரர் விடுமுறையில் மோட்டர்சைக்கிளில் வீடு செல்லும் போது கஞ்சாவை கடத்திச் சென்ற நிலையில் பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 215 கிராம் கஞ்சாவையும் கடத்தலுக்கு பாவித்த மோட்டார் சைக்கிளையும் மீட்டதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
READ MORE | comments

காத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு

 காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.


கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதான,

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.


அதற்கமைய, மோதினார் ஒழுங்கை, கபூர் வீதி, சின்னதோனா வீதி, ரெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு தெரு என்பன நாளை அதிகாலை 5 மfணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதன் மூலம் காத்தான்குடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன.
READ MORE | comments

மட்டக்களப்பு செங்கலடி உதயசூரியன் உதவிக்குழுவினரால் டெங்கு நுளம்பு ஒழிப்பு சிரமதானப்பணி!!(செங்கலடி நிருபர் சுபா)
மட்டக்களப்பு செங்கலடி உதயசூரியன் உதவிக்குழுவினரால் டெங்கு நுளம்பு ஒழிப்பு சிரமதானப்பணி இன்று ஏறாவூர் எல்லை நகர் பகுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்குநோய்த்தாக்கத்தாலும் குறிப்பாக செங்கலடி பிரதேசத்திலும் குறித்த டெங்கு நோயின் அறிகுறிகள் காணப்படுவதாலும் செங்கலடி பொதுசுகாதார அலுவலகத்தினால் பரவலாக டெங்கு நோய் தொடர்பான பரிசோதனைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந் நிலையில் செங்கலடி பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா அவர்களின் கோரிக்கைக்கமைய செங்கலடி உதயசூரியன் குழுவினர் இன்று சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.

வீடுகள், கடைகள், கவணிப்பற்றுக்கிடக்கும் காணிகள், நீர்நிலைத் தேக்கங்கள் ஆகிய பல இடங்களில் குறித்த சிரமதானப்பணி இடம்பெற்றிருந்ததுடன், செங்கலடி பொது சுகாதார பரிசோதகர்களான எஸ்.தவேந்திரராஜா மற்றும் எம்.ஐ.மொகமட் பஸ்மி ஆகியோரும் தமது பூரண ஒத்துழைப்பிணையும் இச் சிரமதானப்பணிக்கு வழங்கியிருந்தனர்.

வீடுகளில் பிளாஸ்டிக்பொருட்களில் நீர்தேங்கியிருத்தல் மற்றும் கிணறுகளை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்டபாகவும் பொதுசுகாதார பரிசோதகர்களினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்தும் எதிர்வரும் நாட்களில் உதயசூரியன் குழுவினரால் மேலும் சில பிரதேசங்களில் சிரமதாணப்பணியிணை தொடரவுள்ளனர்.

மேலும் குறிப்பாக செங்கலடிப் பகுதியின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெங்குநோய் தாக்கத்தினால் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் மரணமடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தகதாகும்.
READ MORE | comments

இனவாதத்தை கையிலெடுத்து ஆட்சிக்கு வந்த அரசுக்கு நேற்றுவரை ஜனாஸா எரிப்பு தேவைப்பட்டது. இன்று முகம் மூடுதல் மற்றும் ,மதரஸாக்கள் தடை தேவைப்படலாம் -இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு!!

Friday, February 26, 2021

 


எப்.முபாரக்

இனவாதத்தை கையிலெடுத்து ஆட்சிக்கு வந்த அரசுக்கு நேற்றுவரை ஜனாஸா எரிப்பு தேவைப்பட்டது. இன்று முகம் மூடுதல் மற்றும் ,மதரஸாக்கள் தடை தேவைப்படலாம் -இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு.

இனவாதத்தை கையிலெடுத்து ஆட்சிக்கு வந்த அரசுக்கு நேற்றுவரை ஜனாஸா எரிப்பு தேவைப்பட்டது. இன்று முகம் மூடுதல் மற்றும் ,மதரஸாக்கள் தடை தேவைப்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் . கொழும்பில் இன்று(26) ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கொரோனாவால் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது என்பது உலகநாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உரிமையை இலங்கையில் உள்ள சிறுபான்மையினருக்கு வழங்காமல் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவாதம் தழுவிய நயவஞ்சக செயற்பாடு.

மறுக்கப்பட்ட உரிமையை பெற பலர் பல வழிகளில் போராடினர்.
நீதிமன்றம் சென்றமை ,கபன் துணி போராட்டம் ,துஆ பிராத்தனைகள் ,நோன்புநோற்றல் ,ஊடகங்கள் மூலமான போராட்டம் ,மனித உரிமை பேரவை என பல வழிகளிலும் இதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யார் என்ன கூறினாலும் இதற்கு அனுமதி வழங்கமாட்டேன் என இருந்த இந்த அரசை இந்த போராட்டங்களும் இம்ரான் கானின் வருகை, OIC யின் கண்டனம் உள்ளிட்ட விடயங்களும் அனுமதி வழங்க நிர்பந்தித்திருந்தது.

இதன்மூலம் இந்த அரசு எமக்கு புதிதாக எந்த சலுகைகளும் தரவில்லை. எமது அடிப்படை உரிமையை பல போராட்டங்களின் பின் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் 350 ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட பின்னர்தான் இந்த அனுமதி கிடைக்கப்பெற்றவுள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே இதற்கு யாரும் தனிப்பட்ட ரீதியில் உரிமைகோர முடியாது. முக்கியமாக இருபதுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு இதற்கான தார்மீக உரிமை கிடையாது.
 
அவர்கள் இருபதுக்கு வாக்களித்த மறுநாள் இதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இருபதுக்கு வாக்களித்த மறுநாள் அவர்களுக்கு சில அரச வேலைவாய்ப்பும் சில வீதிகளும் கிடைத்தன.ஆனால் ஜனாஸா அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை. நான் கூறிய எந்த போராட்ட்ங்களிலும் அவர்கள் பங்குகொள்ளவில்லை. எவ்வாறு உரிமை மட்டும் கோர முடியும்.

இந்த அரசு என்பது இனவாதத்தை கையிலெடுத்தே ஆட்சிக்கு வந்தது ஆட்சியை கொண்டு செல்லவும் அவர்களுக்கு இனவாதமே தேவைப்படுகிறது.
நேற்றுவரை ஜனாஸா எரிப்பு தேவைப்பட்டது. இன்று முகம் மூடுதல் தடை, மதரஸாக்கள் தடை என கூறி இதன் அடுத்த பாகத்தை ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே இவை அனைத்தையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

இந்த போராட்டத்தில் பங்குகொண்ட சிலருக்கு நான் நன்றி கூற வேண்டும். ஆரம்பம் முதல்இந்த போராடடத்தில் பங்குகொண்ட இந்நாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ,தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், சிறிதரன் ஐக்கிய மக்கள் சக்தியின் சகோதர பாராளுமன்ற உறுப்பினர்களும் சில பொதுஜன பெரமுன பாராளு உறுப்பினர்கள் கூட இதற்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
READ MORE | comments

செய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்!

 


மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிகுடி தெற்கு, பழைய மக்கள் வங்கி வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு காணியொன்றில் வீசப்பட்ட நிலையில் அழுகிய மனித தலையொன்று இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முன்னால் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், குறித்த வீட்டு உரிமையாளருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று இரவு 7.00 மனியளவில் இடம்பெற்றதனைத் தொடர்ந்தே குறித்த குடியிருப்பு பகுதியினுள் மனித தலையொன்று இரவு 9 மணியளவில் வீசப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து, ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுள்ளதுடன், களுவாஞ்சிகுடி பிரதேசத்தை சேர்ந்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட மனித தலை களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட 83 வயதுடைய பெண்னொருவருடைய தலையெனவும் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக களுவாஞ்சிகுடி பொலிஸாரால் குறித்த மனிதத் தலைமை மீட்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசாரும், மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பிரிவும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்
READ MORE | comments

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது

 


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதை ஆராய நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு இதற்கு அனுமதி அளித்துள்ளது.


இந்நிலையில், தற்போது அதற்கான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது 

READ MORE | comments

தேர்தல்களில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்

 


வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.


அனைத்து வாக்காளர்களும் சகல தேர்தல்களிலும் வாக்களிப்பது கட்டாயமென்றும், இதற்கான சட்டக் கொள்கைகள் உருவாக்கப்பட்ட வேண்டுமெனவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர், வாக்களிப்புகளில் ஈடுபடவில்லையென சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, இலங்கையின் தேர்தல் முறைமை குறித்துப் பரிந்துரைகளை முன்வைத்துள்ள ஆணைக்குழு, தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று அவசியம் எனவும் பரிந்துரைத்துள்ளது.

பலவீனமான அரசாங்கம் ஒன்று காணப்பட்டதன் காரணமாக, இலங்கையில் தாக்குதல்களை நடத்தலாம் என, சஹ்ரானின் குழு எண்ணியதாக சாட்சியங்கள் கிடைத்துள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், வேறொரு கட்சியுடன் இணைவதைத் தடுப்பது தொடர்பான ஏற்பாடுகளை, ஒன்றிணைக்கும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
READ MORE | comments

போர்க் குற்றச்சாட்டு! ஸ்ரீலங்காவின் இராணுவ அதிகாரிகள் 28பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஐ.நாவில் கிடுக்குப் பிடி

 


போர் குற்றங்களை எதிர்நோக்கும் ஸ்ரீலங்காவின் 28 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் பரிந்துரைத்துள்ளார்.

ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் இந்த விடயத்தினை தெரிவித்திருப்பதாகவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது அறிக்கை நிராகரித்துள்ளதால், சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமை ஆணையாளர் கடந்த 24 ஆம் திகதி மனித உரிமை பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கு அறிவித்துள்ளார்.

போர் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இராணுவ அதிகாரிகளில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோரும் அடங்குகின்றனர்.

இந்த சட்ட நடவடிக்கையின் கீழ் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு குறித்த இராணுவ அதிகாரிகள் சென்றால், அவர்களை கைது செய்ய முடியும் என்றும் மனித உரிமை ஆணையாளரின் இந்த தீர்மானத்திற்கு ஜேர்மனி ஏற்கனவே இணங்கியுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இந்த தீர்மானம் காரணமாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் கதவை மூடியது, விசாரணைகளுக்கு தடையேற்படுத்தியது எனவும் மனித உரிமை ஆணையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

READ MORE | comments

கல்முனையின் சில பகுதிகள் மீண்டும் கொரோனா அபாய வலயங்களாக அறிவிப்பு..!!

 


கல்முனை பிராந்தியத்திலுள்ள சில பிரதேசங்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்ட தொற்று அதிகரிப்பு வீதத்தைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, காரைதீவு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளே கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.

24ஆம் திகதி வரையான கடந்த இரு வார காலப்பகுதியில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேரும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இப்பிரதேசங்களில் மொத்தமாக முறையே 339 பேர், 97 பேர், 339 பேர், 88 பேர் என்ற அடிப்படையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

மேற்படி அபாய வலயங்களில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சுகாதார நடைடுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிமனைப் பிரிவிலுள்ள 13 சுகாதாரப் பிரிவுகளிலும் இதுவரை 1,378 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்கானப்பட்டுள்ளனர்.

இப்பிராந்தியத்தில் 27,579 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

READ MORE | comments

கிழக்கில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்..!!

 


மட்டக்களப்பு மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் க.அருணன் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து இம்முறை கல்விப் பொதுத்தராதரா சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்கள்,கிடைக்கபெற்ற அடையாள அட்டைகளில் ஏதும் திருத்தங்கள் காணப்படின் உடனடியாக 065-2229449 / fax :-0655-2229448 / 071-9592224 தொலைபேசி இலக்கங்களிற்கு அல்லது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களதினை தொடர்புகொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

சட்டத்துறை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு அறிவுறுத்தல்..!!

 


பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.


அத்துடன், பொலிஸ் நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை பார்வையிடுவதற்காக நேற்று பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற சட்டத்துறை மாணவர் ஒருவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டு ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டத்துறை மாணவர் பொலிஸாரினால் தாக்கப்பட்ட சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த விடயம் சட்டத்தினமடிப்படையில் வலுவாக கையாளப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கறிஞர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படுமென தாம் நம்புவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

அம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்! நூற்றுக்கணக்கானோர் கைது

Thursday, February 25, 2021

 


நுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதன்படி, பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட செபல்டன் தோட்டத்தின் PS பிரிவே இவ்வாறு இன்று (வியாழக்கிழமை) உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்கள் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

20 ரூபாய் புதிய நாணயம் வெளியீடு!

 


இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன்வினால் நேற்று  (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இது இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் ஆகும்.

நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 05 மில்லியன் நாணயங்கள் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி முதல் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
READ MORE | comments

யுத்தம் முடிந்து 12 ஆண்டுகளாகியும் தொடரும் அடக்குமுறை - இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் கடும் குற்றச்சாட்டு

 


இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் 46ஆவது மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் நேற்று புதன்கிழமை காணொளி வாயிலாக தனது அறிக்கை முடிவு குறித்தும் தீர்மான குறிப்பு பற்றியும் விளக்கினார் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மீஷெல் பச்லெட்.

“எனது அறிக்கை குறிப்பிடுவது போல, உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை தொடர்ந்திருக்கிறது,” என்று மீஷெல் பச்சலெட் கூறினார்.

2015ஆம் ஆண்டில், மனித உரிமை மீறல் நடக்காதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதிமொழி அளித்த பிறகும், தற்போதைய அரசு, அதன் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே, உண்மையை கண்டறியவும் குற்றங்களுக்கு பொறுப்புடைமையாக்கும் நடவடிக்கையிலும் தோல்வி அடைந்தது.

உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கை நிர்மூலம்

போரில் உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்வு நிர்மூலமாகியிருக்கிறது. அதுமட்டுமன்றி அமைப்பு முறை, கட்டமைப்பு, கொள்கைகள், பணியாளர்கள் போன்றவற்றில் முந்தைய காலம் போலவே விதிமீறல்கள் தொடருகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் முக்கியமான பணி, குறைகளுக்கு தீர்வு கண்டு முந்தைய விதிமீறல்கள் நடக்காதவாறு கவனிப்பதுதான்.

கடந்த ஆண்டு, முக்கிய பகுதிகளில் மிகக் கடுமையான வகையில் சங்கடத்தை தரக்கூடிய போக்கு தீவிரமாக இருப்பதை எமது அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முந்தைய ஆண்டுகளில் வளர்ந்து வந்த சிவில் சமூகமும் தன்னிச்சையான ஊடகமும் தற்போது வேகமாக சுருங்கி வருகின்றன. நீதித்துறை சுதந்திரம், இலங்கை மனித உரிமைகள் ஆணையம், தேசிய காவல் ஆணையம் ஆகியவை, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் பலவீனமாக்கப்பட்டுள்ளன.

முக்கியமான சிவில் நிர்வாக பணிகளில் வளர்ந்து வரும் இராணுவ தலையீடு, ஜனநாயக ஆளுகை மீதான ஆக்கிரமிப்பாக பார்க்கப்படுகிறது. பிரத்தியேக சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் காணப்படும் தொடர்ச்சியான தோல்வி அல்லது விதிமீறல்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காணாமல் இருப்பது, கொடூரமான குற்றங்கள் மற்றும் விதி மீறலில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளை பொறுப்புடைமைக்கு ஆளாக்காமல் விட்டுள்ளது அரசின் அலட்சியத்தை காட்டுகிறது.

தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர், அரசின் உயர் பொறுப்புகள் உள்ளிட்ட பணிகளில் சேராத வகையில், பிளவுபடுத்தக்கூடிய மற்றும் தவறான சொல்லாடல்களால் தவிர்க்கப்படுகிறார்கள்.

சிறுபான்மை சமூகங்கள் கவலை

கொவிட்-19 சடலங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தகனம் செய்யப்படுவது முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மை சமூகங்களுக்கு வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், நீண்ட கால அடிப்படையிலான அமைப்பு சார்ந்த பிரச்சனைகள் இலங்கையில் தொடருகிறது.

கடந்த கால வன்முறைகள், இப்போதும் தொடரலாம் என்ற அபாய செய்தியின் அறிகுறி தெளிவாக தென்படுகிறது. அடுத்து வந்த அரசுகள், உண்மையையும் பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன. உண்மையில், மனித உரிமைகள் வழக்குகளில் அரசாங்கம் நீதி நடைமுறைகளுக்கு தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொற்று காரணமாக டெங்கு நுளம்புகள் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்குடன் நேற்றைய தினம் (24) மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செலயகத்தின் உள்ளக வளாகம் மற்றும் வெளி வளாகங்களில் சிரமதான நிகழ்வு நடைபெற்றது.


இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலாபுண்ணியமூர்த்தி, பிரதம உள்ளக கணக்காய்வாளர் இந்திராமோகன், மாவட்ட பொறியியலாளர் ரீ.சுமன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
READ MORE | comments

காதலர்கள் தற்கொலை முயற்சி ! ஒருவர் உயிரிழந்தார் ! மற்றையவர் அவசர சிகிச்சைப்பரிவில்

 


ஷமி மண்டூர்)

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த தரம்-11 இல் கல்விகற்று வந்த கந்தசாமி-அனுசியா என்ற மாணவி; அலரி விதையினை உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது- குறித்த  மாணவி அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கடந்த ஒருவடருடங்களாக காதலித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை குறித்த இருவரும் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயிருந்ததாகவும்

பின்னர் இருவரும் ஜீவபுர பிரதேசத்தில் அலரி விதையினை உட்கொண்டிருந்த நிலையில் காணப்படுவதாகவும் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் இருவரையும் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மற்றையவர்  அவசர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைவாக சம்பவ  இடத்திற்குச் சென்ற ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலைமை! கவலையடைந்த கனடா

 


ஸ்ரீலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா கவலையடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் உரையாற்றியபோதே அவர் இலங்கை குறித்து மேற்கண்டவாறு கூறினார்.

மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீதான அச்சுறுத்தல்கள், நினைவுகூரும் உரிமையை மறுத்தல் மற்றும் சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு ஸ்ரீலங்காவில் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய மனித உரிமைகள் பேரவையின் அவசியத்தை, மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

மீனவர்களை காவுகொண்ட விபத்து : சோகத்தில் மூழ்கிய மாளிகைக்காடு !

 நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு கடற்கரை முழுவதிலும் வெள்ளை கொடிகளை பறக்கவிட்டு மீனவர்கள் துக்க தினத்தை இன்று அனுஷ்டித்தனர். ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு மீன் வியாபாரம் தொடர்பில் சென்றிருந்த இரு மீனவர்கள் மிகுதி மீன்களை நீர்கொழும்பு பிரதேசத்தை நோக்கி விற்பனைக்காக கொண்டு சென்ற போது காலிப்பிரதேசத்தில் வைத்து மீன்களை ஏற்றிச்சென்ற குளிரூட்டி வாகனமும் சீமெந்து பக்கட்டுக்களை ஏற்றிவந்த லொறியும் நேற்று மதியம் மோதியதில் விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி வாகன உரிமையாளர் சம்பவ இடத்திலையே காலமானதாகவும், வாகன சாரதி பலத்த காயங்களுடன் காலி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் குடும்பத்தினர் சம்பவம் தொடர்பில் தெரிவித்தனர். மேலும் மரணித்தவரின் ஜனாஸாவை ஊருக்கு எடுத்துவந்து நல்லடக்கம் செய்யும் நடவடிக்கையில் குடும்பத்தினரும், மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோரவிபத்தினால் மாளிகைக்காடு பிரதேச மக்களிடையே சோகம் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் மீனவர்களும் தமது வியாபார நிலையங்களிலும், கடற்கரை பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகளை பறக்கவிட்டு துக்கம் அனுஷ்டித்து வருகிறார்கள்.
READ MORE | comments

நாடாளுமன்றில் ஆளும்- எதிர்த்தரப்பிற்கிடையில் கடும் அமளி துமளி- சபாநாயகர் எடுத்த நடவடிக்கை

Wednesday, February 24, 2021

 


வெளிநாட்டிலுள்ள ஸ்ரீலங்கா பிரஜைகள் குறித்த பிரச்சினைகளை சபையில் முன்வைக்க முயற்சித்த எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டிருந்ததோடு சபை அமர்வுகளையும் சபாநாயகர் நாளை வரை ஒத்திவைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் சபையில் எழுந்த எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, வெளிநாடுகளிலுள்ள ஸ்ரீலங்கா நாட்டவர்கள் பற்றிய பிரச்சினையொன்றை முன்வைக்க தொடங்கினார்.

வெளிநாட்டில் பணிபுரியும் ஸ்ரீலங்கா பிரஜைகளை இலவசமாக நாட்டிற்குள் வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.

எனினும் நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி எதிர்க்கட்சி தலைவர் செயற்படுவதாக ஆளும் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் போதே சபையில் அமளி ஏற்பட்டு நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்னறில் சஜித் கருத்துத் தெரிவிக்கையில்,

நாற்பதாயிராத்திற்கும் அதிகமான ஸ்ரீலங்கா நாட்டுத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் அனாதரவாகியுள்ளனர். அவர்களை நாட்டிற்கு மீண்டும் வரவழைப்பதில் அதிகளவில் பணம் அறவிடப்படுகின்றது. விமானச் சீட்டுக்கும் தனிமைப்படுத்துவதாக கூறி ஹோட்டல்களுக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குமென அவர்களிடமிருந்தே அறவிடப்படுகின்றது.

இப்போது வரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தில் 14 பில்லியன் ரூபா சேமிப்பில் உள்ளது. இந்த பணத்தை செலவு செய்து எமது மக்களை இலவசமாக நாட்டிற்கு அழைத்துவர ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் எமது மக்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை செலவு செய்து நாட்டிற்கு வரவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட இந்த ஒழுங்குப் பிரச்சினை காரணமாக ஆளும் தரப்பிற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

குறிப்பாக வெளிநாட்டிலுள்ள ஸ்ரீலங்கா பிரஜைகளை வரவழைப்பது குறித்து பதிலளிக்காமல், மாறாக சஜித் பிரேமதாஸவினால் சுட்டிக்காட்டப்பட்ட 14 பில்லியன் ரூபா இருப்புப் பணம் குறித்தே ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

எதிர்க்கட்சி தலைவர் எந்தவித நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடங்காத ஒரு விடயம் குறித்து சபையில் பேசிக்கொண்டிருப்பதாகவும், சபை விதிமுறைகளை மீறி செயற்பட்டு வருகின்றார் எனவும் தெரிவித்து சஜித் பிரேமதாஸவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் எதிர்க்கட்சி தலைவரும் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.

READ MORE | comments

மட்டக்களப்பு மாநகர சபையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி- பலர் தனிமைப்படுத்தலில்!!

 


மட்டக்களப்பு மாநகரசபையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மாநகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் 93பேருக்கு நேற்று பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் மேலும் நான்கு உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபையில் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்டுவந்த மக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய சேவைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தற்போது வரையில் கொரோனா தொற்றாளர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணிய 30க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு 24 வயது இளைஞன் பலி..!!

 


கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலுடன் இளைஞர் ஒருவர் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று அதிகாலை மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த விக்கினேஸ்வரராஜா ததூஷன் 24 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கருவப்பங்கேணி பகுதியில் உறவினர் ஒருவரின் மரணவீட்டிற்கு சென்றுள்ள நிலையில் அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயிலுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகினர்.
READ MORE | comments

சாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவித்தல்..!!

 


இதுவரையில் அனுமதிப்பத்திரம் கிடைக்காது சாதாரணதர பரீட்சை எழுதும் விண்ணப்பதாரிகள் www.doenets.lk என்ற இணையத்தின் ஊடாக தங்களது அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

நானே கொன்றேன் என்று பகிரங்கமாக கூறிய கோட்டாபய! மிகப் பெரும் சாட்சியாக மாறிய தகவல்

 


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய கூறியதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம். அதை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவரிடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோருக்கிடையில் இன்று காலை 7.00 மணியளவில் தனியார் விடுதி ஒன்றில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே மேற்குறித்த விடயத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸிடம் வலியுறுத்தினார்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் குறிப்பிடுகையில்,

ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் மற்றும் அந்த தீர்மானத்திற்கு இருக்கின்ற சவால்கள் அந்த சவால்களை எதிர்கொள்வதற்காக ஒருங்கிணைந்த நாடுகள் எவ்வாறான விடயங்களை எதிர்கொள்கின்றன, அந்த சவால்களை அவர்கள் எவ்வாறு சாமாளிக்க போகிறார்கள், அதற்கு தமிழர் தரப்பான எங்களுடைய பங்களிப்பு என்ன? மற்றும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் இன்று உள்ள களச் சூழல்களில் தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் இந்த அரசாங்கம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நடந்து முடிந்த பின்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், பொதுமக்கள் போன்றோரை விசாரணை என்ற போர்வையில் அச்சுறுத்தி வருவது தொடர்பிலும் நாங்கள் அவருடன் கலந்துரையாடியுள்ளோம்.

அத்துடன் அண்மையில் அம்பாறையில் உகுண பிரதேசத்தில் பிரபாகரனை நான் கொன்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம் -அதை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் உலகத் தமிழர் பேரவை மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதி மையம் நியூயோர்க் பல்கலைக்கழகம் அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் கனேடிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலில் கலந்து கொண்ட, போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் - ஸ்ரீலங்காவில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சந்தரப்பத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான விடயங்களை சாட்சியமாக வைத்து நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸிடம் சுட்டிக்காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டார்.


READ MORE | comments

தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

Tuesday, February 23, 2021

 


ஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனை அடுத்து, குறித்த ஆசிரியையிடம் கல்வி பயின்ற 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த 16 மாணவர்களுக்கும், PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொகவந்தலைவை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் 6 பேர் மற்றும் பெற்றோர்கள் 10 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட 3 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் உள்ளிட்ட 300 பேருக்கு கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம், இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, தொற்றுக்குள்ளான 16 பேரையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொகவந்தலைவை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.
READ MORE | comments

வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி

 


எம்பிலிபிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்கு முன்பே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் எம்பிலிபிட்டி நியூ டவுனில் உள்ள வீட்டில் இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குட்டிகல தோரகல, பதலங்கல பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய நபருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக குறித்த நபர் 20 ஆம் திகதி எம்பிலிபிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

22 ஆம் திகதி அவர் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதையடுத்து முடிவு வருவதற்கு முன் அவர் வைத்தியசாலையில் இருந்து சென்றுள்ளார்.

அவரது பி.சி.ஆர் அறிக்கை இன்று பிற்பகல் பெறப்பட்டது. அதில் அவருக்கு கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது.

இவர் தற்போது கோவிட் சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட உள்ளார். அவர் இருந்த வீட்டின் குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

READ MORE | comments

இலங்கைக்கு மீண்டும் வாகன இறக்குமதி?

 


இலங்கைக்கு இவ்வாண்டு இறுதியில் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியது தற்காலிகமான ஒரு நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை வாகன இறக்குமதியாளர்களுக்கு சலுகையொன்றை வழங்குவதன் பொருட்டு ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர்களினால் துறைமுகங்களுக்கு வரும் வாகனங்களை பல சந்தர்ப்பங்களில் விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடை நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

எந்தவொரு விட்டுக்கொடுப்புக்களுக்கும் தயார் இல்லை! கோட்டாபயவை சந்திக்கத் தயாராகும் கருணா

 


கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் விட்டுகொடுக்க மாட்டோம் என மஹிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு அம்பாறை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நேற்று அம்பாறை மாவட்டத்திற்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர், இரவு கல்முனை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம். அந்த வகையில் திருக்கோவில் பாலக்குடா பகுதியில் நீண்டகாலமாக பேருந்து சேவை இல்லாமல் இருந்தது. தற்போது பேருந்து ஒன்றினை வழங்கி அச்சேவையை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

600 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு பனம் பொருள் உற்பத்தி தொடர்பில் ஒரு வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். குறிப்பாக தம்பட்டை திருக்கோவில் தாண்டியடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள நிலையங்களைச் சென்று பார்வையிட்டோம்.

அங்கு சிறந்த முறையில் இவ்வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பனம் உற்பத்தி பொருட்களை பெண்கள் மிக சிறப்பாக உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு குடும்ப பெண்களுக்கும் மாதாந்தம் ரூபா 3000 நிதி வழங்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.

இது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த திட்டமாக ஆரம்பித்து வைத்துள்ளோம். வெளிநாடுகளில் இந்தப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தற்போது ஏற்படுத்தியுள்ளோம். இதனூடாக கணவனை இழந்த பெண்கள் கூடுதலான பலன்களை அடைவார்கள்.

இது தவிர தலைநகரில் இரு வாரங்களாக, அனைத்து அமைச்சுக்களுக்கும் சென்று அவர்களை சந்தித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் எடுத்து கூறி பல வேலைத்திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம். அதில் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமாக அமைச்சர் சமல் ராஜபக்சவினை சந்தித்துள்ளோம்.

இச்சந்திப்பு சிறந்த சந்திப்பாக அமைந்திருந்தது. இச்சந்திப்பில் பிரதேச செயலக விடயம் தொடர்பான திட்டங்கள் அனைத்தும் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவருடம் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அதற்கான செயலணியையும் உடனடியாக ஏற்படுத்தி தருவதாக கூறி இருக்கின்றார். ஆகவே இங்கு ஒன்றினை கூற விரும்புகின்றோம். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தை எந்தவிதத்திலும் விட்டுகொடுக்க மாட்டோம். தொடர்ந்தும் இத்திட்டத்தில் எமது முயற்சி தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

மிக விரைவில் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளேன். அந்த சந்திப்பில் கூட கல்முனை விடயத்தை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கான ஆவணங்களை தயார்படுத்தி வைத்துள்ளேன். கிட்டங்கி பாலம் அமைப்பது தொடர்பாக வீதி நெடுஞ்சாலை அமைச்சு செயலாளரை சந்தித்து திட்டவரைவு கையளிக்கப்பட்டுள்ளது. விரைவாக இப்பால நிர்மாணத்திற்கான தொழிநுட்ப ஆய்வுக்குழுவினை அனுப்புவதாக அவர் கூறியுள்ளார்.

இது தவிர குடிநீர் பிரச்சினை வேலைவாய்ப்பு தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக மாதம் ஒன்றிற்கு இரு குழுக்களை அனுப்பி வைக்குமாறு என்னிடம் பிரதமர் கேட்டிருக்கின்றார்.

அதனடிப்படையில் கிராம தலைவர்கள் புத்திஜீவிகளை அங்கு அனுப்பவதற்கு திட்டமிட்டுள்ளோம். பிரதமரிடம் எமது பிரதேச குறைபாடுகள் குறித்து நேரடியாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இது போன்று பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் படித்த வேலையற்ற இளைஞர் யுவதிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து சகல அமைச்சுக்களையும் சந்தித்துள்ளேன். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இதற்கான வாய்ப்புக்கள் வருகின்றன. கட்டங் கட்டமாக இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

அது மாத்திரமன்றி இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தோம். இச்சந்திப்பில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கவுள்ளதாக குறிப்பிட்டனர். இதனூடாக காரைதீவு திருக்கோவில் வைத்தியசாலையை நவீன தொழிநுட்பத்துடன் புனரமைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் 300 மில்லியன் நிதி வரவுள்ளது.

READ MORE | comments

திருகோணமலையில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியது!!

 


திருகோணமலையின் கிண்ணியா அடாப்பனாவெட்டை நாகூரான் பகுதியை சேர்ந்த 72 வயது நபரே இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நபர் கிண்ணியா தள வைத்தியசாலையில் நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் மற்றும் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணையின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!!

 


2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஜனாதிபதி செயலகத்தினால் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வாவின் தலைமையில் ஐவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

2019 செம்டெம்பர் மாதம் 31 ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவின் சாட்சிய விசாரணை ஆரம்பிக்கப்பட்ட அன்று முதல் 214 தடவைகள் கூடிய ஆணைக்குழு, 457 சாட்சியாளர்களிடம் 640 சந்தர்ப்பங்களில் விசாரணைகளை முன்னெடுத்தது.

அத்துடன், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் சாட்சியங்களாக 2,230 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |